ஆறாவது ஆண்டில் ஊடறு

ஆறாவது  ஆண்டில் ஊடறு

PeyaridathaNadsathirankal s

தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து செயற்பட்ட, களத்தில் போராடிய பெண் போராளிக் கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து “பெயரிடாத நட்சத்திரங்கள்” என்ற கவிதைத்தொகுப்பை ஊடறுவின் ஆறாவது வருடத்தையொட்டி நாம் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.ஊடறுவும் விடியல் பதிப்பகமும் இணைந்து வெளியிட்டுள்ள  பெயரிடாத நட்சத்திரங்கள் கவிதைத்தொகுப்பின்  அட்டைப்படத்தை ஜீவன் நந்தா கந்சாமி (கனடா) வரைந்துள்ளார். அவருக்கும் எமது நன்றிகள்.

(இக்கவிதைத்தொகுப்பை பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகளை நாம் ஊடறுவில் பிரசுரிக்க உள்ளோம்)

****

வருடங்கள் ஆறாக இருந்தாலும் ஊடறு தனது பணியை சரிவர செய்கின்றதா என்கின்ற கேள்வி எமக்குள் ஒரு குற்றணர்வைத் தோற்றுவிக்கின்றது. ஆனாலும்  ஊடறுவின் நோக்கத்திற்கு  பலம் சேர்க்கும் வகையில் பல நாடுகளிலிருந்தும் பல புதிய  பெண் எழுத்தாளர்கள்; ஊடறுவில் எழுதி வருகின்றார்கள் அது எமக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும்  தருகின்றது. சில வேளைகளில் எமது வேலைப்பளு காரணமாக ஆக்கங்களை பிரசுரிப்பதில் தாமதங்கள் ஏறபட்டுவிடுகின்றன.. அதற்காக எமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஊடறு போரினால் பாதிக்கப்பட்ட கணவனையிழந்த பெண்களுக்கு சில உதவிகைள செய்து வருவதோடு     இலங்கையில் உள்ள சில தமிழ் சிங்கள  பெண்கள் அமைப்புக்களுடன் இணைந்து சில வேலைத்திட்டங்களையும்  அறிமுகப்படுத்தி வருகின்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து அவ்வப்போது செய்திகளை அனுப்பித் தரும் சந்தியா, மட்டக்களப்பிலிருந்து அன்னபூரணி ஆகியோருக்கும்  நண்பர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், அனைவருக்கும் எமது அன்பு கலந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். உங்களின்  பாராட்டுக்களும் விமர்சனங்களும்  தான் எமக்கு உற்சாகத்தை தருகின்றன.

******

ஊடறு வெளியீடுகள்

(இப்புத்தகங்களை ஊடறுவின்  நூல்கள் பகுதியில் http://www.oodaru.com/?page_id=184 நீங்கள் தரைவிறக்கம் செய்து கொள்ளலாம்.)

என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை
மை
இசை பிழியப்பட்டவீணை
பெயரிடாத நட்சத்திரங்கள்

5 Comments on “ஆறாவது ஆண்டில் ஊடறு”

  1. ஊடறுவுக்கு எமது வாழ்த்துக்கள் அதுவும் பெண் போராளிகளின் கவிதைகைள தொகத்து புத்தகமாக வெளியிட்டிருப்பது மனதுக்கு ஒரு ஆகர்சத்தை தருகிறது எமக்கு உயிரைக் கொடுத்த அவர்களுக்கு தலை வணங்குகிறேன்.

    பரணிதரன்

  2. வாழ்த்துக்கள் எமக்கும் அப்புத்தகம் தேவை

    றஜிதா

  3. vaazthukkaL thOzhi

    puthagam vanthavudan thodarpukolkirEn.

    puthiyamaadhavi

  4. ஏற்கனவே கவனத்திற்குரிய பெண்கவிகளின் தொகுப்பு வரிசையில் வைத்துப் பார்க்கக்கூடிய தொகுப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இலக்கிய உலகில் ஊடறுவின் முயற்சி பாராட்டுக்குரியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *