அன்னபூரணி (மட்டக்களப்பு )
‘கிராமப்பெண்களை வலுப்படுத்துவோம்,பசி மற்றும் வறுமையினை ஒழிப்போம்’ என்னும் தலைப்பில் மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி அமைப்பு நடத்திய பல்வேறு நிகழ்வுகள் சென்ற புதன்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றன
.நிகழ்வில் மங்கல விளக்கேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானதுடன் நிகழ்வில் வரவேற்புரையின் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் கணக்காளர் திருமதி வசந்தகுமார் உரை நிகழ்த்தினார்.தாண்டியடி,தாழங்குடா,திருச்செந்தூர்,நொச்சிமுனை ஆகிய கிராமங்களில் இருந்து பெண்களைக்கொண்ட கிராமமட்டக்குழுக்கள்,சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் உப குழுக்கள்,பெண்கள் தொடர்பான நிறுவனங்கள்.அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில்கலந்துகொண்டனர்.
இங்கு கிராமப்புறப்பெண்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் மனதைக்கவர்ந்தது.
இதன்போது மிக முக்கியமாக பெண்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று மிகவும் வித்தியாசமான முறையில் நடத்தப்பட்டது.
மீட்டெடுப்போம்‘இரவுகளை ‘ என்ற தலைப்பில் பெண்கள் குழுக்களாக ஒன்றிணைந்து கைகளில் ஓளிச்சுடர்களை ஏந்தி ஊர்வலமாகச்சென்றனர்.சென்.செபஸ்டியன் ஆலய முன்றிலில் ஆரம்பமான ஊர்வலமானது அரசடிச்சந்தி ஊடாக வந்து திருமலை வீதியில் உள்ள நெக்டப் மகளிர் கடைத்தொகுதியில் முடிவடைந்தது.
இந்நிகழ்வில் சித்திரலேகா மௌனகுரு பிரதம அதிதியாக கலந்துகொண்டார்
.