எஸ்தர் விஜித்நந்தகுமார்,திருகோணமலை-இலங்கை
அதிகமாக மிக அதிகமாக
இந்த நாள் நெஞ்சை அழுத்தும்
புரிதலின் தவறுகளில் இருந்து
நீ விலகிப்போன காலத்தில்
மிக மிக கோபத்துடன் உந்தன்
உறவை துண்டித்து வேகமாக
வாழ்வொன்றை செய்தேன்.
மிக நெகிழ்தல் மிக்கவை உன் வார்தைகள்
என நினைத்தக் கணத்தில்
கசப்பு நார் கொண்டு செய்த சாட்டையால்
அது விரட்டி விரட்டி அடித்தது.
திருமண நாள் காலமாற்றத்தில்
ஓரிரண்டு காலம் கடந்தாலும்
திருமண தேசத்தில் விடுதலையான
சித்திரவதைக் கைதி நான்
எப்போதும் பணம் நகை பொருள்
பற்றியதான அவன் தொல்லைகள்.
அவமானத்தின் பெரும்கடலில்
தள்ளப்பட்ட நிலையில்
அந்த முரட்டுக் கை என்னை உயிர் வலிக்க
தாக்கும்
உடனே இந்த வாழ்வை அறுத்து எறிய
துணிவு என்னை உசுப்பும்.
கௌரவம் சமுகம் என்ற
போலி போர்வை சட்டென சட்டை
உலுக்கும்.
இந்த நேரம்வரை யாருமே
இதயத்ததை நெருங்கி நேசிக்கவில்லை.
நம் பசுமை வளாகம் போல்.
இந்த நாளை நினைத்திட என் கைகளில்தான்
பணத்ததை அவசரமாக தேடுகின்றாய்
உன் கனவில் உன் உறவில்
உன் வாழ்வில் நான்
உயிரோடு இல்லை
ஒன்றில் பணத்தில் ழுழ்கியிருப்பாய்
ஒன்றில் டீ. வியில் அசந்திருப்பாய்
என் இழப்புக்களை உயிர்ப்பிக்க
ஒரு யுகம் வேண்டும்.
என் அவசர வேதனைகளில்
உயிரோடு எரிந்தது என்
உயிர்க்காதல்.
தொட்டுககொள்ளவோ,தரிசிக்கவோ
இயலாத தூரத்தில்
என்னைவிட்டு அது பயணித்தது.
ஒரே சிலுவையில் ஒருப்புறம் நீ
மறுப்புறம் நான்
உயிர்த்தெழாமல் மட்டும்
நம் காதல்.
வேதனை வார்த்தைகள்
வெகுண்டெழுந்து குமறியதில்
இருவெறு தண்டவாளங்களானோம்
இந்த கண்ணீரின வெள்ளை துளியில்
வழிந்தோடுகிறாய்.
ஓரு பற்றைக்காட்டை
வெட்டி வெட்டி
பயணிக்க ஆரம்பிக்கும்
என் தேடலில் ,
இறுதி
இரங்கலுக்காவது நீ
வரவேண்டும்.
vallthukkal Esthaer