ஒரு பெண் தன்னுடைய வீட்டிலிருந்து வெளியே செல்வதற்குமுன், ஏராளமான கேள்விகளை தனக்குள்ளே கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. |
நான் போகிற இடம் எனக்குப் பாதுகாப்பானதுதானா?
நான் எந்த உடையினை அணிய வேண்டும்?
அந்த உடை மிகவும் இருக்கமானதாக இருக்கிறதா?
அந்த உடை அணிந்தால், என்னுடைய உடலை வெளிக்காட்டுவதுபோல் இருந்துவிடுமா?
எதிலே நான் அவ்விடத்தை அடையப்போகிறேன்?
நான் போகவேண்டிய இடத்தில், தனியே நான் நடக்கலாமா? அல்லது ஆண் துணையுடன்தான் நடக்கவேண்டுமா?
இப்படியான கேள்விகள் பெண்களின் அன்றாட வாழ்க்கையில் அங்கமாகிப் போயிருக்கிறது. பெண்களுக்கு நிகழ்த்தப்படுகிற உடல்ரீதியான வன்கொடுமைகளே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது நாட்டுப்பெண்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்கிற பாலியல் தொல்லைகளையும், அவர்கள் ஏன் அதனை வெளியே சொல்ல முற்படுவதில்லை என்பதனையும், முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கினையும் செபா, பாய்சா மற்றும் நில்லி ஆகிய மூன்று பெண்களின் வாழ்க்கை வழியாக விவரிக்கிறது இப்படம்.
அருமையான படம். காத்திரமான பதிவு. ஆங்கில சப் டைட்டில் இருந்திருந்தால் சிறப்பாய் இன்னும் இருந்திருக்கும்.
மொழி, பிரதேசம், நாடு, கலாசாரம் என்று வேறுபாடுகள் இருக்கக்கூடும். ஆனால், “பெண்”ணின் துயரம் எங்குமே ஒன்றுதான். “அவள்” ஓர் “உடம்பாக” மட்டும் பார்க்கப்படும் நிலை மாறும் வரை… அவளது “உடலை” வைத்தே பன்னாட்டுக் கம்பெனிகள் தமது “வியாபாரங்களைத்” திட்டமிடும்வரை… சினிமாவும் சின்னத்திரையும் கதைகளை நம்பாமல் வெறும் “சதையை” மட்டுமே நம்பிப் பிச்சைப் பிழைப்பு நடத்தும் வரை… உலகெங்கிலும் “பெண்”ணின் துயரம் தொடர்ந்துகொண்டே இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்! 🙁
ஆழ்ந்த வருத்தத்துடன்…
லறீனா அப்துல் ஹக்.