அரேபிய முஸ்லிம் பெண் பெறும் முதல் நோபல் பரிசு

 யேமனில் அதிபர் அலி அப்துல்லா சலேவின் 33 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை தவாக்குள் கர்மான் என்ற பெண் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். அவரது சேவையை பாராட்டி இந்த ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசு கர்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

 

 யேமனில் அதிபர் அலி அப்துல்லா சலேவின் 33 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை தவாக்குள் கர்மான் என்ற பெண் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். அவரது சேவையை பாராட்டி இந்த ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசு கர்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அரபு நாடுகளிலேயே இத்தகைய உயரிய நோபல் பரிசை பெறும் முதல் பெண் இவர் தான்.  

எனவே, இவருக்கு யேமனின் 2-வது பெரிய நகரமான தயேசாஸ் என்ற இடத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது. இதையொட்டி மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. அதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதனால் அதிபர் சலேவின் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் பேரணியில் சென்றவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்கினார்கள். அதில் 40 பெண்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *