சொற்களால் நிறமழிக்கும் உரையாடல்

றஞ்சி (சுவிஸ்)

discussion clipart-2
  • “மறுகாவில்” வெளிவந்த உரையாடலுக்கு எனது சிறு எதிர்வினை
  • வாழ்க்கை, இலக்கியம், தத்துவம் அரசியல் என்ற எல்லா கதையாடல்களுமே இன்று  குழுக்களின்  களமாகவும் அதற்கான மையங்களை சிதைப்பதுமான நிகழ்வுகளாகவும் மாறிவிட்டன. எழுத்தும் எழுத்தை எழுதும் எழுத்தாளர்களும் தாங்கள்  ஓரு எழுத்தாளர்கள் என்கிற பிம்பத்தை உருவாக்கி கொண்டிருக்கும் இவ்வேளையில் இவர்கள் உலகில் பெரிய எழுத்தாளர்கள் என்ற பிரமையில் அவர்களை அறியாமலே அதிகார நுண் உத்திகளைக் கடத்தி நவீன எழுத்து என்று வெளிப்படுத்திக் கிழித்துப் போடுகிறார்கள்

ஒரு எழுத்தாளரோ அல்லது கவிஞரோ சமூகப் பொறுப்புடனும் அறிவடக்கத்துடனும் தமது எழுத்துக்களை பதிவு செய்து கொள்ளும் போது தான் அவ் எழுத்துக்கள் ஓங்கி ஒலிக்க முடியும். ஆனால் தங்களது எழுத்துக்கள் நிறைவுடையதாகவும் மற்றவர்களின் கருத்தை உள்வாங்கிக் கொள்ள அவை இடம்விட்டுவைக்காதவையாகவும் மூடுண்ட நிலையை ஏற்படுத்துவது பிரயோசனமற்றது. இது ஒருவகை அறிவதியாரமும்கூட.

அண்மையில் மட்டக்களப்பில் இருந்து வெளிவந்த  “மறுகா” சஞ்சிகையில் நான்கு பெண்களின் உரையாடல்கள் வெளிவந்துள்ளன.  அவ் உரையாடலில் விஜயலக்சுமி, சித்திரலேகா, உருத்திரா, மற்றும் அனார் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். இவ் உரையாடல் சம்பந்தமாக குட்டிரேவதி ஒரு விமர்சனம் எழுதியிருந்தார். ’’நாம் வைத்திருக்கின்ற சொற்கள் யாருடையவை” என்று. இவ் உரையாடலில் சித்திரலேகாவிடம் மலர்ச் செல்வன் ஒரு கேள்வியை எழுப்புகிறார். அதாவது சரிநிகரில் கோணேஸ்வரிகள் என்னும் கவிதை கலாவினால் எழுதப்பட்ட போது அக்கவிதையில் வெளிவந்த சொற்கள் தொடர்பாக அதிகமான எதிர்வினைகளை வெளியிட்டவர்கள் பெண்களே! என்று. இக் கவிதைக்கு எதிர்கருத்து கூறியவர்களில் சித்திரலேகாவும் ஒருவர்.

தான் எதிர்க்கருத்து கூறவேண்டிய காரணம் என்னவென்றால் கோணேஸ்வரி கவிதையில் இருந்த சொற்கள் அல்ல. “எமது சிங்களச் சகோதரிகளே உங்கள் யோனிகளை திறந்து வையுங்கள்“ என்னும் வரிகளிலிருந்த இனவாதத் தன்மை மிகுந்த பெண்களில் பிரிவினையைத் தூண்டும் விளிப்பே என்று பதிலளித்திருந்தார். உடன்பாடு உடன்பாடின்மை என்ற நிலைக்குள் அவரது கருத்தை ஒருவர் எதிர்கொள்ளலாம். அதை அவர் சொல்ல வந்த வழிமுறையைப் பாருங்கள்.  “…அது மட்டுமல்லாமல் சரிநிகரில் சிறிய சிறிய வேலைகளை செய்து கொண்டிருந்த …கலா எழுதியது தான் பிரச்சினை…“ என்கிறார் சித்திரலேகா. எனவேதான்  கலாவின் கவிதை தொடர்பான பிரச்சினை என்பது மொழி தொடர்பான பிரச்சினை இல்லை என்று கூறுகிறார்.  ஆக இங்கு “சிறிய வேலையைச் செய்து கொண்டிருந்த“ கலா,  கோணேஸ்வரிகள் கவிதையை எழுதியது தான் பிரச்சினையே ஒழிய அக் கவிதையில் உள்ள சொற்களோ மொழியோ பிரச்சினையில்லை. இன்னொருவகையில் சொல்வதானால் தகைமையைக் கோரும் மேட்டுக்குடி வர்க்க சிந்தனை முறையினை அவரது கூற்று வெளிப்படுத்துகிறது எனலாம். இந்த தட்டிக்கழிக்கும் மனோபாவத்துடன் கோணேஸ்வரிகள் கவிதையை அணுகும் சித்திரலேகா அவர்கள் இக் கவிதையை கடந்து வரமுடியாமல், இன்று வரை சிலாகிப்பது விருப்புவெறுப்பு சார்ந்ததா அல்லது அவரது „பெண்நிலை சிந்தனைமுறையில்“ அக்கவிதை ஏற்படுத்திய சகிப்பின்மையிலா தெரியவில்லை. 
 
அதே உரையாடலில்  அனார் இன்னொரு தாக்குதலைத் தொடுக்கிறார். அதாவது தன்னுடைய தொகுப்புக்கள் வெளிவந்த போது எல்லா வகையிலுமான ஊடகங்களிலும் விமர்சனங்களைச் செய்தது ஆண்கள் மட்டுமே. ஒரு பெண்ணும் எந்தவொரு ஊடகத்திலும் ஒரு விமர்சனத்தைதானும் செய்யவில்லை ஒன்றிரண்டு பெண்களின் நேரடி உரையாடலைத் தவிர  எனக் கூறுகிறார் ( மறுகா பக்கம் 15 இல்) அனார்.

இலங்கையில்  கவிதை எழுதத் தொடங்கிய நாட்களில், புலம்பெயர் நாடுகளில்  முதன் முதலில் எக்ஸிலில் இவரின் கவிதை வெளிவந்தது. அதன் பின் விஜியினால்  அறிமுகப்படுத்தப்பட்டு பெண்கள் சந்திப்பு மலர், (ஊடறு 2000) ஆகியவற்றில் வெளிவந்தது. அனாரின் முதலாவது கவிதைத் தொகுதியான  ஓவியம் வரையாத தூரிகைக்கு ஆழியாள் முகவுரை எழுதியதும் அல்லாமல் அப் புத்தகம் வெளிவந்தவுடன் அதை விநியோகித்து, புலம்பெயர் நாடுகளில் பரவ வழிசெய்தார் லண்டனில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பிலும் அனாரின்  தொகுப்பு அறிமுகம் செய்யப்பட்டது.  அத்துடன்  2005ம் ஆண்டு வெளிவந்த பெண்கள் சந்திப்பு மலரில்  அனாரின் கவிதைத் தொகுப்பான ஓவியம் வரையாத தூரிகைக்கான சுல்பிகாவின் விமர்சனம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் என்னால் எழுதப்பட்ட சிறு விமர்சனம் ஊடறு, வார்ப்பு, பதிவுகள் கீற்று ஆகிய இணையத்தளங்களிலும் வெளிவந்திருந்தன. அதையும் தாண்டி அனாருக்கு சாகித்திய விருது கிடைத்த போது அதை ஊடறுவில் பிரசுரித்து வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. இவற்றையெல்லாம் அனார் இருட்டிப்புச் செய்து ஆண்கள் மட்டுமே விமர்சனம் செய்தார்கள். எந்த ஒரு ஊடகத்திலும் பெண்களால் விமர்சனம் செய்யப்படவில்லை என்பது அப்பட்டமான பொய்.

அனாரின் கவிதைகளோ தொகுப்புகளோ பெண்களால் கண்டுகொள்ளப்படாமல் போகவில்லை என்பதையே இவை காட்டுகின்றன. அத்தோடு  ஊடறு இணையத்தளத்தின் நூலகத்தினுள் (மின்னூல் வடிவில் கிடைத்த) கவிதைத் தொகுப்பான ஓவியம் வரையாத தூரிகை சேர்க்கப்பட்டுள்ளதோடு, பெண்கவிஞர்களின் கவிதைகள் அவரவர் பெயர்களுக்குக் கீழ் தொகுக்கப்பட்டுள்ள பகுதிக்குள் அனாரின் (ஊடறுவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட) கவிதைகள் எல்லாம் சேகரிக்கப்பட்டுமுள்ளன.

இவைகளையெல்லாம் கவனம்கொள்ள மறுக்கும் அனாரின் உரையாடலும் விருப்பு வெறுப்புகள் சார்ந்ததாக  அமைகிறதா என எண்ணத் தோன்றுகிறது. குறைந்தபட்சம் மற்றைய பெண் எழுத்தாளர்களின் எழுத்துகள் மீது அனார் எந்தளவு தனது கவனத்தை திருப்பியிருந்தார் அல்லது விமர்சனங்களை முன்வைத்தார் என்ற சுய கேள்வியை அவர் தன்னிடமே  கேட்டுப் பார்த்திருந்தால் தனது கருத்தில் ஒரு சமநிலையைப் பேண உதவியிருக்கும். அதை அவர் செய்யவில்லை.

தம்மைத் தாமே முன்னிலைப்படுத்தும் போக்குகள் சித்திரலேகா அனார் இருவரிடமும் இருப்பதை இந்த உரையாடல் தெரியப்படுத்துகிறது.

 

 

5 Comments on “சொற்களால் நிறமழிக்கும் உரையாடல்”

  1. Sitraleka is a hypocrite. She doesn’t like tamil people. So she always hate Tamil female writers like Kala(except Sivaramani because she is already killed).

    Anar proves herself a hypocrite too.
    This is how some female writers forget how other people helped them.

    Thanks Ranji madam for showing to the world.

    Shame on you Sitraleka & Anar.

  2. ஊடறு பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியது அறிமுகப்படுத்தி வருகின்றது. அனாரின் கவிதைகளை நான் முதல் முதலில் ஊடறுவில் தான் வாசித்தேன் அனார் என்ற பெயரைக் கூட. நானும் மறுகா வாசித்தேன் அனார் இப்படி சொல்ல வாய் கூசி இருக்க வேண்டும் இப்போ சேரன் காலச்சுவடு அனாரின் கவிதைகளை விலைக்கு வாங்கி விட்டார்களா?மளிகை கடையில் கவிதைகளை வாங்குவது போல் தான் காலச்சுவடு கவிஞர்களை வாங்குகிறது. அதற்கு ஈழத்து கவிஞர்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். காலச்சுவடு போன்ற பார்ப்னீயப் பத்திரிகைகள் தான் அனாருக்கு பெரிய பதிப்பகமாம் …???

  3. ஊடறுவின் பணி மெச்சத்தக்கது. பாராட்டும்படியாக தளத்தினுடைய ஆக்கங்கள் கனதியாக அமைந்திருக்கின்றன.

    மறுகாவில் வெளிவந்த சொற்களால் நிறமழிக்கும் உரையாடல் குறித்த எதிர்வினை பிடித்திருக்கிறது. அதிலும்

    ஒரு எழுத்தாளரோ அல்லது கவிஞரோ சமூகப் பொறுப்புடனும் அறிவடக்கத்துடனும் தமது எழுத்துக்களை பதிவு செய்து கொள்ளும் போது தான் அவ் எழுத்துக்கள் ஓங்கி ஒலிக்க முடியும். ஆனால் தங்களது எழுத்துக்கள் நிறைவுடையதாகவும் மற்றவர்களின் கருத்தை உள்வாங்கிக் கொள்ள அவை இடம்விட்டுவைக்காதவையாகவும் மூடுண்ட நிலையை ஏற்படுத்துவது பிரயோசனமற்றது. இது ஒருவகை அறிவதியாரமும்கூட.

    என்ற விடயம் மிகவும் கவர்ந்திருக்கிறது.

  4. சேரன் காலச்சுவடு அனாரின் கவிதைகளை விலைக்கு வாங்கி விட்டார்களா? என்ற வார்த்தைகள் பொறுப்பற்ற பேச்சு. இழிவான குரல் அதிலிருக்கிறது. இதை எழுதிய பப்பாசி என்பவர் கண்டிக்கப்படவேண்டியவர். முட்டாள்தனமான அறிவிப்பு அது. ஆனால் காலச்சுவடு மிக மட்டரகமான பத்திரிகை என்பது அனாருக்கு இதுவரை புரியாத ஒரு இலக்கிய அரசியல் கருத்தாக்கமா? அப்படியானால் அனாரின் கவிதைச் செய்பாட்டின் அரசியல் என்ன என்று அவரிடம் கேட்கதோண்றுகிறது. காலச்சுவடு எந்தவகையான பெண் அரசியலையும் எழுத்துக்களையும் ஆதரித்துச் செயற்படுகிறது போன்ற கேள்விகள் நமக்கு முக்கியமாகப்படுகிறது. ஆம் ரஞ்சியின் விமர்சனம் மிகமுக்கியமான கவனஈர்ப்பு. இதற்கான பதிலை எழுதும் பொறுப்பு அனாருக்கு உண்டு. தடடிக்கழிக்கும் படியானதல்ல.

  5. பெண்ணிய வாதிகளாக பல ஆண்களே இருக்கும்பொது ஆணாதிக்க வாதிகளாக சில பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு அனாரை நல்ல உதாரணமாகக் கொள்ளலாம் போலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *