– பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு
|
யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் பூர்த்தியான பின்னரும் பெண்கள் விவகாரங்களுக்கென தனியான அமைச்சு ஒன்று இருக்கின்ற சூழலிலும் கூட பெண்களுக்கெதிரான வன்முறை கட்டுப்படுத்தலின்றி நாளாந்தம் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக அண்மைக் காலமாக யாழ்ப்பாணப் பிரதேசத்தை எடுத்ததுக் கொண்டால் அதிகளவில் பெண்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுவதாகவே மருத்துவ அறிக்கைகள் கோடிட்டுக் காட்டுகின்றன |
தொடர்ச்சியாக இவ்வாறு குறிப்பிட்ட சில பிரதேசங்களில் நிகழ்கின்ற பெண்களுக்கெதிரான கொலைகள் மற்றும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்களை தடுப்பதற்கோ அல்லது அவற்றிற்கெதிரான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படாமையானது கவனத்திற்குரியது.இன்றெல்லாம் பெண்களது கொலைகள் தற்றொலைகள் மற்றும் பாலியல் வல்லுறவுச் செய்திகள் சாதாரணமாக நிகழும் நிகழ்வாகவும் அவற்றிற்கு உரிய சட்ட நடவடிக்கை எடுப்பது மிகவும் குறைவாகவுமே இருப்பது வெளிப்படை. இல்லையேல் கடந்த ஆறுமாதங்களில் யாழ்ப்பாணத்தில் மட்டும் 28 கொலைகள் மற்றும் தற்கொலைகள் இடம்பெற்றதாக உத்தியோக பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றிற்கான காரணங்கள் யாவை? இவற்றைத் தடுப்பதற்கான உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் யாவை? ஏன ஆராயும் போது எமக்க கிடைப்பது ஏமாற்றம் மட்டுமே. அரச தரப்பானது யாழ்ப்பாணதத்pல் இடம்பெறுகின்ற வன்முறைச் சம்பவங்களை தடுப்பதற்கு முறைமையான திட்டத்தைக் கொண்டு வருவதற்குப் பதிலாக தொடர்ந்தும் பாதிப்புக்குள்ளாகும் பெண்களையே குற்றம் சுமத்துகிறத
அண்மையில் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் அவர்கள் குறிப்பிட்டதாக தமிழ் இணையமொன்றில் இடம்பெற்ற செய்தியின்படி பார்க்கும் போது அவர் தானும் ஓர் பெண்ணாக இருந்தும் கூட பெண்களது பிரச்சினைகள் மற்றும் நியாயங்களை உணராது கருத்துக் கூறியுள்ளமையைக் காண முடிகின்றது. பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் பற்றிக் கருத்துக் கூறும் போது அவர் “யாழ்ப்பாணப் பெண்களுக்கு ஒழுக்கம் கிடையாது…” எனக் குறிப்பிட்டதாக 19.06.11 அன்று குறிப்பிட்ட தமிழ் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. பொறுப்பான பதவிகளில் இருப்போர்கள் கூட பெண்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து கலாசாரத்துடன் அவர்களை இணைத்து விமர்சிப்பதையும் அவர்களை ஒழுக்கம் என்ற விடயத்துடன் கட்டிப்போடுவதோடு அதனூடாக வன்முறையாளார்களைத் தப்பிக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை கலாசாரத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பினை சமூகம் பெண்ணிடமே திணிக்கின்றது.
பாரம்பரியம் மரபு என்ற விடயங்களுக்கு பெண்கள் மாத்திரமே முக்கியத்தவம் கொடுத்து வாழ வேண்டும் என்பதையே அண்மைக்காலங்களாக வெளிவருகின்ற ஊடகச் செய்திகளும் மற்றம் அரச அதிபர் போன்றோரது கருத்துகளும் வெளிப்படுத்துகின்றன. மீளத் திரும்பிய பின்னர் இடம்பெறுகின்ற வன்முறைகளுக்கு பெண்கள் கலாசாரத்தை பாதுகாக்காது சீரழிக்கின்றமை மற்றும் அவர்களது செயற்பாடுகள் மாற்றம் அடைந்தமை என தொடர்ந்தும் பலரும் பெண்களை மரபுரீதியாக குற்றம் சுமத்தகின்றனர். ஆனால் பெண் சிறுமிகள் முதல் வயது வந்த பெண்கள் வரை தொடர்சியாக குடும்பங்களில் துஷ்பிரயோகம் மற்றும் கொலை செய்யப்படுகின்றமைக்கு கலாசாரம் மடடுமா காரணமாகிறது? இவர்களை அவர்களது குடும்பத்தில் உள்ள நெருங்கிய உறவுடைய ஆண்களே செய்துள்ளனர்: செய்து வருகின்றனர். ஆகவே இதற்கு யார் பொறுப்பக் கூறுவது? பதில் சொல்ல வேண்டிய சமூகமே பல சந்தர்ப்பங்களில் நியாயமான தீர்வை அணுகுவதை விடுத்து பாதிக்கப்பட்டோரை தொடர்ந்தும் அவர்களது செயற்பாடு தொடர்பாக விபரிப்பதால் பாதிப்புக்குள்ளானவர்கள் மீண்டெழ முடியாது இருக்கின்றனர். அல்லது பெண்களுக்கெதிராக அவர்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் செயற்பாடுகளில் ஆண்கள் செயற்படும் போது கண்டு கொள்ளாமல் எம்மில் பலர் இருக்கின்றனர். அண்மைக் காலத்தில் பெற்றோர் கவனிப்பு இல்லாத அல்லது பெற்றோர் இல்லாத குடும்பங்களில் உள்ள பெண் பிள்ளைகளுக்க தொழில் வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி வஞ்சக்கடத்தல் செய்வதோடு கட்டாயமாகப் பாலியலில் தொழிலிலும் ஈடுபடுத்தி வருகின்றனர்.
அத்தோடு மாற்றாற்றல் உள்ள யுத்தத்தால் அங்கவீனமான பெண் பிள்ளைகளை குறும்படங்களில் நடிக்க வைப்பதாக கூறி ஆண்கள் சிலர் அழைத்து சென்றுள்ளர். இவர்களது பாதுகாப்பிற்கு யார் பதில் கூறுவது. இவ்வாறாக மோசடி வஞ்சல் கடத்தல் செய்தோர் பற்றி ண்மையில் மருதாணை காவல்துறைக்க வந்த முறைப்பாடும் அதனூடாக மீட்கப்பட்ட சிறுமிகளது வாக்கு மூலமும் கவனிக்கத்தக்கத.மேற்கூறப்பட்ட விடயங்களோடு கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விடயம் என்னவெனில் வன்முறைச் சம்பவம் இடம்பெற்ற வீடுகளில் அந்த சம்பவம் தொடர்பாக பூரண விசாரணைகளை மேற்கொள்ள விரும்பாத தன்மை நிலவுகிறது. ஆதற்கு காரணம் யாதெனில் குடும்ப மானம் போய்விடும் என்ற அச்சம் அத்தோடு இனந்தெரியாதோர் எனக் குறிப்பிடப்படுவேரால் உண்டாகின்ற மிரட்டல்கள் மற்றும் அழுத்தங்களேயாகும். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் குழுக்களுக்கிடையே பிரிவினை வலுப்படுத்துவதன் காரணமாகப் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரிக்கின்றன. காதல் திருமணம் என்ற பெயரில் பெண்கள் சிலர் ஏமாற்றப்படுதல் கொலை செய்யப்படுதல் கர்பமாதல் கைக் குழந்தையோடு காவல்நிலையத்திற்கு அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் பாதிப்பை உண்டாக்கியவர்கள் பாதுகாப்பாக நடமாடித் திரிந்து கொண்டிருக்கிறார்கள். பெண்களை வீடுகளில் கணவன் அடிப்பதையோ அல்லது துன்புறுத்துவதையோ நாளாந்த செயற்பாடாக அல்லது பழக்கப்பட்ட ஒன்றாகப் பார்த்தல் வேண்டும் என்றே எம்மில் பலர் எதிர்பார்க்கின்றனர். இந்த மனப்பாங்கே இன்று குடும்பங்களில் பெண்கள் கொலை செய்யப்படுவதற்கான மூல காரணமாகின்றது.
இதுமட்டுமன்றி யாழ்ப்பாணத்தில் வன்முறை பற்றியும் அதன் புள்ளி விபரங்கள் பற்றியும் அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கம் போது கூட அவற்றைத் தடுத்து நிறுத்த எந்த வழியும் நடைமுறைப்படுத்தப்படாமையானது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பெண்கள் தொடர்பான விடயங்களில் பொலிஸ் தகுந்த நடவடிக்கை எடுக்காது ஆண்களுக்க பக்கச் சார்பாகச் செயற்படுகின்றது. ஆண்களது குற்றச்சாட்டுக்களையே கவனத்தில் கொண்டு பெண்களை அவர்களது நடத்தை தொடர்பாக விமர்சிக்கும் போக்கு வலுப்பெற முனைகின்றது. வழக்கு விசாரணைகள் நீதிமன்றங்களில் கால தாமதமாதமாகிக் கொண்டு இருக்கின்றன. சிலர் தமது அரசியல் பலத்தை தக்க வைப்பதற்கு வன்முறையை அதிலும் பெண்களுக்கெதிரான வன்முறையை ஓர் ஆதமாகப் பயன்படுத்துகின்றனர். வன்முறையாளர்கள் ஊழல் இலஞ்சம் அதிகார மற்றும் மறைமுக மிரட்டல்கள் மூலம் தப்பித்துக் கொள்கின்றமை கண்கூடு. மறைமுக அழுத்தங்கள் காரணமாக் செயற்படுத்தப்படும் வன்முறைச்சம்பவங்களினால் எதிர்காலத்தில் பெண்கள் கல்விமற்றும் தொழில் வாய்ப்பு பற்றி சிந்திக்க முடியாது போகின்ற நிலை தோன்ற வழியுண்டு
கோசத்திலிருந்து சந்தியா