– சந்திரலேகா கிங்ஸலி (மலையகம்)
ஹற்றன் நோற்றன் பாலப் பிரதேசத்தில் தொண்டர் ஆசிரியர் ஒருவர் 5ம்வகுப்பு புலமைப் பரீட்சையில் சித்தியெய்தி பாடசாலையில் கல்வி பயிலும் 11 வயதுடைய மாணவிகள் பலரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது தெரியவந்ததையடுத்து அந்த தொண்டர் ஆசியரின் கைது செய்யப்பட்டுள்ளார். |
.ஆனால் அவ் ஆசிரியனை தொடர்ந்து சிறையில் வைத்திருக்கவேண்டாம் எனவும் அவ் ஆசிரியனை பிணையில் விடச்சொல்லியும் சில சட்டத்தரணிகள் முயற்சித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும்,ஆர்வலர்களும் இணைந்து சட்டத்தரணியின் அலுவலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர்.
அதே நேரம் அப்பிரதேசத்தில் உள்ள NGO ஒன்று அவ்வன்முறையாளனான ஆசிரியனை பிணையில் எடுப்பதற்கு பணம் சேர்த்துக்கொடுத்திருப்பதை அறிந்த பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்களும் மனிதஉரிமை செயற்பாட்டளார்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அவ் ஆசிரியனுக்கு ஆதரவாக செயற்படும் சட்டத்தரணி மற்றும் NGO வையும் வன்மையாக கண்டிப்பதுடன் நாம் வன்மையாக கண்டிப்பதுடன் அவ் ஆசிரியனுக்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுக்க மனிதஉரிமை செயற்பாட்டாளர்களும் பெண்களும் முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்