பிரஞ்சு மொழியிலிருந்து ஊடறுவுக்காக தேனுகா
நாகரிகத்திற்கு பெயர் போன இந்த நாட்டில் வருடமொன்றில் 75,000தொடக்கம் 90,000 பெண்கள் இவ்வன்கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆண்களால் ஆளாக்கப்படுகிறார்கள்.ஏழு நிமிடத்திற்கு ஓரு பெண் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறாள் கடந்த 2005 – 2006 காலப்பகுதியில் 18 – 60 வயதுடைய 130, 000 பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என OND எனும் இன்னொரு பெண்கள் பாதுகாப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. |
25 நவம்பர் பெண்கள் மீதானவன்செயல்களை எதிர்க்கும் சர்வதேச தினம் கொண்டப்பட்டது. அதனால் பிரான்சில் உள்ள சில அமைப்புக்கள் ஒண்றிணைந்து ஒரு கணக்கெடுப்பை செய்திருந்தன. ஆக்கணக்கெடுப்பின் போது தெரிய வந்த சில தகவல்கள்.பிரான்சில் நாளொன்றுக்கு குறைந்தது 200 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்றும் தினமும் 200 பெண்கள் தினமும் பல பெண்கள் யாரோ ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றும் பெரும்பாலும் யார் தம்மை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குகிறார்கள் எனத் தெரிந்திருந்தும் சட்டத்தின் முன் முறைப்பாடு செய்வதற்கு, பாதிக்கப்பட்டவர்கள் எனும் குற்ற உணர்வு காரணமாக இன்னமும் தயங்குகிறார்கள் என பெண்கள் சார்பாகவும் பெண்களின் மீது வன்முறையை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக போராடும் பாதுகாப்பு சங்கத்தின் CFCV தலைவியும் மருத்துவருமான Emmanuelle Piet கூறுகிறார். நடைபெறும் பாலியல் வல்லுறவுகளில் நாலில் மூன்று தெரிந்த ஒருவராலேயே இழைக்கப்படுகிறது என்பது தான் கொடுமையானது. ஆவ் வன்முறையை செய்பவன் தகப்பனாகவோ,மாற்றாந்தகப்பனாகவோ மாமனாகவோ, ஆசிரியனாகவோ,மருத்துவனாகவோ, முதலாளியாகவோ, வேலைகொடுப்பனாகவோ இருக்கிறான் என அவர் மேலும் தெரிவிக்கிறார்.
நாகரிகத்திற்கு பெயர் போன இந்த நாட்டில் வருடமொன்றில் 75,000தொடக்கம் 90,000 பெண்கள் இவ்வன்கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆண்களால் ஆளாக்கப்படுகிறார்கள்.ஏழு நிமிடத்திற்கு ஒரு ஓரு பெண் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறாள் கடந்த 2005 – 2006 காலப்பகுதியில் 18 – 60 வயதுடைய 130, 000 பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என OND எனும் இன்னொரு பெண்கள் பாதுகாப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. பாதிக்கப்படும் பத்துப் பெண்களில் ஒருவரே முறைப்பாடு செய்கிறார். ஆயினும் குற்றவாளிகள் ஒரு வீதம் அல்லது 2 வீதமே தண்டனை பெறுகிறார்கள் எனவும் ஆதாரத்துடன் தெரிவிக்கிறார்கள். கடந்த 2009 இல் 160 பெண்கள் கணவன்மார்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். எனவும் ஆயிரக்கணக்கான பெண்கள் அடி உதை சித்திரவதை என கணவன்களால் அனுபவிக்கிறார்கள் எனவும் பெண்கள் பாதுகாப்புச் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ்வன்முறைக்கு உள்ளாகின்றவர்கள் தாமாக முன் வந்தால் தாம் சட்ட நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருப்பதாகவும் அவ் பெண்கள் அமைப்பு கூறியுள்ளது.
பெண்கள் பாதுகாப்பு அமைப்பு (Viols Femmes Informations)
தொலைபேசி எண்: 0 800 05 95 95 (அழைப்பு இலவசம்)
இதைத் தூமையில் பதிவிடுகின்றேன்.
நன்றி
தர்மினி