சந்தியா (யாழ்ப்பாணம் இலங்கை)
அண்மையில் நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள். வடமகாணத்தில் 2087 சிறுவர்கள் தாய்,தந்தை இருவரையும் இழந்தவர்களாக உள்ளதாகவும்,10404 சிறுவர்கள் தாய் அல்லது தந்தையை இழந்தவர்களாகவும் பெற்றோர் இருவரையும் இழந்த சிறுவர்கள் அதாவது சிறுவர்களுக்கான பராமரிப்பு இல்லங்களில் வசித்து வருகின்றனர் அவர்களின் விபரங்கள் வருமாறு.
யாழ்ப்பாண சிறுவர் இல்லத்தில் 127 பேரும்
வவுனியா சிறுவர் இல்லத்தில் 120 பேரும்
மன்னார் சிறுவர் இல்லத்தில் 99 பேரும்
கிளிநொச்சி சிறுவர் இல்லத்தில் 31 பேரும் தங்கியுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில்
பெற்றோர் இருவரையும் இழந்து சிறுவர்களுக்கான பராமரிப்பு இல்லங்களுக்கு வெளியே உறவினர்களுடன் தங்கியுள்ளோரின் விபரங்கள்
யாழ்ப்பாணம் 413
வவுனியா 360
முல்லைத்தீவு 357
கிளிநொச்சி 334
மன்னார் 205 பேரும் உறவினர்களுடன் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வட மாகாணத்தில் 2087 சிறுவர்கள்; தமது தாய் தந்தை இருவரையும் இழந்த நிலையில் உள்ளனர். 10,404 சிறுவர்கள் தாய் அல்லது தந்தை ஆகிய ஒருவரை இழந்த நிலையில் உள்ளனர். இந்தச் சிறுவர்களில் 10,878 சிறுவர்கள் உறவினர்களுடன் தங்கியுள்ளனர்.
அரச மற்றும் தனியார் இல்லங்களில் 1613 சிறுவர்கள் தங்கியுள்ளனர் என வட மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தில் பதியப்பட்டுள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் இவ் புள்ளிவிபரங்களை அதன் ஆணையாளர் ரி.விஸ்வரூபன் இவ் விபரங்களை தெரிவித்துள்ளார்.
இவர்களின் நல்வாழ்வுக்கான செயற்திட்டங்கள் விரைவில் அமுல்நடத்தப்படல் வேண்டும். உரியவர்கள் முன்வருவார்களா?