விலங்குகளின் ஆட்சிக்காலம்
பாமதி அவுஸ்திரேலியா
பொய்யாய் கண்களை மூடி விழித்திருக்கிறோம்
எம் விழிப்பு அவர்களுக்கு தெரிந்தால்
என் தேசத்தின் ஒரு பிரஜை கொலையாளி ஆகலாம்.
கடந்த காலங்களில் ஆத்மாவுடன் வாழ்ந்தவர்கள்தான்
ஏனோ நாட்களாய் மாதங்களாய்
செதில்கள் முளைத்ததால் கொடியவர்களாய் போயினர்
விசர் நாய்களுக்கு மனித மாமிசத்தை போட்டு
வேட்டைக்கு வளர்க்கின்றனர்.
அழகான இறக்கைகளை பிய்த்து
பறவைகளை நிர்வாணமாய் பறக்கவிடுகின்றனர்
மிகக்குறைந்த சந்தர்ப்பங்களில் மாத்திரமே மேடைகளில் நின்று
சட்டைப்பைக்குள் உள்ள ஆத்மாவை தடவிக்கொண்டனர்
ஓவ்வொரு கணமும் யாரோ ஒருவர் தீர்மானிக்கப்டுவதும்
சிறைவைக்கப்ட்டு சேறடிக்கப்பட்டு
அசுத்தமாக பிரகடனப்படுவதும்
அடையாளப்படுத்தப்பட்ட பின் துரத்தியடிக்கப்படுவதும் சகஜம்
சொல்லப் போனால் நண்பர்களை எதிரிகளுக்குள்ளும்
எதிரிகளை நண்பர்களுக்கும் தொலைத்துவிட்டது நட்பு
எல்லோரின் விம்பங்களிலும் படர்ந்து தெரியும் குண்டர்களின் நிழல்
கைக்குண்டு செய்யும் வித்தையை எல்லோரும் அறிந்திருக்கின்றனர்.
நண்பர்களும் எதிரிகளும் முகமூடிக்குள்
வாந்திக்கு பின்பு வரும் உமிழ்நீர்போல் கசப்பாக…
பொய்யாய் தெரிந்தும் தெரியாதது போல்
கண்களை மூடி விழித்திருக்கிறோம்.
2001

மிகக் கசப்பான ஒரு யதார்த்தத்தின் பதிவு. உயிர் வாழ்தலுக்காய் ஆத்மாவை இழந்து வெறுமனே “இருந்து” தொலைக்கும் சமூக யதார்த்தம் உணர்வுபூர்வமாய் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்!