யாழினியின் தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன் (மட்டக்களப்பு,இலங்கை)

தட்டி அழைத்த கைகள் -இன்று

சட்டென விலகிக் கொண்டன.

உற்சாகம் கொடுத்த பேச்சுக்கள் -இன்று
குரலற்றுப் போய் விட்டன.
வினயமாய் செயல் தந்த நேரங்கள் -இன்று
எரிச்சலோடு சொல்லப்படுகின்றன.
உன் உள்ளப் பாராட்டுக்கள் -இன்று
என்னை எள்ளிக்கொண்டாடுகின்றன.
என் உள்ளன்பான வார்த்தைகள் -இன்று
உனக்கு கசப்பாகிப் போயின – இத்தனைக்கும்
நான் செய்த தவறு என்ன?
உன்னிடமிருந்து விலக்கப்பட்டவள் நான்.
தொலைதூர உன் வரவை எதிர்பார்த்து ஏமாற்றப்பட்டேன்-என்
பணி முடக்கம் அனைத்திற்கும்
காரணமானவன் நீ.
ஆழ’ அன்பு தவறுகளால் உடைந்து விடுமா?
அவ்வாறெனின்,
நீ என் மீது வைத்த அன்பு எத்தகையது?
உன்னாலே கொடுக்கப்பட்ட அடிகள்
எனக்கான
முதலும் கடைசியுமான அடிகளாய் இருக்கட்டும்.
எனது திறன், எனது உழைப்பு
தங்கியிருப்பவள் நான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *