ஈழத்தின் மிகமுக்கிய கவிஞரும் விமர்சகரும் சிறுகதையாளருமான சண்முகம் சிவலிங்கம் இன்று 20-04-2012 வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார். . இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனை நகருக்கு அருகே உள்ள பாண்டிருப்பில் 1939ம் ஆண்டில் பிறந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் உயர்கல்வி பயின்று அறிவியல் துறையில் பட்டம்பெற்றவராவர். 1960ம் ஆண்டுமுதல் கவிதை எழுதிவரும் இவரது கவிதைகள் ‘நீர்வளையங்கள்’ தமிழியல் 1988 ‘சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும்’ காலச்சுவடு 2010 என்ற சிறந்த இரண்டு கவிதை நூல்களாக இதுவரை வெளிவந்துள்ளன.
ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.