1996 ல் ஈவ் என்ஸ்லர் (EVE ENSLER) 200 பெண்களிடம் நேர்காணல் கண்டு அவர்களின் பாலுறவு குறித்த அனுபவங்களைக் கேட்டார். அந்த அனுபவம்தான் த வஜினா மோனோலாக் ( THE VAGINA MONOLOGUES) யோனிகளின் தனிப்பாடலாக மேடைகளில் ஒலிக்க ஆரம்பித்தது. இந்த நாடகம் உலகமெங்கும் பரவியது. யோனிகளுக்கு மொழியோ தேசமோ கிடையாது. அவை பேசிய கதைகள் மீண்டும் மீண்டும் அதையே முன்மொழிந்தன. பெண்ணிய தளத்தில் யோனி என்பது பெண் விடுதலையின் ஓர் அங்கம். எனவேதான் , சினம் கொண்ட யோனி, என் யோனி என் கிராமம், அவன் பார்க்கும் அவன் விரும்பும் அது..என்று பல கதைகளை யோனிகள் பேச ஆரம்பித்திருக்கின்றன.
த வஜீனா மோனோலாக் நாடகத்தை ஆங்கிலத்தில் மும்பை அரங்குகளில் பார்த்திருக்கிறேன். அதன் இன்னொரு வடிவமாகவே அண்மையின் வாசித்த கவிதை தொகுப்பு ‘நிர்பயா’ . அல்குல் என்ற நம் இலக்கியங்களில் கையாளப்பட்டிருக்கும் சொல் இருக்க ஏன் யோனி என்ற சொல் பயன்படுத்தப்பட்டது ? யோனி என்ற சொல்லை பயன்படுத்திய கவிஞரிடம் அதைக் கேட்டுப் பார்த்தப்போது அதற்கான விளக்கம் அவரிடம் இல்லை! அல்குல் என்ற சொல் பெண்ணின் பாலியல் உறுப்பு. அழகியல் அடையாளம். ஆனால் யோனி என்ற சொல் ஓர் அரசியல் குறியீடாக மாறியது. காரணம் அல்குல் பீடங்கள் இல்லை. யோனி பீடங்கள்தான் இருக்கின்றன.. ! இந்த அரசியல் கலைச்சொல் புரிதலோடுஇத்தொகுப்பு கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அதனால் இதன் முக்கியத்துவம் பெண்ணுடல் தாண்டியும் பயணிக்கிறது. பெண்ணுடலின் அரசியலை மிகத் தெளிவாக தன் கவிதைகளின் ஊடாக பேசுகிறது இக்கவிதைகள்
நிர்பயா என்ற சொல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு நாம் சூட்டிய பெயர் மட்டுமல்ல. நிர்பயா என்பது இன்று ஒரு குறியீடு.
“தலைநகரத்தில் அதே நடுத்தெரு
அதே திரைப்படத்தின் அதே மாலைக் காட்சி
அதே நண்பன்
துருப்பிடித்த ஆணிகளால்
என் உயிர் சிதைத்தீர்களே
அதே நிர்பயா
இந்த முறையும் விரல் உயர்த்துகிறேன்..”
(பக் 76)
… என்று மீண்டும் மீண்டும் நிர்பயாக்கள் வருகிறார்கள். வரும்போதெல்லாம் மாறவேண்டியது நிர்பயாக்கள் அல்ல, நீங்கள்தான் என்று நம் சமூகத்தின் முகத்தில் அறைந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
தாய்மொழியை நாவால் தடவும் முன்பே தாயின் பேரிக்காய் அளவு கருத்தொட்டிக்குள் மெளனம் பொருத்திக் கொள்கிறது. என் அம்மா செத்துவிட்டாள்இ Nழு சுஐP Pடுளு.. என்று அறிவிக்கிறது. முலைகளை கைகளில் சுமந்து சுடுகாடு வரை ஓடிக்கொண்டிருக்கிறது. எதிர்க்கும் ஆற்றலுடன் தலித் யோனியாய் இயந்திர துப்பாக்கியில் வெடிக்கிறது. இதை எல்லாம் கண்டும் காணாமல் உலாவரும் கடவுளை ‘ப்ளடி காட் “ என்று ஓங்கி அறைகிறது.
“பறவைகளின் கூடுகளுக்கு
கதவில்லை
அயர்ந்து உறங்குகையில்
சகபறவை
வல்லுறவிக் கொள்வதில்லை”
(பக் 83)
என்று பறவைகளைக் கொண்டு பாடம் நடத்துகிறது.
தலித் யோனிஇ முஸ்லீம் யோனிஇ பழங்குடியின யோனிஇ புத்தம் புதிய கிறிஸ்தவ யோனிஇ என்று நீதிமன்றத்தில் மண்டியிடும் எல்லா யோனிகளுக்காகவும் நீதி கேட்கிறது.
எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லைஇ என்று புதியகீதையை எழுதுகிறது.
பெண்ணிடம் நிலத்தைக் கொடுக்க முடியாதுஇ அவளே நிலமென்றால் கொடுக்கத் தேவையில்லை என்று நிலம் பெண்ணுடல் அரசியல் பேசுகிறது.
இறுதியாகஇ
“உடைந்த நிலம்
நீங்கள் புணர்ந்து சிதைத்த என்னுடல்
உடைந்த நிலத்திலிருந்து
இன்னும் இன்னும்
உரக்கப் பாடுகிறேன்
விடுதலை கீதம்”
(பக் 96)
என்று யோனிகளின் தேசியகீதம் பாடுகிறது.
ஜனகண மன கதி..
பாரத மாதாக்கி ஜே
…
வாழ்த்துகள் எஸ்தர் ராணி.
நிர்பயா – கவிதை நூல்
கவிஞர் எஸ்தர் ராணி.
பக் 100 விலை ரூ 120
வெளியீடு: கொட்டாரம்இ சென்னை. @ 2024