தோழமையுடன் அனைவருக்கும் கிழக்கு மகாணத்திலிருந்து எமக்கு தோழிகள் சிலரால் உதவிகேட்டு மடல் ஒன்று அனுப்பட்டுள்ளது. எம்மால் இயன்ற உதவிகளை நாம் வழங்கி வருகின்றோம் சமூக ஆர்வலர்கள் யாரும் எம்டுமன் இணைந்து உதவி செய்ய விரும்பினும் சரி அல்லது நேரடியாதக உதவி செய்ய விரும்பினும் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்
தொடர்புகட்கு
Killaku@ penn – gmail.com , udaru@bluewin.ch
இதுவரை கண்டிராத இயற்கையின் சீற்றத்தை கிழக்கு மாகாணம் எதிர்கொண்டுள்ள நிலையில் இலட்சக்கணக்கான மக்கள் ஏதிலிகளாக்கப்பட்டுள்ளதுடன் கோடிக்கணக்கான ரூபா சொத்துகளுக்கும் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பலபகுதிகள் ஏனைய மாவட்டங்களிலிருந்து பெரும்பாலும் துண்டிக்கப்பட்ட நிலை காணப்படுவதால் இங்குள்ள மக்களின் நிலை மிக மோசமடைந்துள்ளது. உணவின்றி, உடையின்றி, போதிய மருத்துவ வசதிகளின்றி தங்குவதற்கு இடமின்றி மக்கள்படும் அவலங்கள் சுனாமியின் போது ஏற்பட்ட அவலம் போல் காணப்படுகின்றது.
.
போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் நிவாரண, மருத்துவ உதவிகள் அங்கு சென்றடைய முடியவில்லை. மட்டக்களப்பு நகரைத் தவிர ஏனைய இடங்களில் உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பட்டினி நிலையை எதிர்கொண்டுள்ளனர். இதில் சிறுவர்களும் முதியவர்களுமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பட்டினியால் உயிரிழக்கும் பரிதாப நிலையிலும் உள்ளனர். கையில் பணமில்லை. கையிருப்பில் உணவில்லை. வங்கிகளில் வைப்பிலிட்டுள்ள பணத்தைக்கூட எடுக்க முடியாத நிலை. பசியினால் கதறும் குழந்தைகளும் நோயினால் வாடும் முதியவர்களுமென எங்கும் அவலங்கள். தொடர்ந்தும் வெள்ளம் பெருகிக் கொண்டேயிருக்கின்றது. அதனால் உங்கள் உதவிகளைஎதிர்பார்க்கின்றோம். இதில் பெண்கள் அமைப்புக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்யக் கோருகின்றோம.; சுனாமியின் போது பல பெண்கள் அமைப்புக்கள் உதாரணமாக ஊடறு போன்ற பெண்கள் அமைப்புக்கள் முன் நின்று எமக்கு உதவிகளை செய்திருந்தன. அதே போல் இவ்வனர்த்த்திற்கும் உதவுமாறு