சந்தியா யாழ்ப்பாணம்
இன்று யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக யாழ் அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்து விட்டதாக குறிப்பிட முடியாது எனவும் அதனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு மேலம் அவர் கூறினார்.
அண்மைக்காலமாகப் யாழில் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் உள்ள பல அரச அலுவலகங்கள், கிராம அலுவலர்கள், பெண்கள் விடுதி எனப் பல இடங்களிலிருந்து யாழ். மாவட்டச் செயலருக்கு முறைப்பாடுகள் பல கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் பல நிறுவனங்களில் பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், பெண்கள் ஒரு பாலியல் பொம்மைகள் போன்று பார்க்கப்படுவது மிகவும் கொடூரமான செயல் என்றும் இவ்வாறு நடந்து கொள்பவர்கள் கொடூரமானவர்கள் என்றும் அவர்களுக்கு தண்டனைகள் வழங்:கப்பட வேண்டும் குறிப்பிட்டுக் கூறிய அரச அதிபர் உயர்பதவியில் இருப்பவர்கள் முதற்கொண்டு சாதாரண அலுவலர்கள் வரை பலர் பெண்களுடன் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் விசனம் தெரிவித்தார்.
இவ்வாறு பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்கள் மீது தயவு தாட்சணையின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இமெல்டா சுகுமார் எச்சரித்துள்ளார்.