கழுத்தை நெறிக்கும் அதிகார வழி ஜனநாயகத்திற்கு எதிராக பெண்கள் அரசியலில் பங்குபெற வேண்டும்

fOj;ij newpf;Fk; mjpfhu top [dehafj;jpw;F vjpuhf ngz;fs; murpaypy; gq;Fngw Ntz;Lk;

  ஸர்மிளா ஸெய்யித் (இலங்கை)

h8-1 மக்களிலிருந்து மக்களுக்கு என்ற ஜனநாயகத்தின் உயிரோட்டமான தத்துவத்தை நாம் அநுபவிக்கவேண்டுமாக இருந்தால் அரசியலில் எமது பங்களிப்பு தவிர்க்கமுடியாத நிலையை அடைந்துள்ளதை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

]u;kpsh n]a;apj; (,yq;if)
kf;fSlkpUe;J kf;fSf;F vd;gJ [dehafj;jpd; mbg;gilj; jj;Jtk; vd;fpNwhk;. ,uhZt [dehafk;> nghUshjhu [dehafk; ,uz;Lk; xd;Wf;nfhd;W ,Wf;fkhd njhlu;GilfisAilaJk;> kf;fNshL gpize;jJkhd jisfshfTk; ,Ug;gij kWf;fKbahJ. ,t;tpU [dehaf Nfhl;ghLfSk; mjd; epiyfspypUe;J jsu;e;J> jlq;fspypUe;J Guz;L mjpfhu top vLf;Fk;NghJ mjd; iffs; ePz;L newpf;fj; Juj;JtJ ngz;fspd; fOj;Jf;fisNa.
,uhZt [dehafk; gw;wpa fUj;jhly;fis Nghu;f; fhyq;fspy;jhd; ehk; mjpfk; Nfs;tpAWfpNwhk;. ftdaPu;g;GfSk;> $g;ghLfSk; Fwpg;gpl;l fhyq;fSf;Fr; nra;ag;gLtjhAk; gpd;du; kwf;fg;gLtjhAk;jhd; gupr;rakhf;fg;gl;Ls;sd. Nghu; fhyq;fspy; [dehaf kPwy;fs;> Nghu; Fw;wq;fs;> fhzhky;Nghjy;> fw;gopg;Gfs;> tij Kfhk;fs; vd;w jiyg;Gfspy; NgRtJ tof;fkhfptpLfpwJ. fhyj;jpd; Njitfs; khWk;NghJ mit kwf;fbf;fg;gLfpwd;wd.
xU fhyj;jpy; fhzhky;NghNdhiuf; Fwpj;J tha;fpopf; fijj;Njhk;. Nkilfspy; Koq;fpNdhk;@ gpu];jhgpj;Njhk;. gjhijfisj; J}f;fpf; nfhz;L tPjp cyhf;fspYk; ,wq;fpNdhk;. fz;isf; fl;bf;nfhz;L FUtp gpbg;gJ Nghy vkJ Kaw;rpfs; vJTk; gydspf;fhnjd;W mwpe;jJk; mijnay;yhk; Xuq;fl;b vkJ Ntiyfisg; ghu;f;ff; fpsk;gp tpl;Nlhk;. vg;NghNjh fhzhky;Nghd fztid> vg;NghNjh fhzhky;Nghd mg;ghit> vg;NghNjh fhzhky;Nghd kfid> rNfhjuid vz;zp ,jak; cUf mOJ jPu;g;gtu;fspd; ,d;iw epiy vd;dthapUf;Fk; vd;W rpe;jpf;fj;jhDk; vkf;Fg; nghWikNah> mtfhrNkh ,y;iy.
gj;njd;d gy E}W tU\q;fs; MdhYk; fhzhky;Nghdtu;fs; fhzhky;Nghdtu;fNsjhd;. ,we;jjhf xg;Gf;nfhs;sTk; Kbahky; capNuhL ,Uf;fpwhu;fsh vd;Wk; njupahky; mtu;fspd; FLk;gq;fs; mEgtpj;Jf; nfhz;bUf;Fk; ,d;dy;fs; Kbtpyhf; fijfs;. fhzhky;Nghd FLk;gj;jiytu;fspd; nghWg;Gf;fis Rke;jpOf;Fk; ngz;fs; vjpu;nfhs;Sk; gpur;rpidfSk;> tho;tpay; rthy;fSk; Kw;wpYk; khWgl;l epiyapy; ,Ue;J ftdpf;fg;glNtz;bajhfNt cs;sd.
,uhZt [dehafKk;> nghUshjhu [dehafKk; ngz;fspd; KJFfspy; Vw;wpapOf;fr; nra;Ak; Rikfspd; fdk;> ngz;fspd; ];jpuj; jd;ikia mopj;njhopf;fpd;w mjpfhuj;jpd; ntspg;ghlhfj;jhd; ghu;f;fg;glNtz;Lk;. ,uhZt [dehafj;jpd; mjpfhug; gpbapypUe;J tpLgLtjw;fhd topfisf; fz;lwptjpNyNa gy jrhg;jq;fisf; fopj;Jk;> fz;lwpaj; jtwpapUf;Fk; epiyapy; nghUshjhu [dehafj;jpd; iffSk; ePz;L fOj;Jfis newpf;fj; Juj;Jfpd;w mtyj;ijAk; nghWj;Jf;nfhs;tnjd;why; mJ vj;jid Rikahd mEgtk;.
Kd;dnuy;yhk; tpjitfs; vd;nwhU ml;ltiz jahupj;Njhk;. ,g;NghJ FLk;g jiyikg; ngz;fs; vd;nwhU Gjpa ml;ltiziaAk; Nru;j;Js;Nshk;. FLk;g jiyikg; ngz;fs;??? mtu;fs;jhd; fhzhky; NghNdhupd; kidtpfs; my;yJ fztdhy; iftplg;gl;l ngz;fs;. jpUk;Gk; jpirfspnyy;yhk; mjpfhu ntspfis ClWj;Jg; gha;tjw;fhf ngz;fs; Nghuhbf;nfhz;NlapUf;f epu;g;ge;jpf;fg;gLfpd;w [dehaff; fl;likg;igj;jhd; ehk; njhlu;tjh?
nghUshjhu Rik FLk;g jiyikg; ngz;fspd; ];jpuepiyapy; ghupa mr;RWj;jiy Vw;gLj;jp mtu;fis Ml;lk; fhzr; nra;Js;sJ. ehSf;F ehs; Vwpf;nfhz;bUf;Fk; tpiyNaw;wj;jpdhy; ghjpf;fg;gLtnjy;yhk; rhjhuz fpuhk kf;fs; Kf;fpakhf ngz;fs; vd;w cz;ikia ehk; Vw;Wf;nfhs;shjpUf;f KbAkh?
gpuGj;Jt top rpj;jhe;jj;ij cilj;njwptjD}lhfj;jhd; ,uhZt [dehafk;> nghUshjhu [dehafk; vd;Dk; mjpfhuq;fis J}f;fp vwpaKbAk;. gyte;j Rikfis vk; KJFfspy; jpzpj;J vk; rpuq;fis epyj;ij Nehf;fp jho;e;jpUf;fr; nra;jpUf;Fk; je;jpNuhghaq;fis ClWj;J ehk; ek; jiyfis cau;j;j mikg;G uPjpapy; xd;W jpusNtz;Lk;.  vkJ nghUshjhu> murpay; jFjpia mgptpUj;jp nra;a> If;fpag;gl;L cw;gj;jpapYk; murpay; eltbf;ifapYk; gq;fhw;wNtz;Lk;.
kf;fspypUe;J kf;fSf;F vd;w [dehafj;jpd; capNuhl;lkhd jj;Jtj;ij ehk; mEgtpf;fNtz;Lkhf ,Ue;jhy; murpaypy; vkJ gq;fspg;G jtpu;f;fKbahj epiyia mile;Js;sij ehk; Vw;Wj;jhd; MfNtz;Lk;. rKjhaj;jpd; KOikahd khw;Wg;Nghf;fpw;fhf ngz;fs; ehk; xd;wpize;J vkJ rf;jpia xd;W$l;lNtz;Lk;.
murpay; J}rpfSk;> fpUkpfSk; ekJ Rj;jkhd Kfj;ij mOf;Fg;gLj;j my;yJ MNuhf;fpakhd ekJ cWg;Gf;fis mupj;Jj; jpd;d ehk; mDkjpj;Jf;nfhz;bUe;jjdhYk;> vkJ Njitf;Fg; nghUe;jhj fUj;Jf;fisAk; fz;Nzhl;lq;fisAk; nrtprha;j;J> Gwf;fzpf;fj; jaq;fpajdhYNk [dehafj;jpd; iffis mjpfhuj;Jld; Xq;fr; nra;Js;Nshk;.
J}rpfs; gbe;JtpLtjw;F toprikj;j ehk;jhd; Jilg;gq;fshfp Rj;jg;gLj;Jfpd;w fhupaj;ij Nkw;nfhs;sNtz;ba epiyf;Fj;js;sg;gl;Ls;Nshk;. XLk; ePu; ghrp gpbf;fhJ – fjtpd; fPo; JUg;gpbf;fhJ vd;w gonkhopfs; ,iltplhj ,af;fk; fpUkpfspd; jhf;fj;jpypUe;J fhf;Fk; vd;gijNa vLj;Jf;fhl;LfpwJ.
 மக்களுடமிருந்து மக்களுக்கு என்பது ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவம் என்கிறோம். இராணுவ ஜனநாயகம், பொருளாதார ஜனநாயகம் இரண்டும் ஒன்றுக்கொன்று இறுக்கமான தொடர்புடைகளையுடையதும், மக்களோடு பிணைந்ததுமான தளைகளாகவும் இருப்பதை மறுக்கமுடியாது. இவ்விரு ஜனநாயக கோட்பாடுகளும் அதன் நிலைகளிலிருந்து தளர்ந்து,தடங்களிலிருந்து புரண்டு அதிகார வழி எடுக்கும்போது அதன் கைகள் நீண்டு நெறிக்கத் துரத்துவது பெண்களின் கழுத்துக்களையே.இராணுவ ஜனநாயகம் பற்றிய கருத்தாடல்களை போர்க் காலங்களில்தான் நாம் அதிகம் கேள்வியுறுகிறோம். கவனயீர்ப்புகளும், கூப்பாடுகளும் குறிப்பிட்ட காலங்களுக்குச் செய்யப்படுவதாயும் பின்னர் மறக்கப்படுவதாயும்தான் பரிச்சயமாக்கப்பட்டுள்ளன. போர் காலங்களில் ஜனநாயக மீறல்கள், போர் குற்றங்கள், காணாமல்போதல்,பாலியல் வன்முறைகள் , வதை முகாம்கள் என்ற தலைப்புகளில் பேசுவது வழக்கமாகிவிடுகிறது. காலத்தின் தேவைகள் மாறும்போது அவை மறக்கடிக்கப்படுகிறன்றன.
 
 ஒரு காலத்தில் காணாமல்போனோரைக் குறித்து வாய்கிழிக் கதைத்தோம். மேடைகளில் முழங்கினோம். பிரஸ்தாபித்தோம். பதாதைகளைத் தூக்கிக் கொண்டு வீதி உலாக்களிலும் இறங்கினோம். கண்ளைக் கட்டிக்கொண்டு குருவி பிடிப்பது போல எமது முயற்சிகள் எதுவும் பலனளிக்காதென்று அறிந்ததும் அதையெல்லாம் ஓரங்கட்டி எமது வேலைகளைப் பார்க்கக்கிளம்பி விட்டோம். எப்போதோ காணாமல்போன கணவனை, எப்போதோ காணாமல்போன அப்பாவை, எப்போதோ காணாமல்போன மகனை, சகோதரனை எண்ணி இதயம் உருக அழுது தீர்ப்பவர்களின் இன்றை நிலை என்னவாயிருக்கும் என்று சிந்திக்கத்தானும் எமக்குப் பொறுமையோ, அவகாசமோ இல்லை.பத்தென்ன பல நூறு வருஷங்கள் ஆனாலும் காணாமல்போனவர்கள் காணாமல்போனவர்களேதான். இறந்ததாக ஒப்புக்கொள்ளவும் முடியாமல் உயிரோடு இருக்கிறார்களா என்றும் தெரியாமல் அவர்களின் குடும்பங்கள் அநுபவித்துக் கொண்டிருக்கும் இன்னல்கள் முடிவிலாக் கதைகள். காணாமல்போன குடும்பத்தலைவர்களின் பொறுப்புக்களை சுமந்திழுக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், வாழ்வியல் சவால்களும் முற்றிலும் மாறுபட்ட நிலையில் இருந்து கவனிக்கப்படவேண்டியதாகவே உள்ளன.இராணுவ ஜனநாயகமும், பொருளாதார ஜனநாயகமும் பெண்களின் முதுகுகளில் ஏற்றியிழுக்கச் செய்யும் சுமைகளின் கனம், பெண்களின் ஸ்திரத் தன்மையை அழித்தொழிக்கின்ற அதிகாரத்தின் வெளிப்பாடாகத்தான் பார்க்கப்படவேண்டும். இராணுவ ஜனநாயகத்தின் அதிகாரப் பிடியிலிருந்து விடுபடுவதற்கான வழிகளைக் கண்டறிவதிலேயே பல தசாப்தங்களைக் கழித்தும், கண்டறியத் தவறியிருக்கும் நிலையில் பொருளாதார ஜனநாயகத்தின் கைகளும் நீண்டு கழுத்துகளை நெறிக்கத் துரத்துகின்ற அவலத்தையும் பொறுத்துக்கொள்வதென்றால் அது எத்தனை சுமையான அநுபவம்.முன்னரெல்லாம் விதவைகள் என்றொரு அட்டவணை தயாரித்தோம். இப்போது குடும்ப தலைமைப் பெண்கள் என்றொரு புதிய அட்டவணையையும் சேர்த்துள்ளோம். குடும்ப தலைமைப் பெண்கள்??? அவர்கள்தான் காணாமல் போனோரின் மனைவிகள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள். திரும்பும் திசைகளிலெல்லாம் அதிகார வெளிகளை ஊடறுத்துப் பாய்வதற்காக பெண்கள் போராடிக்கொண்டேயிருக்க நிர்ப்பந்திக்கப்படுகின்ற ஜனநாயகக் கட்டமைப்பைத்தான் நாம் தொடர்வதா?
 

disappearence_Jaffna_03

பொருளாதார சுமை குடும்ப தலைமைப் பெண்களின் ஸ்திரநிலையில் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி அவர்களை ஆட்டம் காணச் செய்துள்ளது. நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருக்கும் விலையேற்றத்தினால் பாதிக்கப்படுவதெல்லாம் சாதாரண கிராம மக்கள் முக்கியமாக பெண்கள் என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளாதிருக்க முடியுமா?பிரபுத்துவ வழி சித்தாந்தத்தை உடைத்தெறிவதனூடாகத்தான் இராணுவ ஜனநாயகம், பொருளாதார ஜனநாயகம் என்னும் அதிகாரங்களை தூக்கி எறியமுடியும். பலவந்த சுமைகளை எம் முதுகுகளில் திணித்து எம் சிரங்களை நிலத்தை நோக்கி தாழ்ந்திருக்கச் செய்திருக்கும் தந்திரோபாயங்களை ஊடறுத்து நாம் நம் தலைகளை உயர்த்த அமைப்பு ரீதியில் ஒன்று திரளவேண்டும்.  எமது பொருளாதார, அரசியல் தகுதியை அபிவிருத்தி செய்ய, ஐக்கியப்பட்டு உற்பத்தியிலும் அரசியல் நடவடிக்கையிலும் பங்காற்றவேண்டும்.மக்களிலிருந்து மக்களுக்கு என்ற ஜனநாயகத்தின் உயிரோட்டமான தத்துவத்தை நாம் அநுபவிக்கவேண்டுமாக இருந்தால் அரசியலில் எமது பங்களிப்பு தவிர்க்கமுடியாத நிலையை அடைந்துள்ளதை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். சமுதாயத்தின் முழுமையான மாற்றுப்போக்கிற்காக பெண்கள் நாம் ஒன்றிணைந்து எமது சக்தியை ஒன்றுகூட்டவேண்டும்.
 
அரசியல் தூசிகளும், கிருமிகளும் நமது சுத்தமான முகத்தை அழுக்குப்படுத்த அல்லது ஆரோக்கியமான நமது உறுப்புக்களை அரித்துத் தின்ன நாம் அனுமதித்துக்கொண்டிருந்ததனாலும், எமது தேவைக்குப் பொருந்தாத கருத்துக்களையும் கண்ணோட்டங்களையும் செவிசாய்த்து, புறக்கணிக்கத் தயங்கியதனாலுமே ஜனநாயகத்தின் கைகளை அதிகாரத்துடன் ஓங்கச் செய்துள்ளோம்.தூசிகள் படிந்துவிடுவதற்கு வழிசமைத்த நாம்தான் துடைப்பங்களாகி சுத்தப்படுத்துகின்ற காரியத்தை மேற்கொள்ளவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளோம். ஓடும் நீர் பாசி பிடிக்காது – கதவின் கீழ் துருப்பிடிக்காது என்ற பழமொழிகள் இடைவிடாத இயக்கம் கிருமிகளின் தாக்கத்திலிருந்து காக்கும் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
   

 

  

 

2 Comments on “கழுத்தை நெறிக்கும் அதிகார வழி ஜனநாயகத்திற்கு எதிராக பெண்கள் அரசியலில் பங்குபெற வேண்டும்”

  1. //அரசியல் தூசிகளும், கிருமிகளும் நமது சுத்தமான முகத்தை அழுக்குப்படுத்த அல்லது ஆரோக்கியமான நமது உறுப்புக்களை அரித்துத் தின்ன நாம் அனுமதித்துக்கொண்டிருந்ததனாலும், எமது தேவைக்குப் பொருந்தாத கருத்துக்களையும் கண்ணோட்டங்களையும் செவிசாய்த்து, புறக்கணிக்கத் தயங்கியதனாலுமே ஜனநாயகத்தின் கைகளை அதிகாரத்துடன் ஓங்கச் செய்துள்ளோம்.தூசிகள் படிந்துவிடுவதற்கு வழிசமைத்த நாம்தான் துடைப்பங்களாகி சுத்தப்படுத்துகின்ற காரியத்தை மேற்கொள்ளவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளோம். // நச்!

    வாழ்த்துக்கள் சகோதரி! 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *