உலகில் 85 கோடிப்பேர் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா அறிவித்துள்ளது. உலக உணவு தினம் அக்டோபர் 16ம் திகதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ´உணவு விலை – நெருக்கடியில் இருந்து உறுதித் தன்மை´ என்ற மையக் கருத்தோடு அதிகரிக்கும் உலகில் மக்கள் தொகை பெருக்கத்தால், வறுமையும் அதிகரிக்கிறது. |
ஒரு நேர உணவுக்காக ஏங்கும் சிறுவர்கள் பலர் இன்று ஏழை நாடுகளில் உள்ளனர்;. மக்கள் தொகை வளர்ச்சியை ஒப்பிடும்போது, உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைவாகவே உள்ளது. உலகில் 85 கோடிப்பேர் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 82 கோடிப் பேர், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். ஆண்டு தோறும் பட்டினியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை, மூன்று கோடியே 50 லட்சத்துக்கும் அதிகம்.இந்த எண்ணிக்கையை பாதியாக குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டும், ஒவ்வொரு ஆண்டும் பட்டினி மரணங்கள் அதிகரித்து வருகின்றன.