ஊடறு ஆர். குழு
பல பரிமாணங்களிலிருந்தும் வெளிப்படும் பெண்களின் கருத்துக்கள், பெண்நிலை எழுத்துக்கள் என பெண்கள் எழுதுகின்ற எழுத்துக்களை வெளிக்கொணருவதே ஊடறுவின் நோக்கமாகும். முடிந்தவரை ஒரு தளத்தைப் பேண அது முயற்சித்திருக்கிறது. பெண்படைப்பாளிகளின் படைப்புகளோடு அது தொடர்ந்தும் வெளிவரும். |
2012 இல் ஏழாவது ஆண்டில் நுழைகிறது ஊடறு. ஊடறுவின் நோக்கத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பல நாடுகளிலிருந்தும் பல பெண் எழுத்தாளர்கள் ஊடறுவில் எழுதி வருகின்றார்கள் அது எமக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகின்றது. பல பரிமாணங்களிலிருந்தும் வெளிப்படும் பெண்களின் கருத்துக்கள், பெண்நிலை எழுத்துக்கள் என பெண்கள் எழுதுகின்ற எழுத்துக்களை வெளிக்கொணருவதே ஊடறுவின் நோக்கமாகும். முடிந்தவரை ஒரு தளத்தைப் பேண அது முயற்சித்திருக்கிறது. பெண்படைப்பாளிகளின் படைப்புகளோடு அது தொடர்ந்தும் வெளிவரும்.
இதற்கு அர்த்தம் ஆண்களை ஒதுக்குவது அல்லது பெண்நிலை பற்றி, பெண்ணியம் பற்றி பெண்கள் மட்டும்தான் பேசவேண்டும் என்றவாறான எண்ணப்பாடுகள் எதுவுமில்லை. பெண்களின் படைப்புத் திறனை ஊக்குவிப்பது என்பதே ஊடறுவின் நோக்கம். இதற்குள் அது செயற்பட முனைகிறது. அவ்வளவுதான்!
புதிய அறிமுகமாக ஈழத்து பெண் எழுத்தாளர்கள் பற்றியும் அவர்கள் பற்றிய அறிமுக குறிப்புக்களை எதிர் வரும் வாரங்களில் ஊடறுவில் பிரசுரிக்க உள்ளோம் தோழிகள் படைப்பாளிகள் அனைவரும் எம்முடன் பகிர்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் ….
ஊடறுவில் கவிதைகளை எழுதும் கவிஞைகளின் கவிதைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. உங்கள கவிதைகள் ஊடறுவில் பிரசுரிக்கப்பட்டு அவை ஒருங்கிணைக்கப்படவில்லை என்றால் அல்லது தவறுகள் இருப்பின் அவற்றை சுட்டிக்காட்டும் படி கவிஞைகளைக் கேட்டுக்கொள்கின்றோம். இந்த லிங்கில் 67 கவிஞைகளின் கவிதைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன
http://udaru.blogdrive.com/archive/569.html
ஊடறுவின் வெளியீடுகளான என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை, மை,இசைபிழியப்பட்ட வீணை ஆகிய தொகுப்புக்களையும் ஏனைய பெண் படைப்பாளிகளின் சில தொகுப்புக்களையும் ஊடறுவின் நூல்கள் பகுதியில் ஒருங்கிணைத்துள்ளோம்.
http://www.oodaru.com/?page_id=184
சென்ற வருடம் நாம் வெளியிட்ட பெண் போராளிகளின் பெயரிடாத நட்சத்திரங்கள் -அட்டைப்படத்தை வரைந்து தந்த நந்தா கந்தசாமி(ஜீவன்) கனடா -இத் தொகுப்பை அறிமுக, விமர்சனக் கூட்டங்களை நடத்தியது மட்டுமன்றி அவ் நிகழ்வுகள் வெளிவரவும் அவற்றை பரவலாக்கி விற்பனை செய்து விமர்சனம் செய்து எமக்கு உற்சாகமும் ஊக்கமும் தந்த அனைத்து நண்பர்களுக்கும் இத் தொகுப்பு பற்றிய உரையாடல்களை ஒளிபரப்பிய
இணையங்கள்
குளோபல் தமிழ் இணைய வானொலி நிலாச்சோறு , தீபம் ரிவி, லண்டன், ஏரிபிசி ,இன்பத் தமிழ் ஒலி வானொலி அவுஸ்திரேலியா
இணையத்தளங்களான
குளோபல் தமிழ் நியூஸ்,பதிவுகள், தூ புதியஜனநாயக முன்னணி, கீற்று, அலைகள், அந்திமாலை மற்றும்
புதியமாதவி மும்பை இந்தியா
திலகபாமா இந்தியா,
காலம் செல்வம்,கனடா, நண்பர்கள்,
என் செல்வராஜா நூலகவியலாளர் லண்டன்,
சுவிஸ் நண்பர்கள்
கரன்,டென்மார்க நண்பர்கள்;,
ரகு,சௌந்தரி,பாமதி அவரது கணவர் மற்றும் சோனா அவுஸ்திரேலியா,
மற்றும் மெல்போன் நண்பர்களுடன்
இத் தொகுப்புக்கு விமர்சனங்களை எழுதிய எழுதிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்துடன் பல சிரமங்களுக்கு மத்தியில் இலங்கையிலிருந்து அவ்வப்போது செய்திகளை ஊடறுவுக்கு அனுப்பித் தரும் சந்தியா,அன்னபூரணி, மற்றும் யசோதா, இந்தியா ஆகியோருக்கும் எமது நன்றிகள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
wow 7th year vallathukkal