இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை பற்றிய ஆவணங்களை இன்று ஒளிபரப்புவது ஏன் – சனல் 4

sl_war_crime_-34-300x223

இன்று இரவு 23.00 மணிக்கு இலங்கையின் கொலைக்களம் சனல் 4 இல்

‘இலங்கையின் கொலைக்களம்’  என்ற ஆவணப்படத்தில் உள்ள அனைத்து ஆதாரங்களும் சான்றுகளாக உள்ளதாக   சனல் 4 தொலைக்காட்சியின் செய்தி மற்றும் உலக  விவகாரங்களுக்கான பிரிவின் பொறுப்பாளர் Dorothy Byrne தெரிவித்துள்ளார்.

40,000 க்கும் மேலான  அப்பாவிப் பொதுமக்கள் மீதான இனப் படுகொலைகள் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டதை சனல் 4 தொலைக்காட்சி இன்று  ஒளிபரப்பவுள்ளது.   ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் காண்பிக்கப்பட்ட ‘இலங்கையின் கொலைக்களம்’  என்ற ஆவணப்படத்தில் உள்ள அனைத்து ஆதாரங்களும் சான்றுகளாக உள்ளதாக   சனல் 4 தொலைக்காட்சியின் செய்தி மற்றும் உலக  விவகாரங்களுக்கான பிரிவின் பொறுப்பாளர் Dorothy Byrne தெரிவித்துள்ளார்.

இவ்வகையான கொடுமைகளை இழைத்தவர்கள் நீதியின் முன் நிறுத்துவதற்குரிய அனைத்துலக  ஆதரவு அவசியம் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்த ஆவணப்படம் சனல் 4 தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பப்படவுள்ளதாக  தெரிவிக்கபபட்டுள்ளது. ‘இலங்கையின் கொலைக்களம்’ ஆவணப்படம் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவது எதற்காக என அவர் அளித்துள்ள விளக்கத்தின் சாரம்சம்

‘நிர்வாணமாக்கப்பட்ட நிலையில் பெண்களின் உடல்கள் வாகனத்தில் இழுத்துப்  ஏற்றப்படுகின்றன. இழுத்துப் ஏற்றப்பட்ட ஒவ்வொரு பெண்களையும் .இலங்கைப் இராணுவத்தினர்   இழிவுபடுத்துவதும் மட்டுமல்லாமல்  குதூகலித்தும் சிரிக்கின்றனர். அப்பெண்களின்  கைகள் கட்டப்பட்டு கொல்லபட்டுள்ளநிலையில்  காணப்படும் அப் பெண்களின் உடல்களைப் பார்த்து இலங்கை இராணுவம் சிரிக்கும்    காட்சிகளை ஏனையஇராணுவத்தினர் படம்பிடிக்கின்றனர். கொல்லப்படுவதற்கு முன்னர் அப்பெண்கள் சிறிலங்காப் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகின்றது.

sl_war_crime_-39-300x221

கை  தொலைபேசி மூலம் பிடிக்கப்பட்ட படத்தின்  மற்றுமோர் காட்சியில் ஒரு பெண் மண்டியிட்டு மன்றாடும் காட்சியும்  அதேவேளை அவரை எப்படி கொல்ல வேண்டும் என இராணுவம்  உத்தரவு இடுவதும்  பதிவாகியுள்ளது. கோல்லப்பட்ட அப்பெண்ணின்  மூளை வெளியில் தள்ளப்பட்டுள்ள காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (14.06.11) சனல் 4 இல் காண்பிக்கப்படவுள்ள ‘இலங்கையின் கொலைக்களம்’  என்றஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் பற்றியே கூறப்பட்டுள்ளன.. உடல் உறுப்புகளை வெட்டி எடுத்தல், படுகொலைகள், பெண்களை இழிவுபடுத்துதல் போன்ற காட்சிளைப் பிரித்தானியத் தொலைக்காட்சியில் காண நேரிடுமென நான் ஒருபோதும் எண்ணியிருக்கவில்லை.

இந்த நிகழ்ச்சியைப் பார்க்குமாறு நான் உங்களை தூண்டவில்லை. அக்காட்சிகள் மிகவும் கொடூரமானவை. அந்தப் படங்கள் உங்கள் மனங்களில் பதிந்து நிற்கக்கூடியவை. சில வேளைகளில் பல ஆண்டுகளாக மனதில் பதிந்து நிற்கக்கூடியவை. எனது தலையிலிருந்து அவற்றை இறக்கி வைக்க என்னால் முடியவில்லை.

14.6.2011செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு இந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்படவுள்ளது. கொடூரமான படங்கள் இறுதிப்பகுதியில் அதிகம் இடம்பெறுகின்றன. நள்ளிரவை அண்டிய நேரத்தில் ஒளிபரப்பப்படவுள்ளதால் சிறுவர்கள் இதைப் பார்ப்பது தடுக்கப்படுகின்றது.

ஆயினும் செய்திக் காட்சிகளில் கூட அச்சமூட்டத்தக்க காட்சிகளைப் பார்க்க முடியாத பல வளர்ந்தவர்களும் இந்தக் கொடூரத்தைப் பார்க்க மாட்டார்கள். நான் இதனை ஒருபோதும் பார்க்காமல் இருந்திருக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன்.

sl_war_crime_-34-300x223மொத்தத்தில் நாங்கள் இதனை ஒளிபரப்ப வேண்டிய தேவையில்லை. ஏனெனில் இலங்கையின் உள்நாட்டுப் போரின் போதும் போருக்குப் பின்னரும்; போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்திற்கு எதிரான குற்றங்களைச் சிறிலங்கா அரசாங்கம் புரிந்திருப்பதற்கான வலிமையான ஆதாரங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

40,000 வரையான அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக நிபுணர்கள் குழு நம்புகின்றது. பாரிய அளவிலானதொரு போர்க்குற்ற விசாரணைக்கு நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

ஆனால் எதுவுமே முன்னெடுக்கப்படவில்லை. என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்கு ஊடகவியலாளர்களையோஇ ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளையே சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்கவில்லை. ஆனால் இலங்கை இராணுவத்தினர் தமது நடவடிக்கைகளைப் கை தொலைபேசி மூலம் படம்பிடித்து பதிவு செய்துள்ளனர்

லஙகை படையினரால் கைத் தொலைபேசி மூலம் படம்பிடிக்கப்பட்ட காணொளிகளே மிக மோசமானவை. கைதிகளைக் கொடுமைப்படுத்துவதை அவர்கள் படம் பிடித்துள்ளனர். காணொளிகள் மற்றும் நூற்றுக்கணக்கான ஒளிப்படங்கள் உள்ளன. அவற்றில் குழிகளிலும், நீண்ட வரிசைகளிலும் கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் காணப்படுகின்றன. பலர் கட்டப்பட்ட நிலையிலும், பலர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றனர்.

எறிகணை வீச்சிலோ அன்றி ‘போர் நியமங்களுக்கு உட்பட்ட legal warfare நடவடிக்கைகளிலோ கொல்லப்பட்ட உடலங்களாக அவை தெரியவில்லை. ஒரு சிறு குழு சிறுவர்களின் உடல்கள் குழியில் காணப்படுகின்றன. கைதிகள் உயிருடன் காணப்படுகின்றனர். சில கைதிகள் இம்சைப்படுத்தப்பட்டும்இ பின்னர் கொல்லப்பட்டும் காணப்படுகின்றனர்.

தமிழர்களால் எடுக்கப்பட்ட காணொளி பெரும் கவலை தருவதாக உள்ளது. அவற்றில் மருத்துவமனைகள் மற்றும் இடம்பெயர்ந்தோர் திட்டமிடப்பட்டுத் தாக்கப்பட்டதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன.

போர்க்குற்றங்கள் மற்றும் போரின் பின்னான படுகொலைகள் தொடர்பான காணொளிகள் போலியானவை என இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. காணொளி தடய நிபுணர்கள் மற்றும் மருத்துவ வல்லுனர்களால் உறுதிப்படுத்தப்பட்டவற்றையும் சிறிலங்கா அரசாங்கம் மறுத்து வருகின்றது. விடுதலைப் புலிகளே மக்களைக் கொன்றதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்து வருகின்றது.

விடுதலைப் புலிகளும் மக்களைக் கொன்றுள்ளார்கள். ஆனால் 40,000 பொது மக்களை அவர்கள் கொல்லவில்லை. வேறு சக்தியே இத்தனை ஆயிரம் மக்களைப் படுகொலை செய்தது. படுகொலைகள் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டமையை இங்குள்ள அனைத்து ஆதாரங்களும் வெளிப்படுத்துகின்றன.

இதுகுறித்து என்ன சிந்திப்பது என்பதை உங்களுக்கு நாங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்களே பார்த்து மதிப்பிட்டுக் கொள்ளுங்கள். இவ்வகையான கொடுமைகளை இழைத்தவர்கள் நீதியின் முன் நிறுத்துவதற்குரிய அனைத்துலக பொறிமுறை அவசியம் என இந்த ஆதாரங்கள் உங்களைச் சிந்திக்க வைக்கும்’ என சனல் 4 தொலைக்காட்சியின் செய்தி மற்றும் உலகவிவகாரங்களுக்கான பிரிவின் பொறுப்பாளர் Dorothy Byrne தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *