பல்லின மத கலாச்சாரங்களை சமத்துவமாய் பேணும் சமூக ஜனநாயக சக்திகளுக்கு கல்வி, தொழிற்கல்வி, தொழிலாளர் உரிமை குடும்பநலன் ஊக்குவிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனமும சர்வதேச சட்டங்களுக்கமைய இங்கு வாழும் வெளிநாட்டவர்கள், குடியேற்றவாசிகளின் உரிமைகளுக்கு குரல்கொடுப்பதற்கு ஒக்ரோபர் 23ம் திகதி வாக்களிக்க கடமைப்பட்டுள்ளோம் |
தேர்தலில் போட்டியிடும் கட்சிகள்:
1. . SVP(சுவீஸ் மக்கள் கட்சி)
நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் பிரதிநித்துவம் கொண்டுள்ள ளுஏP தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனது வலதுசார்பு அரசியலை உறுதிப்படுத்தும் வகையில் பெருந்திரள் குடியேற்றவாசிகள் வருகையை நிறுத்து, ஐரோப்பிய யூனியனுக்கு மறுப்பு தெரிவித்தல், வரிக்குறைப்பு வேலை வாய்ப்புக்களைப் பெருக்குதல், விவசாயிகளின் நலன்களைப் பாதுகாத்தல் போன்ற முக்கிய கொள்கைகளை முன்வைத்துள்ளது. ஐரோப்பியாவில் பெருகி வரும் வேலையில்லாப் பிரச்சனை, யூரோ நிதி நெருக்கடி போன்ற சமகால நிலமைகளால் மக்களிடையே . SVP யின் செல்வாக்கு அதிகரித்தே 2
2,BDP சுவீஸ் பிரஜைகள் ஜனநாயக்கட்சி)
BDP க்குள் புளொக்கர் தலைமையில் முரண்பாடு கொண்ட லிபரல் சிந்தனை உள்ளவர்கள் 2007 இல் திருமதி விட்மர் சுலும் மந்திரிப் பதவிBundesrätin) பெற்றதன் பிற்பாடு கூட்டுச் சேர்ந்து 2008 இல் உருவான இளம் கட்சி. தற்போது ஐந்து உறுப்பினர்களை மட்டுமே நாடாளுமன்றத்தில் கொண்டுள்ளது. இந்த தேர்தலில் தனது பலத்தை அதிகரிப்பதனூடாக 2007 இல் உதவிய சமூக ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன் தனது மந்திரிப் பதவியை காப்பாற்றிக் கொள்ள முடியும். இல்லையேல் 2007 இல் புளொக்கரிடம் இருந்து பறிக்கப்பட்ட மந்திரிப் பதவி மீண்டும் தாய் கட்சியான ளுஏP இடமே போய் சேரும். BDPஅந்த நோக்கிலேயே தீவிரமாக தேர்தல் களத்தில் ஈடுபடுகிறது.
3.SP(சமூக ஜனநாயகக் கட்சி)
இவ்வாண்டுக்கான சமஷ்டி அரசுத் தலைவரும் வெளிவிவகார மந்திரியும் சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவருமான திருமதி கல்மெராஜ் பதவி விலகுவதால் டிசம்பரில் நாடாளுமன்றத்தில் புதிய மந்திரிக்கான Bundesrat) தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் .SP மக்களிடையே பரவலான ஆதரவுத் தளத்தைக் கொண்டிருப்பதால் வெற்றி வாய்ப்புக்களும் பெருகி வருவதாக தெரிகிறது. எனவே நாடாளுமன்றத்தில் மேலும் தனது பலத்தை அதிகரிப்பதினூடாகவே 7 மந்திரிப் பதவிகளில் .SPக்கான பாரம்பரியமான 2 இடத்தையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்
4. FDP (லிபரல் ஜனநாயக் கட்சி)
மேல் தட்டு வர்க்கத்தின் நலன்களை பெரும்பாலும் பிரிதிநிதிதுவப் படுத்தும் லிபிரல் கட்சி SPக்கு அடுத்த பழைமையான கட்சி கடந்த காலத் தேர்தல்களில் தனது வாக்குவங்கிப் பலத்தை இழந்து வரும் நிலையில் இந்த தேர்தல் களத்தில் தனது பிரச்சாரத்தில் தீவிரமாகவுள்ளது ழுமவழடிநச 23 இல் தனது வாக்குவங்கியை பெருக்கி கொள்வதனூடாகத் தான் பாரம்பரியமாக தேசிய அரசில் பெற்று வரும் 2மந்திரிப் பதவிகளையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
5.CVP(கிறிஸ்தவமதமக்கள்கட்சி)
நீண்ட காலமாக 7 மந்திரிப் பதவிகளில் 2 ஐ தனதாக்கி கொண்டிருந்த பழமைவாதக் கட்சியான ஊஏP இன் வாக்குவங்கி குறைந்து வந்த நிலையில் 2003 இல் தனது ஒரு மந்திரிப் பதவியை SVPஇடம் பறிகொடுத்தது தற்போது மக்களிடையே செல்வாக்கு ஓரளவு அதிகரித்து வரும் நிலையில் டிசம்பரில் நாடாளு மன்றத்தில் நடைபெறவுள்ள 7 மந்திரிகளுக்கான தேர்தலில் தீர்மானகரசக்தியாகச் செயற்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது .
6..Grüne (பசுமைக்கட்சி)
யப்பானில் இடம்பெற்ற அணுமின் உலை விபத்துக்கள் சுவிஸின் பசுமைக் கட்சிக்கான ஆதரவுத் தளத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளது கடந்த காலங்களில் பல கன்ரோன் அரசுத் தேர்தல்களிலும் பசுமைக்கட்சி அதிக பிரதிநிதிதுவத்தைப் பெற்று வரும் நிலையில் இந்த தேர்தலில் 10 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றால் தனக்கும் ஒரு மந்திரிப் பதவி தரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறது.
மேலும் GLP> EVP>EDU>LEGA> CSP> என நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல்வேறு சிறிய கட்சிகளும் இன்னும் பல புதிய கட்சிகளும் சுஜேச்சை வேட்பாளர்களும் இத் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்’றனர்