லக்ஷ்மி (பிரான்ஸ்) – தொகுப்புக் குறித்து…
நிவேதா (சுவீடன்) – தொகுப்புக் குறித்து…
கண்ணன்(சுவிஸ்) – தொகுப்புக் குறித்து…
யோகா (சுவிஸ்) – தொகுப்புக் குறித்து…
கலந்துரையாடல் – தொகுப்புக் குறித்து…
18.12.2011 அன்று சூரிச் (சுவிஸ்) இல் நடந்தது இந் நிகழ்வு. இரண்டு நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டது. பெண்போராளிகள் 26 பேரின் (70 கவிதைகள் கொண்ட) கவிதைத் தொகுப்பாகிய “பெயரிடாத நட்சத்திரங்கள்” ஒன்று. மற்றையது றஞ்சித் எழுதிய “காற்றோடு அடித்துச்செல்லப்படுதல்” என தமிழ்ப்படுத்தக்கூடிய Mit dem Wind fliehen என்ற நாவல். ஒரு தமிழ் இளைஞனின் ஈழப் போராட்ட சூழல் தந்த அவலமும் ஜேர்மன் அகதிவாழ்வு தந்த அவலமும் நாவலின் மையம்.கவிதைத் தொகுப்புரையை (ஊடறு) றஞ்சியும் தொடர்ந்து தொகுப்பை ஊடறுத்து லக்ஷ்மி (உயிர்நிழல் ஆசிரியர், பிரான்ஸ்), நிவேதா (கவிஞை, சுவீடன்), கண்ணன் மற்றும் யோகா (சுவிஸ்) ஆகியோர் விமர்சனத்துக்கு உள்ளாக்கினர். நாவலின் வெளிப்பாட்டுத்தளத்தை அதன் ஆசிரியர் றஞ்சித் (ஜேர்மன்) விபரித்தபின், அதை ஊடறுத்து ராஜன், சுதா (இருவரும் சுவிஸ்) ஆகியோர் தமிழில் விமர்சனத்துக்கு உள்ளாக்கினர்.
தமிழ்-சிங்கள மொழிபெயர்ப்பில் அரங்கியல் படைப்பாளியான விஜயன் முக்கிய பங்கை ஆற்றினார். ஜேர்மன்-தமிழ்-சிங்கள மொழிபெயர்ப்பை சுதா (சுவிஸ்) செய்தார். நிகழ்ச்சி முழுமையும் தமிழ்-சிங்களம்-டொச் மொழிகளிடையான மொழியெர்ப்பு புதிய உரையாடல் சூழலை வழங்கியிருந்தது. 56 பேர்வரை பங்குபற்றினர். காலை 11:15 க்கு தொடங்கிய நிகழ்வு மாலை 7:30 க்கு முடிவடைந்தது. இவ்வகையான உரையாடல்களை தொடர்ந்து நடத்துமாறும் அதற்கு தம்மாலான ஆதரவைத் தருவோம் எனவும் பங்குபற்றிய சில ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.