இலங்கை,கொட்டகலையில் இருந்து சகி
கொட்டகலை கொமர்சல் தொண்டமான் புரம் மக்கள் நீர் மின்சாரம் இல்லாமல் கடந்த 10 வருடங்களாக எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் வாழ்ந்த வருகின்றனர். கொட்டகலை சேரிங் குரோஸ் தனியார் தோட்ட குடியிருப்புக்களில் இருந்து அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு |
கொட்டகலை கொமர்சல் தொண்டமான் புரம் மக்கள் நீர் மின்சாரம் இல்லாமல் கடந்த 10 வருடங்களாக எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் வாழ்ந்த வருகின்றனர். கொட்டகலை சேரிங் குரோஸ் தனியார் தோட்ட குடியிருப்புக்களில் இருந்து அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு கொட்டகலை கொமர்சல் பிரதேசத்தில் வீடுகட்டி குடியேற்றப்பட்ட 22 குடிசைகளில் வாழும் மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் துன்பப்படுகின்றனர் அவர்களை அங்கு பலவந்தமாய் குடியேற்றிய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் தமக்கு அடிப்படை வசதிகளான நீர் மின்சாரம் போன்றவற்றை வழங்குமாறு கூறி பொறுமையிழந்த பெண்கள் புது விதமாக போராட துணிந்துள்ளனர்
வருடகாலமாக மின்சார வசதி செய்து கொடுக்கப்படாமல் இருப்பதனால் பிள்ளைகள் தங்களின் கல்வியை இடையில் நிறுத்தி தலை நகரிலும் வேறுசில இடங்களுக்கும் வேலைக்கு சென்றிருப்பதாகவும் பாடசாலை சீருடைகளை தோய்ப்பதற்கோ அல்லது அயன் பண்ணி அணியக்கூட வசதியில்லாமல் துன்பப் படுவதாகவும் மண்ணெனணெய் விளக்கில் கல்விகற்று பலருக்கு கண்கள் பழுதாகி போனதாகவும் முறையிட்டனர் தள்ளாத வயதில் தண்ணீர் சுமந்து தடுமாறி தலை குப்புறவீழ்ந்து படுகாயமடைந்த அனேகர் இந்த கிராமத்தில் வாழ்கின்றனர் இதன் காரணத்தினால் எதிர் வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது வாக்கு கேட்டு வந்து வாக்குறுதிகள் வழங்கி சென்றவர்கள் யாராவது மீண்டும் வந்தால் அடித்து துரத்துவது என்ற தீர்மானத்தினை கிராமத்து பெண்கள் எடுத்திருப்பதாக கூறுகின்றனர்
மொத்தமாக 30 வீடுகள் கட்டப்பட்டு அதிலே 08 வீடுகளக்கு மாத்திரம் அனைத்து அடிப்படை வசதிகளையும் பூரணப்படுத்தி கொடுத்து உள்ளனர் அந்த 08 வீடுகளில் வசிப்பவர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மாவட்ட பிரதிநிதிகளும் அமைச்சரின் சாரதிகளும் ஆவர். மற்றய அனைவரும் ஏழை பாமர தொழிலாளர்கள் இவர்களை இரவோடு இரவாக பலவந்தமாய் அநாதைகளைப் போல் கொண்டு வந்து குடியேற்றி விட்டனர்; என்று பாதிக்கப் பட்ட மக்கள் கூறுகின்றனர் இவர்களின் துயர் துடைப்போம் என்று கூறி வாக்கு கேட்டு வெற்றிப் பெற்றவர்கள் ஏமாற்றி விட்டனர் என்று கோபத்துடன் கொட்டகலை தொண்டமான் புர மக்கள் கூறுகின்றனர்;. நாகரீக உலகில் வஞ்சிக்கப்பட்ட இந்த மக்கள் கூட்டத்தின் துயர் வர்க்கக் கட்டமைப்பின் மற்றமொரு அடையாலமாகும் பெருந்தோட்ட பெண்கள் போராட்ட குணாம்சம் கொண்டவர்கள் என்பதற்கு இந்த கிராம பெண்கள் சிறந்த உதாரணமாகும்