இறுதியாக அவ்வாறன ஒரு நாளில் தமிழ் தேசத்தின் விடுதலைக்காக போராடி மரணித்த சகல போராளிகளையும் நினைவு கூறுகின்ற நிகழ்வாக இவ்வாறான நினைவு நாட்களை நடாத்துவதே சிறந்தது. இதுவே நாம் நேர்மையாகவும் உண்மையாகவும் போராடி மரணித்தவர்களை மதித்து மரியாதை செய்கின்ற நினைவு நிகழ்வாக இருக்கும்.இருக்கவும் முடியும் |
பல இடங்களில் ஏற்கனவே குறிப்பிட்டது போல் நான் ஒரு இலக்கியவாதி அல்ல. அதிலும் கவிதை என்பது புரியவும் புரியாது மட்டும்ல்ல சுட்டாலும் எனக்கு வராதது. ஆகவே கவிதை மற்றும் இலக்கிய நூல் வெளியீடுகளுக்கு செல்வதில்லை. அப்படிச் சென்றிருந்தாலும் அதற்கு வேறு ஒரு காரணம் அல்லது காரணங்கள் இருந்திருக்கும். அப்படியான பல காரங்களில் ஒரு காரணம் தான் “பெயரிடாத நட்சத்திரங்கள்” என்ற கவிதை நூல் வெளியீட்டு நிகழ்விற்கும் நான் செல்வதற்கு காரணமாக இருந்தது. கடந்த மாதம் செல்வியின் கூட்டத்திற்கு எந்த உணர்வில் சென்றேனோ அதே உணர்வினால் உந்தப்பட்டே இக் கூட்டத்திற்கும் சென்றேன். அடக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக போராடி மரணித்தவர்களது மரணம் மதிக்கப்படவும் நினைவு கூறப்படவும் வேண்டும் என்ற (அரசியல்) உணர்வுதான் இதற்கு அடிப்படை. கூட்டத்திற்குப் போகும் பொழுது அதைப் பற்றி எழுதும் நோக்கம் இருக்கவில்லை. ஆகவே குறிப்புகள் ஒன்றும் எடுக்கவில்லை. ஆனால் கூட்டத்தில் கலந்து கொண்டுஇ அங்கு முன்வைக்கப்பட்ட உரைகளைக் கேட்டபின் இது எழுத்தில் பதியப்பட வேண்டியது அவசியமானது என என் உள்ளுணர்வு கூறியது. ஏனனில் இந்த நிகழ்வும் அங்கு முன்வைக்கப்டட கருத்துக்களும் அரசியல் ரீதியாக முக்கியத்துவமுடையது எனக் கருதுகின்றேன். ஆகவே இக் குறிப்பை எனது நினைவுகளில் இருந்து மட்டுமே; எழுதுகின்றேன். தவறுகள் இருப்பின் பங்குபற்றியவர்கள் சுட்டிக்காட்டலாம். ஆல்லது பின்னுட்டங்களாக தங்கள் கருத்தை வெளியீடலாம்.
வம்பர் மாதம் ஈழத்து தமிழர்களுக்கு குறிப்பாக ஈழத் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்துடன் ஈடுபாடுள்ளவர்களுக்கு அதிலும் குறிப்பாக விடுதலைப் புலிகள் முன்னெடுத்த போராட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கும் அதை ஆதரித்தவர்களுக்கும் மிக முக்கியமான மாதம். ஏனனில் கடந்த பல ஆண்டுகளாக இந்த மாதம் மாவீரர் தினமாக நினைவு கூறப்பட்டு வந்தது. 2008ம் ஆண்டுவரை ஈழத்தில் உணர்வு மற்றும் உணர்ச்சி பூர்வமாக நினைவு கூறப்பட்டது. ஆனால் புலம் பெயர்ந்த தேசங்களில் இந்த நிகழ்வுவானது உணர்ச்சிபூர்வமான ஆடம்பரமான பண வசுலிப்பு விழாவாகவே அன்றிலிருந்து இன்றுவரையும் கொண்டாடப்பட்டு வருகின்றது. (மரணித்த போராளிகளின் புலம் பெயர்ந்த உறவுகளை இங்கு குறிப்பிடவில்லை). இப்பொழுது இவர்களுக்குள் பல பிரிவுகள். யுhர் மக்களிடம் அதிகம் பணம் வசுலிப்புது என்பதிலும் மற்றும் யார் உண்மையான புலிகளின் வாரிசுகள் என நிறுபிப்பதற்காகவும் தலைமைத்துவத்திற்காகவும்; போட்டி போட்டு இவ்வாறான நினைவு நிகழ்வை நடாத்துகின்றார்கள். இப்படி ஒரு புறம் தேச விடுதலையையும் அதற்க்காக இறந்தவர்களையும் அவமதித்துக் கொண்டிருக்கின்றார்கள் முன்னால் (புலம் பெயர்ந்த) புலிகள் அல்லது புலிகளின் ஆதரவாளர்கள்.
இப்படியான ஒரு சூழலில் இன்னுமொரு புறம் எந்த விதமான ஆடம்பரமுமின்றி அமைதியான முறையில் ஒரு நிகழ்வு நடந்தேறியது. அது “பெயரிடாத நட்சத்திரங்கள்” என்ற விடுதலைப் புலிகளில் போராளிகளாக இருந்து மரணித்த பெண் கவி(ஞர்)ஞைகளின் நூல் வெளியீடு. இந்த நூலை பெண்களின் இணையமான ஊடறுவும் மற்றும் விடியல் பதிப்பகமும் இணைந்து பதிப்பிதிருந்தது. காலம் சஞ்சிகையின் ஆதரவில் இதற்கான நிகழ்வு டொரன்டோ கனடாவில் நடந்தது. இந்த நூல் வெளியீட்டு நிகழ்வானது மரணித்த சகல போராளிகளுக்கும் குறிப்பாக பெண் போராளிகளை நினைவு கூறும்வகையிலும் அவர்களது மரணங்களுக்;கு மரியாதை செலுத்தும் வகையில் உணர்வுபூர்வமாக நடந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நூல் வெளியீட்டின் மூலம் கிடைக்கின்ற பணத்தை முன்னால் பெண் போராளிகளுக்கு உதவும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என் அறிவித்துமிருந்தார்கள். இவ்வாறான ஒரு நிகழ்வை கௌசல்யா அவர்கள் தலைமை தாங்கி நடாத்தினார்.
இவ்விழாவை ஒழுங்குபடுத்தியவர் என்ற வகையில் அதற்கான அறிமுகத்தை காலம் செல்வம் செய்தார். அவர் கூறும்பொழுது இந்த நுர்லை; வெளியீடும்படி ஏன் என்னைக்; கேட்டார்கள் என எனக்குத் தெரியாது. வேறு யாரிடமும் கேட்டிருந்தால் இதைவிட அதிகமான கூட்டத்தினரோடு மிகவும் ஆடம்பரமாக நடத்தப்பட்டிருக்கலாம். இருப்பினும்; கடந்தகாலங்கிளில் இலக்கிய மற்றும் அரசியல் செயற்பாடுகளில் பங்கு கொண்டவர் என்ற முறையில் இதைச் செய்வதற்கான தார்மீக பொறுப்பும் உரிமையும் ஆத்ம பலமும் தனக்கு உள்ளதாக கூறினார். மேலும் தமிழ் வரலாறு என்பது தமிழ் இலக்கிய வரலாறு. தமிழ் இலக்கிய வரலாறு என்பது தமிழ்க் கவிதையின் வரலாறு என்றார். இந்த வரலாறு ஆண் கவிஞர்களால் மட்டுமே; பெரும்பாலும் ஆளப்பட்டு வந்தது. இதனால் தமிழ் கவிதையின் வராற்றில்இ பெண் கவி(ஞர்)pஞைகள் எந்தளவு ஒடுக்கப்பட்டார்கள் என்பதையும் அதையும் மீறி எழுதிய பெண் கவி(ஞர்)ஞைகள் “தேர் சில்லுகளில் ஒட்டியிருக்கும் பல்லிகள்” போல தாம் எந்தளவு கீழ்மையாக இருந்தார்கள் என்பதை பதிவு செய்துள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டினார். மேலும் பொதுவாக கவி(ஞர்)ஞைகள் தமது கவிதையில் காதல் மற்றும் பிரிவு போன்ற உணர்வுகளையே பெரும்பாலும் பதிவு செய்து வந்தனர். ஆனால் நமது ஈழத்துப் பெண் போராளி கவி(ஞர்)ஞைகளால்;தான் தமிழ் கவிதையின் வரலாறு புதிய திசையில் பயணிக்க ஆரம்பித்தது. இவர்கள் தமது கவிதைகளில் பெண்ணின் வீரத்தையும் தமது உணர்வுகளையும் சகிப்புகளையும் மட்டுப்படுத்தல்களையும் கனவுகளையும் இலட்சியங்களையும் தோழமை உணர்வுகளையும் மட்டுமல்ல ஆண்களுக்கு நிகராக ஆயுதம் தூக்கிப் போராடியதையும் பதிவு செய்து சென்றுள்ளார்கள் என தனக்கே உரித்தான அழகான ஒரு அறிமுகக் குறிப்பை கவிதை உதாரணங்களுடன் முன்வைத்தார்.
கௌசல்யா அவர்கள் இந்த நுர்லிலின் முக்கியத்துவத்தையும் பெண் போராளிகள் ஏன் நினைவு கூறப்படவேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார். இந்த நூல் இயக்கங்களுக்கு அப்பாற்பட்டுப் போராடிய அனைத்து பெண்களையும் நினைவு கூறி அவர்களை மதித்து மாரியாதை செய்கின்ற ஒரு குறியிடு ஆகும். பெண்கள் உணர்வுகள் சார்ந்து அகவயாமாக சிந்திப்பவர்கள் என்பதை இந்த நூல் வெளிக்கொண்டு வருகின்றது. மேலும் ஆண்களைப் போல போராட்டத்தின் சகல அம்சங்களில் பங்குகொண்டு சகலவிதமான சூழுல்களிலும் வாழந்தவர்கள். ஆனால் ஆண் போராளிகளை விட பெண் போராளிகள் அதிகமான படைப்பிலக்கியங்களையும் படைத்துள்ளமை அவர்களது பன்முக ஆற்றலை நிறுபிக்கின்றது எனக் கூறினார். மேலும் படைப்பாளிகள் என்பவர்கள் தன்னை உணர்கின்றவர்களாகவும் மனிதம் சார்ந்தும் சிந்திக்கவும் செயற்படவும் வேண்டும். ஆனால் புலம் பெயர்ந்த படைப்பாளிகள் தாம் வெளியீடுகின்ற நூலின் எண்ணிக்கையைக் கொண்டே தம்மை சிறந்த படைப்பாளிகளா கருதி விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இவ்வாறன விமர்சனங்கள் விமர்சனத்திற்குரியதும் விசனத்திற்குரியது என்றார். இறுதியாக இந்தப் போராளிகளின் நூலை வெளியீடுகின்ற தகுதி நமக்கு இருக்கின்றதா என்று நமக்குள் கேட்கின்ற போதும் இவர்களின் படைப்புகளை வெளிக்கொண்டுவரவேண்டியது நமது பொறுப்பு எனவும் கூறினார்.
இந்த நூல் தொடர்பாக தமது கருத்துக்களை பதிவு செய்த பார்வதி கந்தசாமிஇ சுல்பிகா மற்றும் அருண்மொழிவர்மன் ஆகியோர்; மூன்று அடிப்படைகளில் இதை ஆய்வு செய்தனர் எனக் கூறலாம். இந்த மூவரின் பேச்சுக்களும் எழுத்தில் பதியப்பட வேண்டியது அவசியமானது என்றே கருதுகின்றேன்.
மூன்றாவதாக கருத்துக் கூறிய எழுத்தாளரும் விமர்சகருமான அருண்மொழிவாமன் வழமையைப் போல உணர்ச்சிப+ர்வமாக தனது கருத்தை முன்வைத்தார். பல விடயங்களைச் சுட்டிக்காட்டினார். இவர் இந்த நிகழ்வில் வாசித்த முழுமையான உரையையும்இ “ஈழப் பேராட்டத்தில் பெண் புலிகள்” என்றை தலைப்பில் பின்வரும் (இணைப்பில் நீங்கள் வாசிக்கலாம். இவர் முன்வைத்த பல கருத்துக்கள் தொடர்பாக எனக்கு விமர்சனங்கள் உள்ளன. அதைக் இக் கட்டுரையின் இரண்டாம் பகுதியில் எழுதுகின்றேன்.
இரண்டாவதாக கருத்துக் கூறிய சுல்பிகா பெண் போராளிகளின் உணர்வின் அடிப்படையிலும் முதலாவதாக நுர்லை அறிமுகம் செய்த பார்வதி கந்தசாமி அவர்கள் சமூக மற்றும் பெண்ணிய பார்வையிலும் தமது கருத்துக்களை முன்வைத்தனர். இவர்களது கருத்துக்கள் அருண்மொழிவர்மணின் சில கருத்துக்களுக்கான குறிப்பான பதில்களாகவே இருந்தன என உணர்கின்றேன். இதன் காரணமாகவே உரையை முன்வைத்தவர்களின் வரிசையையும் இக் கட்டுரையில் மாற்றி வைத்துள்ளேன்.
கவிஞை சுல்பிகா தனது கருத்தை போராளிக் கவி(ஞர்)ஞைகளின் உணர்வுகளினடிப்படையில் உணர்வுபூர்வமாக முன்வைத்தார். இவர் போராளி கவி(ஞர்)ஞைகளின் நினைவலைகள்இ உணர்வுகள்இ உணர்ச்சிகள் எவ்வகையானது என்பதையும் அவற்றை இரு பெரும் பரிவுகளாக பிரிக்கலாம் என்பதையும் அவர்களின் கவிதைகளை உதாரணம் காட்டுவதனுடாக கூறினார். ஆவையாவன முதலாவது விடுதலை வேட்கையுடன் தொடர்பாக எழுகின்றவையும் இரண்டாவது தமதும்இ தான் சார்ந்த சமூகத்தினதும் இருப்பு வாழ்தல் தொடர்பானவை எனப் பரிக்கின்றார். முதலாவது வகை சார்ந்து வைராக்கியம்,திடம், உறுதி நிலைப்பாடு, காப்புணர்வு, வன்மம், பழிக்குப்பழி போன்றவையும் இரண்டாவது வகை சார்ந்து ஏக்கம், வெறுப்பு, சுயபரிதாபமும் சுயஇரக்கமும் காதலுணர்வும் களிப்புணர்வும் போன்றவையும் மிகப்பரவலாகவும் காத்திரமாகவும் ஆழமாகவும் எல்லோரது கவிதைகளிலும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வாறு ஓன்றுக்கொன்று எதிரான, சாதகமானதும் பாதகமானதுமான மன வலிமைக்குரிய விசைகளுக்குள் அவர்கள் போராடியிருக்கிறார்கள் என்பதை நோக்குதல் வேண்டும் என்றார்.
நூலை அறிமுகம் செய்து வைத்து முதலாவதாக உரை நிகழ்த்திய பார்வதி கந்தசாமி சமூக மற்றும் பெண்ணியப் பார்வையுடனும் விமர்சன அடிப்படையில் இந்த நூலை ஆய்வு செய்தார். இவர் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் ஆரம்பத்தில் எப்படி பார்க்கப்பட்டனர், பின் எப்படிப் பயன்படுத்தப்பட்டனர் எனவும் குறிப்பிட்டார். ஆரம்பத்தில் சோப்பு சீப்பு விற்பவர்களாகவும் பின்பு அரசியல் பிரச்சாரங்களுக்கும் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் பிற்காலங்களில் படையணிகளில் ஆண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமையும் மேலதிக எண்ணிகை தேவைப்பட்டமையும் போராளிகளாக பெண்களை ஏற்றுக் கொள்ளவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டது என்றார். இது எந்தவகையிலும் பெண்களின் போராட்ட உணர்வையும் அரசியல் புரிதலையும் குறைந்து மதிப்பிடுவதாகாது. ஏனனில் பெண் போராளிகளின் உறுதியானதும் ஆண்களுக்கு நிகரான அல்லது அதற்கும் மேலான பங்களிப்பினாலும் செயற்பாடுகளினாலும்; அவர்களின் முக்கியத்துவம் தமிழ் இயக்கங்களில் குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உணரப்படலாயிற்று என்றார். ஆனால்இ மறுபுறம் புலிகளின் தலைமைத்துவமானது தம் அமைப்புடன் உடன்படாத செல்வியைப் போன்ற தனித்துவமான பெண்ணிய மற்றும் சமூக அரசியல் செயற்பாட்டாளர்களை செயற்பட விடாது அழித்துமிருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டினார். இந்த முரண்பாடு புரிந்துகொள்ளப்படவேண்டியதும் குறிப்பிடப்பட வேண்டியதும் எனக் கூறினார்.
மேலும் பார்வதி அவர்கள் குறிப்பிடும் பொழுது இந்த நூலில் கவிஞை என்ற புதிய சொல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது என்றார். இதுவைரயான தமிழ் கவிதையின் வரலாற்றில் ஆண்கள் மட்டுமே அதிகாரதம் செலுத்தி வந்தமையால் ஆண்கள் மட்டுமே; கவிதை எழுதுபவர்களாகவும் ஆகவே கவிஞன் என்ற சொல் பொதுவாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது என்றார். ஆனால் இன்றைய சுழல் பெண் கவிஞைகளின் வரவு அதிகமாகவும் அவர்களது எழுத்துக்கள் காத்திரமாகவும் இருக்கின்ற இன்றைய சுழலில் கவிஞை போன்ற ஆண் அடையாலமற்ற புதிய சொற்களின் வரவின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டார். அதேவேளை நாம் பொதுப் பாலாக கவிஞர் என்ற சொல்லை இரண்டு பாலினருக்கும் பயன்படுத்தலாம் என்றார். இது தொடர்பாக குறிப்பு கூறிய கௌசல்யா இந்த நூலில் பெண் கவிஞைகளிள் படைப்புகள் மட்டுமே; தொகுக்கப்பட்டுள்ளன. ஆகவே கவிஞை எனப் பயன்படுத்துவது சரியானது எனக் குறிப்பிட்டார். எனது பார்வையில் கவிஞை என்ற புதிய சொல் வரவேற்கத்தக்க ஒன்றே. ஆனால் கவிஞர் எனப் பொதுவாகப் பயன்படுத்தும் பொழுது ஆண் பெண் என்ற அடையாப்படுத்தலை தவிர்க்கலாம் என்றே நினனைக்கின்றேன். இருப்பினும் தமிழ் சுழலில்; கவிஞை என்ற சொல்லின் முக்கியத்துவம் உணரப்படவேண்டிய ஒன்று என்றால் மிகையல்ல.
இறுதியாக அவ்வாறன ஒரு நாளில் தமிழ் தேசத்தின் விடுதலைக்காக போராடி மரணித்த சகல போராளிகளையும் நினைவு கூறுகின்ற நிகழ்வாக இவ்வாறான நினைவு நாட்களை நடாத்துவதே சிறந்தது. இதுவே நாம் நேர்மையாகவும் உண்மையாகவும் போராடி மரணித்தவர்களை மதித்து மரியாதை செய்கின்ற நினைவு நிகழ்வாக இருக்கும். இருக்கவும் முடியும்.
மீராபாரதி
நவம்பர் 2011
http://meerabharathy.wordpress.com/2011/11/21/பெயரிடாத-நட்சத்திரங்கள்/