தாய்லாந்து தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள்

5

தாய்லாந்து  பாங்காக் நகரில் உள்ள குடியமர்வு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இருக்கும்   (Immigration Detention Camp – IDC) 155 ஈழ அகதிகளில், 40 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள். இவர்களில் 6 பெண்கள் கர்ப்பம் தரித்து, அடுத்த ஓரிரு மாதங்களில் குழந்தை பெற்றெடுக்கும் நிலையில் இருக்கின்றனர்.

 இவர்களுக்கான மருத்துவ உதவியைக் கூட தாய்லாந்து அரசு மறுத்து வரும் நிலையில், நேரத்திற்கு சரியான உணவு கொடுக்கப்படாமல், பாதுகாப்பற்ற நிலையிலும் போதிய இட வசதியின்மையால் நாள்தோறும் உடல் நலம் குன்றி வருகின்றனர்.

2

 கதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சரத்தில் தாய்லாந்து  கையொப்பம் இடவில்லை. இருப்பினும் அந்நாட்டின் அருகில் அமைந்திருக்கூடிய வியட்நாம் அகதிகளுக்கு புகலிடம் அளித்து வருகிறது. அங்குள்ள அகதிகளுக்கான ஐ.நா. அதிகாரிகள் முறையாக இவ்வகை அகதிகளை பதிவு செய்து வருகின்றனர். இதனை கேள்வியுற்று மே 2009ல் இலங்கையை விட்டு தப்பிய ஈழத்தமிழர்கள் தாய்லாந்தை அடைந்து ஐ.நா. அதிகாரிகளிடம் முறையாக அகதிகளாய் பதிவு பெற்றனர். ஆனால், கடந்த மாதம் 11ம் தேதி (11.10.2010) திடீரென, தாய்லாந்து காவல்துறையினர் அகதிகளை குடியமர்வு தடுப்புமையத்தில்; 60×26 அடியுள்ள அறை ஒன்றில் 115 ஆண்களையும், மீதமுள்ள பெண்களையும்- 15 (3 முதல் 10 வயது) குழந்தைகளையும் வேறு ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் இவ்வலத்தை மனித உரிமை அமைப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பல மனித உரிமை ஆர்வலர்கள் கேட்டு வருகின்றனர். இவர்களின் அடிப்படை மனித உரிமைகளை வழங்குமாறு அனைத்து மனித உரிமை ஆர்வலர்களும் குரல் கொடுக்க வேண்டும் என இவ்ஈழ அகதிகள் கேட்டுக்கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *