சட்டத்தை மீறுபவர்களுக்கு 3700 பவுண்ட் அல்லது 5500 அவுஸ்திரேலிய டொலர் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. முதலில் இந்த சட்டம் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் அமுல் நடத்தியிபின் பின் சிட்னியிலும் அமுலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆகும். |
அவுஸ்திரேலியாவில் முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவதற்கு தடை விதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது பொலிஸார் சந்தேகத்தின் பேரில் பர்தா அணிந்த பெண்களை சோதனையிட முடியும் என்றும் பெண்கள் தங்கள் முகத்தை மூடி இருக்கும் துணியை நீக்கி யார் என்பதை பொலிசாருக்கு அடையாளம் காட்ட வேண்டும் எனவும் அச் சட்டம் கூறுகிறது. பொலிசாரின் கூற்றுக்கு மறுக்கும் பட்சத்தில் சட்டத்தை மீறும் நபர்களுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. மிக பெரியளவிலான அபராதமும் விதிக்கப்படும் என்ற இச் சர்ச்சைக்குரிய சட்டம் அவுஸ்திரேலியாவில் அமுலுக்கு வருகிறது.
சட்டத்தை மீறுபவர்களுக்கு 3700 பவுண்ட் அல்லது 5500 அவுஸ்திரேலிய டொலர் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. முதலில் இந்த சட்டம் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் அமுல் நடத்தியிபின் பின் சிட்னியிலும் அமுலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆகும்.
அவுஸ்திரேலியாவின் இப் புதிய சட்டத்திற்கு மனித உரிமையாளர்களும் முஸ்லீம்களும் தமது கண்டனங்களை தெரிவித்து உள்ளனர். அதே வேளை அவுஸ்திரேலியாவில் 2 கோடியே 30 லட்சம் மக்கள் உள்ளனர். இவர்களில் நான்கு லட்சம் அவுஸ்திரேலியர்கள் முஸ்லீம்கள் ஆவார்கள். இரண்டு ஆயிரம் தொடக்கம் மூவாயிரம் அளவிலான பெண்கள் தங்கள் முகத்தை மூடும் பர்தா அணிவதாக தெரிவிக்கப்டுகிறது. இச்சட்டம் ஒவ்வொரு அவுஸ்திரேலிய மாநில பாராளமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு அமுல் நடத்தப்படும் எனவும் அவ்வாக்கெடுப்பு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.