பாலியல் தொழில் மூலம் பாதிப்புறும் பெண்களின் சோகங்களுக்கு எல்லைகளில்லை

 நன்றி-http://www.4tamilmedia.com

போதை வஸ்து கும்பல், பெண்களை வியாபாரம் செய்யும் மாஃபியா கும்பல் மற்றும் பிராத்தல் கும்பல்களிடம் சிக்கி வருடத்திற்கு  4 மில்லியன் பேர் சீரழிகிறார்கள். மறுபுறம் அதே ஒரு வருட காலப்பகுதியில் 5 தொடக்கம் 7 மில்லியன் டாலர்கள் வருவாயை இத்தொழில் ஈட்டிக்கொடுக்கிறது என்கிறது ஐ.நா புள்ளிவிபரம்.

பாலியற் தொழிலின் ஆபத்தான மற்றுமொரு முகம்

‘அவசர உதவி சேவை கண்காணிப்பிலிருக்கும் ஒரு இளம் தாய் நான்.  300 சுவிஸ் பிராங்கிலும் குறைவாக கிடைக்கும் வருவாயில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனது தேவைகளுக்காக்கவும், பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் பாலியல் தொழிலில் இறங்கினேன்.  10 வருடமாக சுவிற்சர்லாந்தில் இருக்கிறேன். வேலை செய்வதற்கு எனக்கு உரிமை கிடைக்கவில்லை. அப்படியாயின் நான் வேறு என்ன செய்வது?’
 
– அனௌஸ்கா, சுவிற்சர்லாந்தில் தன் முகம் இழந்த, தோற்றுப்போன ஒரு அகதி. நான்கு பிள்ளைகளின் தாய்.
 
கருணை சிறிதளவேனும் இல்லாத பாலியல் தொழிலில் பெண்கள் நுழைவதற்கு அனௌஸ்கா கூறும் காரணம் பல நேரங்களில் ஒத்துழைக்கிறது.
 
பாலியல் தொழில்(விபச்சாரம்) : வருவாய் நிறைந்த ஒரு தொழில்

 
சுவிற்சர்லாந்தில் 90மூ வீதமான பாலியற் தொழிலாளர்கள் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள்.  அடிமைகளாக அத்தொழிலில் உள்நுழைந்தவர்கள். மிரட்டி பணம் பறிக்கப்படுதல், அச்சுறுத்தலுக்கு உள்ளாதல், தவறான ஆனால் மிகத்திறமையாக நெறிப்பட்டுத்தப்பட்ட நெட்வேர்க்குகளிடம் மாட்டிக்கொள்ளல், என்பவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்.
 
 போதை வஸ்து கும்பல், பெண்களை வியாபாரம் செய்யும் மாஃபியா கும்பல் மற்றும் பிராத்தல் கும்பல்களிடம் சிக்கி வருடத்திற்கு  4 மில்லியன் பேர் சீரழிகிறார்கள். மறுபுறம் அதே ஒரு வருட காலப்பகுதியில் 5 தொடக்கம் 7 மில்லியன் டாலர்கள் வருவாயை இத்தொழில் ஈட்டிக்கொடுக்கிறது என்கிறது ஐ.நா புள்ளிவிபரம்.
 
ஆய்வுத்தகவல்களின் படி சுவிற்சர்லாந்திலிருக்கும் பெருமளவிலான பாலியற் தொழிலாளிகள் கிழக்கு ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து அகதி அந்தஸ்து கோரி வந்தவர்கள். முறையான அடையாள பத்திரம் எதுவுமின்றி இப்போது (Clandestine) முறையில் அனாதரவாக்கப்பட்டவர்கள்.  அல்லது அவசர உதவி நிலையங்களில் இருப்பவர்கள்.
 
வசதியான நேரத்தில் தொழில் செய்யலாம், மொழியில் நன்கு பரீட்சயம் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது அவர்கள் கூறும் இரு ஆதாயம்.  விபச்சாரத்தில் ஈடுபடுவோரில் பெரும்பாலானோர் இளம்வயதினர். கல்வி புகட்டப்படாதவர்கள். பெரும்பாலானோர் பெண்கள். இத்தொழிலுக்கு அடிப்படை தகுதி இவை.
 
ரகத்தை நோக்கிய பயணம்
 
பெரும்பாலான பாலியற் தொழிலாளிகள் தெளிவாக கூறும் விடயமொன்று. அவர்களது நாட்டு பொருளாதார, அரசியல், வணிக சூழ்நிலைகளிலிருந்து தப்பவேண்டுமென்பதே அவர்களுடைய நோக்கம்.
 
ஸ்பெயின், இத்தாலி, ஆபிரிக்காவின் சில நாடுகள் மற்றும் மொரோக்கோ ஆகியவற்றை கடந்து ஆபிரிக்கர்கள் சுவிஸ{க்கு வருகின்றனர். ஏனையவர்கள், அதிஷ்டவசமாக விமானங்களில் வந்துவிடுகிறார்கள். இவர்களில் அதிகமானோர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். அரசியல் சூழ்நிலை அல்லது முதியவர்களுக்கு மணம்முடித்து கொடுக்க மேற்கொள்ளப்படும்  முயற்சி என்பன நாட்டிலிருந்து தப்புவதற்கு சிலர் சொல்லும் காரணம். ஏனையவர்கள் சில மாஃபியா நெட்வேர்க்குகளின் கவர்ச்சி விளம்பரங்களில் வேண்டுமென்றே சிக்குகிறார்கள். இணையம் துணைபோகிறது. கவர்ச்சி சஞ்சிகைகள் சலனப்பட வைக்கின்றன. இத்தொழிலில் இறங்கிவிடுகிறார்கள்.
 
ஐரோப்பிய பாலியல் வர்த்தகத்தில் தொழில் செய்ய அவர்கள் விரும்புகிறார்கள். இதில் எப்படி ஒப்புவிக்க வேண்டுமென கட்டாய பயிற்சி கொடுத்து துஷ்பிரயோகம் செய்வதும் நடக்கிறது.
 
ஜெனீவா, பேர்ன் நெடுஞ்சாலைகளில் நைஜீரியா, கமெரூன், செனகல், கொங்கோ நாட்டு விபச்சார அழகிகளை வெகுவாக பார்க்க முடியும். அவர்களது தலைமை இடங்களாகவே லௌசான், ஜெனிவா போன்ற நகரங்கள் மாறிவிட்டன. 
 
மோனிக் மற்றும் சோனியா  சுதந்திர மாஃபியா நெட்வேர்க்குகளுக்கு கீழ் தொழில் செய்யும் இரு பெண்கள். இவர்களுக்கு ஊதியம் உயர்வாக இருக்கிறது. அனௌஸ்கா  போன்றோர் தேவைக்கு மீறி தொழில் செய்கிறார்கள். 
 
பலர் சுவிற்சர்லாந்துக்கு வந்ததும், ஒரு பெரும் தொகைக்கு ஒப்பந்தமாகிறார்கள். காரியம் முடிந்ததும், ஒப்பந்த தொகையில் ஒரு பகுதியை மட்டும் பெற்றுக்கொன்டு, வழங்குனரிடமிருந்து தலைமறைவாகிறார்கள்.

ஒரு சில நெட்வேர்க்குகள், எங்களது சொந்த நாட்டிலேயே எம்முடன் தொடர்பு கொண்டுவிடுவார்கள். அவர்களது கிளைகள் அங்குண்டு.  ஒரு சிலர் எம்முடன் நட்பாக பழகிவிட்டு இப்புதைகுழிக்குள் வீழ்த்திவிடுகிறார்கள். ஒரு சிலர் காதலித்து ஏமாற்றுகிறார்கள் – என இத்தொழிலில் நுழைந்தமைக்கான சந்தர்ப்பங்களை இவர்கள் அடுக்கிறார்கள்.
 
“விலங்குகளுடன் புணர்ச்சி மேற்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டேன்”
 
அகதிகளாக சுவிற்சர்லாந்துக்கு வரும் பல பெண்கள், இங்கு நிம்மதியான வாழ்வை தேடிக்கொள்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் மாபெரும் அழிவை சதிக்கிறார்கள். சோனியா, ஆபிரிக்காவை சேர்ந்தவர். தனது கசப்பான அனுபவங்களுக்காக பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதும் வருந்துபவர்.

“நான் ஒரு அவசர உதவி நிலையத்திலிருந்து தப்பினேன். காரணம் எனது நாட்டு தூதுவருடன், சுவிற்சர்லாந்து மேற்கொண்ட ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் நாங்கள் நாடுகடத்தப்படவிருந்தோம்.

நான் தெருவுக்கு வந்தேன். வாழ்வை கொண்டு நடத்த பாலியல் தொழிலை விட வேறு வழி இல்லை. எங்கு போவது, சுவிற்சர்லாந்தில் யாரையும் தெரியாதே. சில நாட்களின் பின்னர், இன்னுமொரு நகரில் மரியாதையான வேலை ஒன்று எடுத்து தருவதாக ஒருவரின் தொடர்பு கிடைத்தது. ஆனால் அது வேறொரு நரக வாழ்க்கைக்குரிய தொடக்கம் என எனக்கு தெரியவில்லை. (சோக புன்னகையுடன்)

ஒப்பந்தத்தின் படி, இரக்கமற்ற, மன்னிக்க முடியாத அந்நபரால் பாலியல் வன்முறைக்குட்டேன் வீட்டிற்கு வந்ததும், போதை வஸ்து கொடுக்கப்பட்டேன். அடித்து துன்புறுத்தப்பட்டேன். வாரக்கணக்கில் பலாத்காரம் செய்யப்பட்டேன். பிறகு இன்னுமொரு பிராத்தல்காரருக்கு விற்கப்பட்டேன். அவர் ஒரு வயதான சுவிஸ் நாட்டவர். நான் அடிமையாக, பெரிய விலைக்கு விற்கப்பட்டுவிட்டேன், என அவருடன் இருந்த ஆபிரிக்க வயதான பெண்மணி எனக்கு புரிய வைத்தார்.

40,000 சுவிஸ் பிராங்கிற்கு, ஐந்து வருட முழுநேர தொழிலுக்கு நான் ஒப்பந்தமாகியுள்ளது பின்னர் தெரியவந்தது. ஐந்து வருடங்களுக்கு நான் அவர்களிடமுள்ள மற்றைய பெண்களுடன் சேர்ந்து தொழில் செய்ய வேண்டும்.  ஒரு நாயை போன்று.  உறவின் வேகத்தை அதிகரிக்கவும், தீவிரத்தை காட்டவும்  வன்முறை தாக்குதலில், அல்ககோலில், போதை வஸ்தில்,  எனது கருப்பையில் ஏற்பட்ட வலியில் தினசரி வாடிக்கையாளர்கள் திருப்தி பட்டுக்கொண்டார்கள்.

சில வாடிக்கையாளர்களின் பாலியல் வேட்கையை தீர்ப்பதற்காக விலங்கு மலத்தை உண்பதற்கும் ((Scatology)), விலங்குகளுடன் உறவு கொள்ளவும் ( (Bestiality)  பயிற்று விக்கப்பட்டேன்.

ஐரோப்பிய பாலியல் கலாச்சாரம் என்பது மிக மோசமானது. நான் மிக அசுத்தமானதாக உணர்கிறேன். இது ஒரு வண்புணர்வு இயந்திரம். குப்பை தொட்டி, உண்மையான  மலம், என்னிடம் அழுவதற்கு இதற்கு மேல் கண்ணீர் இல்லை. நான் அகதி எனும் கதாபாத்திரைத்தை ஏற்றதை விட, போதை வஸ்தின் வீரியம் பெரிதல்ல.

விளைவுகள் பாதிப்பாக உள்ள போதும் இன்று எனது பக்கத்தை மாற்ற முயற்சிக்கிறேன்.  அது இலகுவானதல்ல. இது ஒரு போதும் ஆறாத வடு. மற்றவர்கள் மத்தியில் வாழ்வதற்கு உளவியல் ஆதரவு வேண்டி நான் ஆஅந.ஆடிழப ஐயும் அவரது நிறுவனத்தையும் சந்தித்தேன். ஆஅந.ஆடிழப இன் அமைப்பு, வெறுக்கப்படும் பாலியல் தொழில் புரியும் பெண்களுக்கு கண்ணியமளிக்க விரும்பியது. ஆனால் அவரின் போராட்டம் வெற்றியிலிருந்து மிக தூரத்தில் உள்ளது.”

mme.Fermaine Mbog Epoula  எனும் முழுப்பெயர் கொண்ட அவர் கெமரூன் நாட்டை சேர்ந்தவர். ‘பெண்கள், எப்படியாயினும் மனிதத்தின் தொட்டில்தான்’ எனும் அமைப்பை உருவாக்கினார். பாலியல் தொழிலுக்கு சென்ற பெண்களை மீண்டும் சமூகத்துடன் இணைக்க பாடுபடுவது இவர்கள் பிரதான நோக்கம்.

நாம் பிரான்ஸில் இருக்கிறோம். ஆனால் ஆபிரிக்க பாலியல் தொழிலாளிகள் அதிகமாக இருக்கும்,  ஐரோப்பிய நாடுகள் முழுவதும் சென்று வருகிறோம் என கூறிய அந் நிறுவனரை ஜெனிவாவில் சந்தித்தேன்.  ஆரம்பத்தில், பெரும்பாலான பெண்கள் எம்மிடம் கருத்தடை உறை (condom) கேட்டு வருவார்கள். நாம் அவர்களிடம் அதிகமான கேள்விகள் கேட்க அச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்வோம். பின்னர் இது பற்றி சிந்திக்க ஆரம்பித்தோம். இப்போது, பாலியல் தொழிலுக்கு செல்லும் பெண்களை மீட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம் என்கிறார் அப்பெண்மணி.

நீதிபதியான அவர் தனது வாழ்நாள் முழுவதையும் இந்த நிறுவனத்திற்காக அர்ப்பணிக்க தொடங்கினார். ஆனால் அனைவரும் அவர்கள் கருத்தை கேட்பதில்லை. சொற்பமான அளவினரே இதில் உள்ள ஆபத்தை உணர்ந்து, மீண்டும் வீதிக்கு செல்லும் முடிவை மாற்றிக்கொள்கின்றனர்.

அதிகமானோர் அத்தொழிலுக்கே சென்றுவிடுகிறார்கள். வறுமை அவர்களை அங்கே செல்லவைக்கிறது. அவர்கள் தங்களது குடும்பத்திற்காக உழைக்கிறார்கள். ஆனால், வேறு வருமானத்திற்குரிய வழிகள் இருந்தால், நிச்சயம் இந்த தொழிலை விட்டு வர தயாராக இருக்கிறார்கள்.

Ms. Mbog தனது வக்கீல் தொழிலை விட்டுவிட்டு, பாலியல் தொழிலாளர்கள் இன்னொரு தொழிலை தேடுவதற்கு தன்னை அர்ப்பணிப்பார் என நினைத்திருக்கவில்லை. அவர் இத்தீர்மானத்தை தற்செயலாக நடந்த ஒரு சம்பவத்தின் பின்னர் தான் எடுத்திருந்தார்.

நான் ஒரு விசாரணைக்காக ஒரு பாலியல் தொழிலாளி தாயரை சந்தித்திருத்தேன்.  அவர் தனது மூர்க்கத்தனமான வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்வதற்காக தனது மகனை ஓரின வன்புணரவில் ((Sodomy)டுபடுத்துவதற்கு அந்த வாடிக்கையாளர்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டார். துரதிஷ்டவசமாக அந்த மகன், வன்புணர்வுக்கு பின்னர் இறந்துவிட்டான். இந்த பயங்கரமான சம்பவம், பாலியல் தொழில் ஒருவரை சகலவிதமான உடல் ரீதியனா துன்புறுத்தல்களிலும் எப்படி ஆட்படுத்திவிடும் என்பதை உணர வைத்தது. அன்றெடுத்த தீர்மானம் தான் இது.

மனித கடத்தல்கள் மற்றும் அதனுடனான தொடர்பு குறித்து எச்சரிக்கையாக இருப்பதற்கு உங்களிடம் இரண்டு செய்திகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முதலாவது ஆபிரிக்கர்களுக்கு : பாலியல் தொழில் சகலவிதமான அழுக்கான செயல்களையும் செய்யும். ஐரோப்பா அதில் ஆதாயம் தேடும். வாழ்க்கை கடினமானது. ஆனால் அது மட்டுமே எமது தடைகள் அனைத்தையும் கடந்துவிட கூடிய ஒரே ஒரு வழி.

இரண்டாவது செய்தி, பெற்றோர் எனும் கதாபாத்திரத்திலிருந்து விலகும் பெற்றோருக்கு : ஒரு பிள்ளைக்கு நீங்கள் கொடுக்கும் வாய்ப்புக்கள் அவர்களை மென்மேலும் உயரத்திற்கு கொண்டு செல்ல முயற்சிப்படுத்துவதாக இருக்க வேண்டும். இவையே நாளை அப்பிள்ளைகளை ஆடவராகவும், மகளீராகவும் மாற்றும்.

அப்பிள்ளை பாலியல் தொழிலுக்கு செல்வதால் சம்பாதிக்க முடிகிறது என உங்களால் உணர முடிவதாயின், தனது உடல் ஒன்றே வருமானத்தை ஈட்டும் ஒரே வழி என அப்பிள்ளை நினைக்கிறது. இதனால் கடினமாக இருந்தாலும் அத்தொழிலில் இறங்க முடிவெடுக்கிறது. நாங்கள் இப்போது கூட இதை நிறுத்தலாம். சிறுவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதன் மூலம் இப்பிரச்சினைக்கு முடிவுகட்டுவதற்கு  அரசாங்கங்களிடம் கோரிக்கை வையுங்கள். இதன் மூலம் அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். பெண்கள் இலகுவில் நேரடியாக பாதிக்கப்பட  கூடியவர்கள். அவர்கள் மீதான அகதிகள் கட்டுப்பாட்டு சட்டங்களை தளர்த்துங்கள். காரணம் இப்பெண்கள் வீதியில் நிற்க வேண்டிய நிலை வந்துவிட்டால், அவர்கள் மிக மோசமான ஆபத்தில் இருக்கிறார்கள் என அர்த்தம் என்கிறார் அச்சமூக ஆர்வலர்.

இக்கட்டுரையின் மூலம் :  http://voixdexils.ch/
எழுதியவர் : Hervé S.N (அகதிகளின் குரல் ““Voix d’exils”  வலைப்பூவின் எழுத்தாளர்)
4தமிழ்மீடியாவிற்காக தமிழில் மொழிபெயர்ப்பு : ஸாரா

1 Comment on “பாலியல் தொழில் மூலம் பாதிப்புறும் பெண்களின் சோகங்களுக்கு எல்லைகளில்லை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *