சை.கிங்ஸ்லி கோமஸ்
தலவாக்கலை பிரதேசத்தில் கடந்த வாரங்களில் மக்களை ஆட்டிப் படைத்த வாந்திப் பேதி வயிற்றுளைவு நோய்களுக்கு இன்னும் தீர்க்கமான முடிவுகள் எதுவும் வழங்கப்படாத நிலைமையில் பலரும் பல கதையாடல்களை நடத்துகின்றனர் |
தலவாக்கலையில் நடப்பதென்ன? இரண்டு உயிர்கள் வாந்திப் பேதி வயிற்றுளைவு நோயினால் மரணித்தமைக்கு காரணம் யார்?
சை.கிங்ஸ்லி கோமஸ்
தலவாக்கலை பிரதேசத்தில் கடந்த வாரங்களில் மக்களை ஆட்டிப் படைத்த வாந்திப் பேதி வயிற்றுளைவு நோய்களுக்கு இன்னும் தீர்க்கமான முடிவுகள் எதுவும் வழங்கப்படாத நிலைமையில் பலரும் பல கதையாடல்களை நடத்துகின்றனர் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழும் பிரதேசமான மத்திய மலை நாட்டின் நுவரெலியா பிரதேசத்தின் லிந்துல்லை அரச மருத்துவமனைக்கு ஆயிரம ஆயிரமாய் மக்கள் வரத் துவங்கியதும் அதில் ஆறு மாத குழந்தை வாந்திப் பேதி நோயினால் பாதிக்கப் பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டு கடந்த 31.03.2012 திகதியன்று மரணத்தைத் தழுவியது. அந்தக் குழந்தை லிந்துலை பிரதேசத்தை சேர்ந்தவர் அதனைத் தொடர்ந்து17.04.2012 தினத்தன்று தலவாக்கலை கொலிருட் தோட்டத்தை சேர்ந்த 46 வயதுடைய ஒருவர் காலமானார். இந்த நேரத்திலும் மலையகமும் மலையக மக்களின் பிரதிநிதிகளும் எந்த விதமான சலசலப்பும் இல்லாமல் தாங்கள் உண்டு தங்கள் பாடுண்டு என்று இருந்தனர்;. தேர்தல் காலத்தில் வயோதிபர்கள் இறந்தாலும் பலவந்தமாக சென்று பெட்டி வாங்கி கொடுத்த அரசியல் வாதிகள் அஞ்சலி செய்தி ஒன்றினை வழங்கக் கூட முன்வரவில்லை என்றால் அதிசயமெதுவும் இல்லை.ஆனால் ஊடகங்கள் இந்த இடத்தில் மௌனம் காக்க வில்லை அவர்களின் கடமையை செய்யத்துவங்கியது உறங்கிக் கொண்டிருந்த பொது மக்கள் விழித்துக் கொண்டனர் மக்களுடன் சேர்ந்து பல அரசாங்க நிறுவனங்களும் அரசாங்க உத்தியோகத்தர்களும் விழித்துக் கொண்டனர் பிரதேச உள்ளுராட்சி மன்றமான தலவாக்கலை லிந்துலை நகர சபை துரிதமாக தனது கடமையை செய்யத் துவங்கியது. பிரதேச நீர் வழங்கல் வடிகாலமைப்பு சங்கம்,தோட்டங்களின் சுகாதார அதிகாரிகள்,சுகாதார உத்தியோகத்தர்கள் என்போர் இந்த நிலையிலும் தூக்கம் களையாமலே இருந்தனர். ஊடகங்கள் விடுவதாய் இல்லை தொடர்ந்தும் தனது கடமையினை செய்துக் கொண்டிருந்தது.
மரணங்கள் பற்றியும் நோய் தடுப்பு பற்றியும் பிரதேச சுகாதார காரியாலயமும் தலவாக்கலை லிந்துல்லை நகர சபையும் ஒலி பெருக்கியின் மூலம் அறிவிக்கத் துவங்கியது. பிரதேசம் சூடு பிடிக்கத்துவங்கியது வைத்தியசாலைகளில் மக்கள் கூட்டம் நிரம்பத்துவங்கியது.இருந்தும் பெரும் அரசியல் வாதிகள் கண்டுக் கொள்ளவில்லை அனைவரினதும் விரல்களும் நீர் வடிகாலமைப்பு சங்கத்தை நோக்கியும் தோட்ட நிர்வாகங்களை நோக்கியும் நீட்டப்படுவதும் தொடர்ந்த வண்ணம் இருந்தது.
அரசாங்க அதிபரும் அவரது உத்தியோகத்தர்களும் என்ன செய்தார்கள்?
அவரது உத்தியோகத்தர்களையும் சமுர்தி உத்தியோகத்தர்களையும் கிராம உத்தியோகத்தர்களையும் தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு உதவி செய்வதற்காக அனுப்பினார் .
நீர் வடிகாலமைப்பு சபை என்ன செய்தது?
ஊடகங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல எங்களின் நீரை சிறந்த முறையில் சுத்திகரித்து வழங்குகின்றோம் என்றும் முழு இலங்கைக்கும் நீர் வழங்குகின்றோம் ஆகவே தலவாக்கலை மாத்திரம் விதி விலக்கல்ல என்றும் கூறுகின்றனர் ஆனாலும் தலைநகரில் இருந்து பொறியியலாளர்கள் வருகைத்தருவதும் ஆய்வாளர்கள் வருவதும் நீரை பரீட்சிப்பதும் என்று பல செயற்பாடுகள் அரங்கேறி வருகின்றது பல மாதங்களுக்கு முன் தலவாக்கலை நகரசபை நீர் வடிகாலமைப்பு சபைக்கு இது தொடர்பாக அறிவித்தல்களை வழங்கியதுவும் குறிப்பிடத்தக்கது.
பிரதேச தொழிற்சங்கங்கள் என்ன செய்தது?
இறந்தவர் தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்தவர் இந்த நிலைமையிலும் தொழிற்சங்கங்கள் இது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்க தங்களைத் தயார்ப் படுத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தோட்ட நிர்வாகங்கள் என்ன செய்தன?
இது நகர சபையினதும் நீர்வடிகால் அமைப்பு சபையினதும் விடயம் இதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி வேடிக்கைப்பார்த்துக் கொண்டுள்ளனர் ஆனால் தலவாக்கலை நானுஓயா டிவிசன் தோட்டத்திலே இன்னும் 23 குடும்பங்கள் மலசல கூடங்கள் இல்லாமல் தேயிலைத் தோட்டத்திற்கும் வடிகால்களுக்கும் சென்று மலம் கழிப்பதும் இந்த கழிவுகள் யாவும் தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு செல்வதும் குறிப்பிடத் தக்கது மேற்படி தோட்டம் நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட தோட்டமாகும்
நுவரெலியா பிரதேச சபை என்ன செய்தது?
நகர சபை எல்லைக்கு அப்பால் நோயால் பாதிக்கப்பட்ட எல்லாப் பிரதேசங்களும் நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதியாகும் பிரதேச சபை எதிர் வரும் காலங்களில் பாரிய செயற்பாடுகளை செய்வதற்கு திட்டங்களைத் தீட்டிவருவதும் குறிப்பிடத்தக்கது.
பிரதேச பொது மக்கள் என்ன செய்தார்கள்?
பிரதேச பொது மக்கள் இரண்டு உயிர்கள் பறிப்போனதன் பின்னும் கூட எந்த சலனமும் இல்லாமல் தங்களின் தவறுகளை இன்னும் இன்னுமாய் செய்து வருவதும் தங்களுக்கென தனியான மலசலகூடங்களை கட்டிக் கொள்ளாமல் மற்றவர்களை குறைக்கூறியும் வாழ்ந்து வருகின்றனர். பல ஆயிரம் ரூபாய் செலவில் டிஸ் என்டனாக்களை பொருத்திக் கொண்டு பொது இடங்களில் மலம் கழிக்கும் இந்த மக்கள் கல்வியில் உயர்ந்துள்ளார்கள் என்று கூறுபவர்கள் தங்களின் கண்களை திறந்து இந்த மக்களை பார்க்க வேண்டியதும் வழிகாட்ட வேண்டியதும் காலத்தின் கட்டாய தேவையாகும்.
மொத்தத்தில் மலையக மக்கள் தங்களின் சுகாதாரத்தில் அக்கறைக் கொள்ள வேண்டும் என்பது மாத்திரம் அல்ல நாகரீக காலத்தற்கு ஏற்ப வாழ்வதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதும் கட்டாயமாகும். லிந்துல்லை நாக சேனை டயகம அக்கரப்பத்தனை தலவாக்கலை போன்ற நகர பொது மக்களும் கூட அநேகமானவர்கள் தங்களின் மலசலகூடத்தை பிரதான ஆறான கொத்மலை ஓயாவிற்கே திருப்பியுள்ளனர்.மொத்தத்தில் பொது மக்களும் இந்த இரண்டு உயிர்கள் போவதற்கு காரணம் என்பது சுட்டிக்காட்டப் பட வேண்டிய விடயமாகும்
அரசாங்கம், பிரதேச செயலகம் , மலையக அரசியல் தலைமைகள் ,தொழிற்சங்கங்கள் , உள்ளுராடசி மன்றங்கள் , மாவட்ட சுகாதார அதிகாரிகள் , தோட்ட நிர்வாகம் , நீர்வடிகாலமைப்பு சபை என எல்லோரும் மலையக மக்களின் சுகாதார நலன்புரி விடயங்களில் இன்னும் அதிகமான அக்கறையினை கொண்டு தோட்டப்புர மக்களுக்கு தனியான குடியிருப்புகளும் சுத்தமான நீரும் வழங்குதற்கு திடமான திட்டம் ஒன்றினை அமுல்படுத்த இனியாவது முன்வரவேண்டியது காலத்தின் கட்டாயம் அல்லவா.
தலவாக்கலை பிரதேசத்தில் கடந்த வாரங்களில் மக்களை ஆட்டிப் படைத்த வாந்திப் பேதி வயிற்றுளைவு நோய்களுக்கு இன்னும் தீர்க்கமான முடிவுகள் எதுவும் வழங்கப்படாத நிலைமையில் பலரும் பல கதையாடல்களை நடத்துகின்றனர் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழும் பிரதேசமான மத்திய மலை நாட்டின் நுவரெலியா பிரதேசத்தின் லிந்துல்லை அரச மருத்துவமனைக்கு ஆயிரம ஆயிரமாய் மக்கள் வரத் துவங்கியதும் அதில் ஆறு மாத குழந்தை வாந்திப் பேதி நோயினால் பாதிக்கப் பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டு கடந்த 31.03.2012 திகதியன்று மரணத்தைத் தழுவியது. அந்தக் குழந்தை லிந்துலை பிரதேசத்தை சேர்ந்தவர் அதனைத் தொடர்ந்து17.04.2012 தினத்தன்று தலவாக்கலை கொலிருட் தோட்டத்தை சேர்ந்த 46 வயதுடைய ஒருவர் காலமானார். இந்த நேரத்திலும் மலையகமும் மலையக மக்களின் பிரதிநிதிகளும் எந்த விதமான சலசலப்பும் இல்லாமல் தாங்கள் உண்டு தங்கள் பாடுண்டு என்று இருந்தனர்;. தேர்தல் காலத்தில் வயோதிபர்கள் இறந்தாலும் பலவந்தமாக சென்று பெட்டி வாங்கி கொடுத்த அரசியல் வாதிகள் அஞ்சலி செய்தி ஒன்றினை வழங்கக் கூட முன்வரவில்லை என்றால் அதிசயமெதுவும் இல்லை.ஆனால் ஊடகங்கள் இந்த இடத்தில் மௌனம் காக்க வில்லை அவர்களின் கடமையை செய்யத்துவங்கியது உறங்கிக் கொண்டிருந்த பொது மக்கள் விழித்துக் கொண்டனர் மக்களுடன் சேர்ந்து பல அரசாங்க நிறுவனங்களும் அரசாங்க உத்தியோகத்தர்களும் விழித்துக் கொண்டனர் பிரதேச உள்ளுராட்சி மன்றமான தலவாக்கலை லிந்துலை நகர சபை துரிதமாக தனது கடமையை செய்யத் துவங்கியது. பிரதேச நீர் வழங்கல் வடிகாலமைப்பு சங்கம்,தோட்டங்களின் சுகாதார அதிகாரிகள்,சுகாதார உத்தியோகத்தர்கள் என்போர் இந்த நிலையிலும் தூக்கம் களையாமலே இருந்தனர். ஊடகங்கள் விடுவதாய் இல்லை தொடர்ந்தும் தனது கடமையினை செய்துக் கொண்டிருந்தது.
மரணங்கள் பற்றியும் நோய் தடுப்பு பற்றியும் பிரதேச சுகாதார காரியாலயமும் தலவாக்கலை லிந்துல்லை நகர சபையும் ஒலி பெருக்கியின் மூலம் அறிவிக்கத் துவங்கியது. பிரதேசம் சூடு பிடிக்கத்துவங்கியது வைத்தியசாலைகளில் மக்கள் கூட்டம் நிரம்பத்துவங்கியது.இருந்தும் பெரும் அரசியல் வாதிகள் கண்டுக் கொள்ளவில்லை அனைவரினதும் விரல்களும் நீர் வடிகாலமைப்பு சங்கத்தை நோக்கியும் தோட்ட நிர்வாகங்களை நோக்கியும் நீட்டப்படுவதும் தொடர்ந்த வண்ணம் இருந்தது.அரசாங்க அதிபரும் அவரது உத்தியோகத்தர்களும் என்ன செய்தார்கள்?அவரது உத்தியோகத்தர்களையும் சமுர்தி கிராம உத்தியோகத்தர்களையும் தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு உதவி செய்வதற்காக அனுப்பினார் .
நீர் வடிகாலமைப்பு சபை என்ன செய்தது?
ஊடகங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல எங்களின் நீரை சிறந்த முறையில் சுத்திகரித்து வழங்குகின்றோம் என்றும் முழு இலங்கைக்கும் நீர் வழங்குகின்றோம் ஆகவே தலவாக்கலை மாத்திரம் விதி விலக்கல்ல என்றும் கூறுகின்றனர் ஆனாலும் தலைநகரில் இருந்து பொறியியலாளர்கள் வருகைத்தருவதும் ஆய்வாளர்கள் வருவதும் நீரை பரீட்சிப்பதும் என்று பல செயற்பாடுகள் அரங்கேறி வருகின்றது பல மாதங்களுக்கு முன் தலவாக்கலை நகரசபை நீர் வடிகாலமைப்பு சபைக்கு இது தொடர்பாக அறிவித்தல்களை வழங்கியதுவும் குறிப்பிடத்தக்கது.
பிரதேச தொழிற்சங்கங்கள் என்ன செய்தது?இறந்தவர் தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்தவர் இந்த நிலைமையிலும் தொழிற்சங்கங்கள் இது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்க தங்களைத் தயார்ப் படுத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.தோட்ட நிர்வாகங்கள் என்ன செய்தன?இது நகர சபையினதும் நீர்வடிகால் அமைப்பு சபையினதும் விடயம் இதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி வேடிக்கைப்பார்த்துக் கொண்டுள்ளனர் ஆனால் தலவாக்கலை நானுஓயா டிவிசன் தோட்டத்திலே இன்னும் 23 குடும்பங்கள் மலசல கூடங்கள் இல்லாமல் தேயிலைத் தோட்டத்திற்கும் வடிகால்களுக்கும் சென்று மலம் கழிப்பதும் இந்த கழிவுகள் யாவும் தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு செல்வதும் குறிப்பிடத் தக்கது மேற்படி தோட்டம் நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட தோட்டமாகும்
நுவரெலியா பிரதேச சபை என்ன செய்தது நகர சபை எல்லைக்கு அப்பால் நோயால் பாதிக்கப்பட்ட எல்லாப் பிரதேசங்களும் நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதியாகும் பிரதேச சபை எதிர் வரும் காலங்களில் பாரிய செயற்பாடுகளை செய்வதற்கு திட்டங்களைத் தீட்டிவருவதும் குறிப்பிடத்தக்கது.பிரதேச பொது மக்கள் என்ன செய்தார்கள்?பிரதேச பொது மக்கள் இரண்டு உயிர்கள் பறிப்போனதன் பின்னும் கூட எந்த சலனமும் இல்லாமல் தங்களின் தவறுகளை இன்னும் இன்னுமாய் செய்து வருவதும் தங்களுக்கென தனியான மலசலகூடங்களை கட்டிக் கொள்ளாமல் மற்றவர்களை குறைக்கூறியும் வாழ்ந்து வருகின்றனர். பல ஆயிரம் ரூபாய் செலவில் டிஸ் என்டனாக்களை பொருத்திக் கொண்டு பொது இடங்களில் மலம் கழிக்கும் இந்த மக்கள் கல்வியில் உயர்ந்துள்ளார்கள் என்று கூறுபவர்கள் தங்களின் கண்களை திறந்து இந்த மக்களை பார்க்க வேண்டியதும் வழிகாட்ட வேண்டியதும் காலத்தின் கட்டாய தேவையாகும்.