பதிவும் படங்களும்- சு.குணேஸ்வரன்
கிழக்குப் பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் பயிலும் பல்கலைக்கழக மாணவர்களின் ஆற்றுகைக் கலையும் கலந்துரையாடலும் 19.02.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை பருத்தித்துறை அறிவோர் ஒன்றுகூடலில் ஏற்பாடு செய்யப்பட்டது.
கலாநிதி சி. ஜெயசங்கர் தலைமையிலான கிழக்குப் பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் விரிவுரையாளர்களும் மாணவர்களும் நிகழ்த்திய மேற்படி நிகழ்விலகண்டியரசன் தென்மோடிக்கூத்திலிருந்து சில ஆட்டமுறைமைகள், (அரசன் மந்திரி வரவு, தோழிமார் பூப்பறிக்கச் செல்லுதல்) மழைப்பழம் சிறுவர் கூத்துப் பாடல்கள், வடமோடி மற்றும் தென்மோடி அரசர் வருகைப்பாடல் ஆட்டமுறைமைகள் என்பன நிகழ்த்திக் காட்டப்பட்டன.
பா. இரகுவரன் மற்றும் து. குலசிங்கம் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துரையாடலும் இடம்பெற்றது. நன்றியுரையை கந்தையா ஆசிரியர் நிகழ்த்தினார். மிக வித்தியாசமான ஒரு சந்திப்பாக; வட்டக்களரி அமைப்பில் இயற்கைச் சூழலில் நிகழ்ந்த இந்த நிகழ்வு மனதுக்கு நிறைவைத்தருவதாக அமைந்திருந்தது.
நிகழ்வில் இருந்து சில படங்களைத் தருகிறேன். ஜெயசங்கர் அவர்களின் உரையாடல் மற்றும் ஆற்றுகைக் காணொளிகளையும் தொடர்ந்து பதிவேற்றும் எண்ணம் உள்ளது.
ஊடறுவில் நிகழ்வினைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
நம் கலைப் பொக்கிஷம், மிக்க மகிழ்ச்சி, இவ்வாறான பதிவுகளும்- நமது கலைஞரின் வாழ்வினை மேம்படுத்த எடுக்கின்ற முயற்சிகளும்- வரவேற்கப்படவேண்டியதே. வளர்க நாம் பாரம்பையக் கிராமியக் கலைகள்….