தமிழர்களின் அடையாளங்களை ஏற்று அங்கீகரிக்கும் அரசியல் தீர்வே தேவை

Centre for Policy Alternatives

(இல் வெளிவந்த இந்தக் கட்டுரையை ஊடறுவுக்காக சந்தியா (யாழ்ப்பாணம் ))

—-

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழு (LLRC) வெளியிட்ட அறிக்கை

llrc1

 இலங்கை. மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழு (LLRC) ) வெளியிட்ட அறிக்கையையும், முரண்பாட்டு மோதலின் மூலகாரணங்கள் சம்பந்தமான அதன் பகுப்பாய்வையும், எல்.ரி.ரி.ஈ. அமைப்பின் கொடுமைகள் சம்பந்தமான எடுத்துரைப்புகளையும், ஆட்சிமுறை சம்பந்தமான விதந்துரைப்புகளையும் – விசேடமாக, தற்போதுள்ள நிறுவனங்களின் அரசியல்மயப்படுத்தலை இல்லாதொழிப்பதுகுறித்தும், தகவல் உரிமைக்கான சட்டவாக்கத்தை அறிமுகஞ்செய்வது குறித்தும், மொழி உரிமைகள் மற்றும் மீளிணக்கம்குறித்தும், இராணுவமயமாக்கல், கருத்து வெளியிடுதல் சுதந்திரத்துக்கெதிரான தாக்குதல்கள்குறித்தும், ஒளியலை நான்கு (Channel four) ஆவணத்திலுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணைசெய்வதுகுறித்தும், ஆட்கள் காணாமற் போனமை மற்றும் சிவிலியன் மக்களின் மரணங்களுக்குக் காரணமானவர்களை விசாரணைசெய்து, அவர்களுக்கெதிராக வழக்குத் தொடருவதுகுறித்தும் செய்யப்பட்டுள்ள விதந்துரைப்புகளையும் வரவேற்கின்றது. அரசாங்கத்துடன் இணைப்புள்ள பெயர் குறிப்பிடப்பட்ட தனிநபர்களும், அமைப்புகளும் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஒட்டுப்படை நடவடிக்கைகள் சம்பந்தமாக விசாரிக்கப்படவேண்டுமென்றும், எல்.ரி.ரி.ஈ. அமைப்பினால் வெளியேற்றப்பட்ட வடபகுதி முஸ்லிம்கள் சம்பந்தமாகவும், மலைநாட்டுத் தமிழ் மக்கள் சம்பந்தமாகவும் உரிய, பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் ஆணைக்குழுவினால் செய்யப்பட்டுள்ள விதந்துரைப்புகளையும் நாம் வரவேற்கின்றோம். இந்த இரு ஜனசமூகங்களினதும் நிலைமைக்கு இந்த ஆணைக்குழு வழங்கியுள்ள கவனம் இலங்கை மக்களுக்கு மீளிணக்கம் என்னும் நடுநாயகமான பிரச்சினைகுறித்த அறிக்கையின் அர்த்தப்பொதிவை வலுப்படுத்துகின்றது. ஆணைக்குழுவின் முன்பாக அறிக்கப்பட்ட சாட்சியங்களும், விசாரணை நடவடிக்கைகளின் பதிவேடுகளும் எதிர்காலச் சந்ததியினரின் நன்மைக்காகப் பாதுகாத்து வைக்கப்பட வேண்டுமென்று நாம் தீவிரமாக வலியுறுத்துகின்றோம்.

llrc1

 

ஆணைக்குழுவின் பணிப்பாணை மற்றும் அதன் அங்கத்தவர்கள் சம்பந்தமாகவும், ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் கடந்தகால வரலாறுகள் காரணமாகவும், விசேடமாக அவற்றின் விதந்துரைப்புகள் இந்த LLRC ஆணைக்குழுவின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வெளியிடப்படாமை மற்றும்; நடைமுறைப்படுத்தப்படாமை காரணமாகவும் CPA இந்த ஆணைக்குழுவின் முன்பாகச் சாட்சியமளிக்கச் செல்லவில்லை. எவ்வாறாயினும், LLRCயினால் செய்யப்பட்ட பல அவதானிப்புரைகளும், விதந்துரைப்புகளும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினாலும், ஏனைய சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களினாலும் ஆட்சிமுறையின் நிலை, இலங்கையில் தண்டனைப் பயமின்மைகுறித்த கலாசாரம் மற்றும் குறிப்பாக, மனித உரிமைகள் பாதுகாப்புச் சம்பந்தமாக மேற்கொண்ட விதந்துரைப்புகளை மேலும் வலியுறுத்துவனவாகவே அமைந்துள்ளதை நாம் அவதானிக்கின்றோம். ஜனாதிபதி ஆணைக்குழு இக்கருத்துகளை அங்கீகரித்துள்ளமை சிவில் சமூகத்தின் இந்த விமர்சனத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதோடு, மிகவும் அவசரமான தேசிய முன்னுரிமை விடயமாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள விடயப்பரப்புகளிலான டுடுசுஊயின் விதந்துரைப்புகளை நம்புதகவுள்ள வழியிலும், பயனுறுதியுள்ள வழியிலும் நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றது. இது, டுடுசுஊ எடுத்துரைத்துள்ளதுபோன்று, ஆணைக்குழுவின் இடைக்கால விதந்துரைப்புகளை இலங்கை அரசாங்கம் ப+ரணமாக நடைமுறைப்படுத்துவதற்குத் தவறியமை காரணத்தாலும் மேலும் முக்கியத்துவம ; பெறுகின்றது.

ஐ.நா. செயலாளர் நாயகத்தின் மதியுரைக்குழுவின் அறிக்கை வெளியாகியதைத் தொடர்ந்தும், எல்.ரி.ரி.ஈ. அமைப்புக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் எதிராகச் செய்யப்பட்ட யுத்தக் குற்றங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட( IHL) மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் சம்பந்தமாகச் சர்வதேச விசாரணைகள் அவசியமென்று குரல்கள் ஒலிக்கத் தொடங்கிய பின்னரும் இலங்கை அரசாங்கம் LLRCயின் அறிக்கை அதை விமர்சிப்பவர்களுக்கு உரிய பதிலை வழங்குமென்று கூறிவந்துள்ளது. இந்த விடயத்துக்கு நடுநாயகமாக உள்ள விடயம் முரண்பாட்டு மோதலின் இறுதிக் கட்டத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதைத் தீர்மானிப்பதும், வகைப்பொறுப்பு சம்பந்தமான பிரச்சினையுமாகும். ஆரம்பத்திலேயே டுடுசுஊக்கு மனித உரிமைகள் அல்லது சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ளும் பணிப்பாணை வழங்கப்படவில்லை என்பதையும், 2001ஆம் ஆண்டில் போர் நிறுத்த உடன்படிக்கை ஏன் செயலிழந்தது என்பதைப் பரிசீலனைசெய்யும் பணியே அதற்கு வழங்கப்பட்டது என்பதையும் கவனிப்பது அவசியமாகும். LLRC தனக்குச் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் உண்மையை நிர்ணயம்செய்வது அனேகமாக முடியாத விடயமாக உள்ளதென்றும், மேலும் முக்கியமாக, இந்த நேரத்தில் பெறக்கூடிய தகவல்களின் பிரகாரம் நிலைமை அவ்வாறே உள்ளதென்றும் முடிவுசெய்துள்ளது.

 

disappearence_Jaffna_03ஆணைக்குழுவுக்குக் கிடைக்கக்கூடிய தகவல்கள் சம்பந்தமான மட்டுப்பாடுகள் இருந்த வேளையிலும், ஆணைக்குழு சிவிலியன்களை எந்தவேளையிலும் இலக்குவைப்பது இலங்கை அரசின் நோக்கமாக இருக்கவில்லை என்று தெளிவாகக் கூறுகின்றது. சில விடய நிகழ்வுகளில் சிவிலியன்களின் மரணங்கள், யுத்தக் குற்றங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்களுக்கான பொறுப்பைத் தீர்மானிப்பதற்கு மேலும் விசாரணைகள் அவசியமென்று கூறியுள்ளபோதிலும், ‘இது தீங்கு விளைவிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் செய்யப்படாத விடயமாக இருக்கலாம்” என்றும் கூறுகின்றது. இது அரசியல் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளிலுள்ள சிரே~ட உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளின் சாட்சியங்களை எதிரொலிக்கும் ஒரு முடிவாகவே உள்ளது. இந்த முடிவு மேலதிக சிவிலியன் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள வகைசெய்யும் சாட்சி மற்றும் பாதிக்கப்பட்டவர் பாதுகாப்பு வழிமுறையமைப்பு எதுவும் இல்லாதநிலையில், யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் என்ன நடந்தது என்பது சம்பந்தமான ஒரு ப+ரணமான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு செயல்முறையினூடாகவே செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆணைக்குழு முன்பாகச் சாட்சியமளித்த சிவிலியன்களுக்கு ஏற்பட்ட க~;டங்கள் மற்றும் பின்னர் இடம்பெற்ற தொல்லைகள் மற்றும் ஆணைக்குழுவுக்கு வாய்மூல சாட்சியங்களைச் செய்வதற்குச் சிவிலியன்களுக்கு வழங்கப்பட்ட நேரம் போதாமை என்பவற்றையும் அவதானிப்பது முக்கியமானதாகும். மேலும் முக்கியமாக காணாமற்போன மற்றும் கொல்லப்பட்ட ஆட்களின் குடும்பங்களைச் சேர்ந்த பலர் தாம் எதிர்நோக்கிய இடர்கள் மற்றும் ஆபத்துக்களைப் பொருட்படுத்தாது ஆணைக்குழு முன் வந்து சாட்சியமளித்தமை பாதிக்கப்பட்ட ஜனசமூகத்தின் கருத்துகள் செவிமடுக்கப்பட வேண்டும் என்பதற்கான தீவிர தேவையையும், சமூக மட்டத்தில் நீதிக்கும், வகைப்பொறுப்புக்குமான அவசரத் தேவையையும் வலியுறுத்துவதாகவே உள்ளது.

 

மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் ஆயுதப் படைகளின் நோக்கங்கள் சம்பந்தமான முடிவு ஏமாற்றமளிப்பதாகவே உள்ளதென்று எண்ணுகின்றது. அது விசாரித்துவிட்டு அவற்றை அப்படியே கிடப்பில் போடுவதற்குப்; பதிலாக, ஒரு சர்வதேச விசாரணை அவசியமென்ற கோரிக்கைகளை மேலும் பலப்படுத்துவதாகவே அமைகின்றதென்று நாம் தீவிரமாக நம்புகின்றோம். ஆட்சிமுறை மற்றும் சட்டத்தின் ஆட்சிகுறித்த தற்போதைய நிலைமை, பொலிஸ் படையைப்; பாதுகாப்புத் துறையிலிருந்து பிரிப்பதற்கான தேவை மற்றும் பயனுறுதியைப் பொறுத்தவரையில் 17வது திருத்தத்தையும், ஏனையவற்றுடன் சேர்த்து பொலிஸ் மற்றும் பொதுச் சேவைக்கான சுயாதீன ஆணைக்குழுக்களை ஏற்படுத்துவதும் குறித்த LLRCயின் விமர்சனங்களும் இக்கோரிக்கைகளை மேலும் வலுப்படுத்துகின்றன. LLRCயினால் விபரிக்கப்படும் ஆட்சிமுறை நிலைமையும், சட்டத்தின் ஆட்சியும், விசாரணைகளில் ஈடுபடும் நிறுவனங்களின் நேர்மைத்திறன் மிகவும் பாதிப்புற்ற நிலையில் ஆணைக்குழு விதந்துரைக்கும் தேசிய அளவிலான விசாரணைகளை எவ்வாறு சாத்தியமாக்கும் என்பது புரியாத விடயமாகவுள்ளது. LLRC விதந்துரைக்கும் இந்த ‘சுயாதீன” மற்றும் ‘முறையான” ‘விசாரணைகள்” குறித்த வெளிப்படையான வழிகாட்டல்கள் இருந்திருப்பின், அவை இந்த விதப்புரைகளை மேலும் வலுவுள்ளவையாகவும், அர்த்தமுள்ளவையாகவும் ஆக்கியிருக்கும்.

 disappearence_Jaffna_02

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின்போது வன்னியில் இருந்த சிவிலியன்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கான உணவு மற்றும் வைத்திய வசதிகள் வழங்கப்பட்டமைகுறித்த பிரச்சினையை இந்த ஆணைக்குழு கையாண்ட விதம் எமக்கு ஏமாற்றமளிப்பதாகவுள்ளது. இந்த விடயத்தில் அந்த வேளையில் பாதிப்புற்ற சிவிலியன்களுடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருந்த சர்வதேச, அரசாங்க மற்றும் அரச
சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்கள் வழங்கிய தகவல்கள் போதியளவு சரியான மூலங்களிலிருந்து பெறப்படவில்லையென்பது எமக்குக் கவலையளிப்பதாகவுள்ளது. இக்கவலை இப்பிராந்தியத்திலுள்ள சிவிலியன் நிர்வாகத்திலிருந்து கிடைத்த தரவுகளையும் உள்ளடக்குவதாகவுள்ளது. சரணடைய வந்;த எல்.ரி.ரி.ஈ. அதிகாரிகளைக் கொன்றது சம்பந்தமான ‘வெள்ளைக்கொடி விவகாரம”, உயர் பாதுகாப்பு வலயங்களின் சட்டநிலைத்தகவு மற்றும் அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும்வகையில் ஏறக்குறைய 300,000 சிவிலியன்களை மெனிக் பாம் முகாமிலும் ஏனைய இடங்களிலும் அடைத்துவைத்தமை என்பவையும், சமீபத்தில் வெளியிடப்பட்ட காணிச் சுற்றறிக்கையும் மீளிணக்கத்தின்மீதும் மற்றும் யுத்தக் குற்றங்கள் சம்பந்தமான குற்றச்சாட்டுக்கள்மீதும் அவை கொண்டுள்ள தாக்கங்கள் காரணமாகப் ப+ரணமாக விசாரிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
இந்த விடயங்கள் சம்பந்தமான நம்பிக்கையீனங்கள் ஒருபுறமிருக்க, தாமதமின்றி LLRCயின் விதந்துரைப்புகளை நேர்மையோடும், உண்மையில் பன்மைத்துவம்கொண்ட ஐக்கிய இலங்கை என்னும் அபிலாi~க்குரிய குறியிலக்குக்கான அர்ப்பணிப்புணர்வுடனும் தாமதமின்றி நடைமுறைப்படுத்துமாறு நாம் இலங்கை அரசாங்கத்தை வேண்டிக் கொள்ளுகின்றோம். LLRCயின் அறிக்கை ஒரு மீளிணக்கச் செயல்முறையின் ஆரம்பமென்றும், அதன் முடிவு அல்;லவென்றும் நாம் நம்புகின்றோம். மேலும், இலங்கை அரசாங்கமே இச்செயல்முறையில் முன் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென்று, குறிப்பாக அதிகாரப்பகிர்வு அடிப்படையிலான ஓர் அரசியல் மற்றும் அரசியலமைப்புத் தீர்வை எட்டவேண்டுமென்றும், இது ‘இனப்பிரச்சினை மற்றும் ஜனநாயக நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஏனைய பாரதூரமான பிரச்சினைகளுக்கும்” தீர்வாக அமைய வேண்டுமென்றும் இந்த ஆணைக்குழு மிகத்தெளிவாக எடுத்துரைக்கின்றது. ஏனைய விடயங்களைப் போலவே இது விடயத்திலும் டுடுசுஊயின் விதந்துரைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்தின் உறுதி உதாரண நிலையில் ஒரு பாரிய மாற்றத்தை அவசியப்படுத்துகின்றது என்பதையும் நாம் எடுத்துரைக்கின்றோம்.

 இந்;த விடயம் ஒரு தேசிய முன்னுரிமை விடயமாக மேற்கொள்ளப்படவேண்டுமென்று நாம் பலமாக வலியுறுத்துவதோடு, 2012இலும் அதற்கு அப்பாலும் காத்திரமான, எடுத்துக் காட்டக்கூடிய முன்னேற்றத்தைக்கொண்ட மீளிணக்கமும், வகைப்பொறுப்பும், மனித உரிமைகள் பாதுகாப்பும் இடம்பெறுமென்று எதிர்பார்க்கின்றோம். இது யுத்தத்துக்குப் பின்னர் என்ற நிலையிலிருந்து முரண்பாட்டு மோதலுக்குப் பின்னரான நிலைமை என்னும் ஒரு நிலைமாற்றத்துக்கும், அவை குறிப்பிடும் நிலையான சமாதானத்துக்கும், ஐக்கியத்துக்கும் தீர்மானகரமானதாகும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *