குழந்தை ஒன்றை கொலை செய்ததாகக் கூறி சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண்ணான ரிஸானா நபீக்கை அவருடைய பெற்றோர்கள் நேற்று சந்தித்துள்ளனர். |
2007ம் ஆண்டு ஜூன் 16ம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின் 23 வயதுடைய ரிஸானாவை ரியாத் சென்றுள்ள அவருடைய பெற்றோர் முதன்முதலில் சந்தித்துள்ளனர்இந்த சந்திப்பு ´ஒரு தார்ப்பரியமான உறவு´ என ரியாத் சென்றுள்ள இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தவாட்மி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரிஸானா தனது தந்தை மொஹமட் மற்றும் தாய் ரிப்னா ஆகியோரை சந்தித்தபோது அழுது கொண்டே “என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்” என கெஞ்சியுள்ளார்ரிஸானாவை காப்பாற்ற குழந்தையை பறிகொடுத்த பெற்றோரினால் மாத்திரமே முடியும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.