புறக்கணிக்கப்படும் மகளிர் நலன் – வைகைச் செல்வி (இந்தியா)

உலக மகளிர் தினக் கொண்டாட்டங்கள் எல்லாம் ஏறக்குறைய முடிந்துவிட்ட நேரமிது. பெண்களின் உடல் நலத்தைப் பற்றிய அக்கறை, ஐ.நா. சபை முதல் சிற்றுராட்சி வரை பரவி இருப்பதை மறுக்க இயலாது. னால் பணி புரியுமிடத்தில் பெண்களுக்கு அப்பணியின் நிமித்தம் ஏற்படும் பணியிட நோய் அபாயங்கள் ( (Occupational health hazards) பற்றி அவ்வளவாய் யாரும் கண்டுகொள்வதில்லை.

பொதுவாகவே எந்தச் சுற்றுச்சூழல் மாசுபாடும் ண்களை விடப் பெண்களை அதிகம் பாதிக்கிறது. பெண் பாதிக்கப்படுகையில், அப்பாதிப்பானது, இனவிருத்தியின் மூலம் குழந்தைகளையும், பிற்காலச் சந்ததியையும் பாதிக்கும் தன்மையது. வீட்டில் இருக்கையிலும் உள் காற்று மாசால் ( Indoor air pollution அதிகம் பாதிக்கப்படுவது பெண்தான். விறகு, வறட்டி, தேங்காய் நார் மற்றும் எந்த எரிபொருளாலும்
அவளுக்கு மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது சாத்தியமே. விதி 1000 ( வுhந சரடந ழக 1000) என்ற நியதியின்படி, வெளியே விடப்படும் மாசை விட வீட்டுள்குள் ஏற்படும் காற்று மாசு மனித நுரையீரல்களை 1000 மடங்கு அதிகமாகச் சென்றடைகிறது. க இங்கும் ணை விடப் பெண்ணே அதிகம் பாதிக்கப்படுகிறாள். ஏனெனில், பெண்ணே அதிக நேரம் வீட்டில், அதிலும் குறிப்பாக சமையல்கட்டில் புழங்குகிறாள்.

இந்தியாவில் போபால் விஷ வாயு விபத்து ஏற்பட்டபோது, நச்சுக்காற்றைச் சுவாசித்த பெண்களுக்குப் பல விதங்களில் இன விருத்தி தொடர்புடைய பிரச்சினைகள் ஏற்பட்டன. விபத்து நடைபெற்ற இரண்டாம் வாரத்தில் இருந்து குறைப்பிரசவம், கருச்சிதைவு கியவை ஏற்பட ஆரம்பித்தன. 1985ல் 1900 வீடுகளில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி அங்கு 100 கருச்சிதைவுகளும் 22 குறைப்பிரசவங்களும் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதிகப் பெண்கள் மாதவிலக்கு மற்றும் கர்ப்ப சம்பந்தப்பட்ட கோளாறுகளினால் பாதிக்கப்பட்டனர்.

தொழில்புரட்சிக்குப் பின்னர், பெண்கள் தொழிற்சாலைகளுக்குச் சென்று வேலை செய்வது அதிகரித்துள்ளது. நுண் மின்னனுவியல், உணவு செய்முறை, ஜவுளி, காலணி, ரசாயனம், மருந்து உற்பத்தி கிய தொழில்களில் பெண்களின் சதவீதம் அதிகரித்துள்ளது.

பணியிட நோய் என்பது செய்யும் பணியின் நிமித்தம் ஒருவருக்கு ஏற்படுவதாகும். பௌதீக, ரசாயன, உயிரியல் மற்றும் உளவியல் நோய் என்று பணியிட நோய்கள் பல்வகைப்படுகின்றன. இரைச்சலால் ஏற்படும் நோய் பௌதீக நோய் என்றால், மன அழுத்தம் உளவியல் நோயாகும். பணியிட நோய்கள் பல வேளைகளில் உடனடியாக விளைவைத் தராததால், அதற்கான காரணத்தைக் கண்டறிவது கடினமாகிறது.

பெண்களின் உடல் அமைப்பும், அவாகளின் இன விருத்திக்கான உடல் ரீதியான பங்ககேற்பும் பெண்களைப் பணியிட நோய்களால் கூடுதல் பாதிப்படையச் செய்கின்றன.

பொதுவாக ஒரு பெண் தொழிற்சாலையில் வேலை செய்கையில் தூசி, ஒலி, வலி, வாயு, அதிர்வுகள், அதிக உஷ்ணம் அல்லது குளிர், ரசாயன மாசு கியவற்றால் ண்களை விட அதிகம் பாதிக்கப்படுகிறாள். உயர் நிலை அதிகாரிகளாகப் பணிபுரியும் மன அழுத்தம் சர்வ சாதாரணமாகிவருகிறது. இப்போதெல்லாம் பாலியல் தொல்லைகள் ( (Sexual harassment கூட பணியிட நோயாகும் அளவிற்கு அதிகரித்து வருகின்றன. அடையாளம் காட்டவே இயலாத இத்தொல்லைகள், உள்ளுக்குள் புழுங்கும் பெண்களின் மன அழுத்தத்தை உச்ச நிலைக்குக் கொண்டு செல்வதோடு, தற்கொலை செய்யக்கூட தூண்டி விடுகின்றன.

மூன்றாம் உலக நாடுகளில் பொதுவாக பணிமுடிந்த பின்னர், வீட்டை அடைந்தாலும் அவளது உடல் மற்றும் உள்ள இறுக்கமும் அழுத்தமும், வலியும் குறைவதில்லை. அதோடு வீட்டிலும் தொடர்ந்து வேலை பார்க்கிறாள். ஒருநாளைக்கு ஓர் ணைவிட ஒரு பெண் சராசாயாக மூன்று மணி நேரம் கூடுதலாக வேலை பார்க்கிறாள். பணியினால் ஏற்படும் நோயால் நாட்பட்ட களைப்பு, விரைவில் முதுமையடைதல், மாதவிலக்குப் பிரச்சினைகள், உளவியல் பிரச்சினை, மனஅழுத்தம் கியவை அவளுக்கு ஏற்படுகின்றன.

கட்டடத் தொழிலில் ஏறக்குறைய கால் பகுதிப் பணியாளர்கள் பெண்களாகும். சில வருடங்களுக்கு முன்னர் மும்பையில் கட்டடத் தொழிலாளர்களிடையே எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், பெண்கள் அதிக எடையைக் கையாளுவதால் அவர்களுக்குக் கால் வலியும், கர்ப்பச் சிதைவும் அடிக்கடி ஏற்படுவது கண்டறியப்பட்டது. பெண்களுக்குப் பணியிட நோய்களால் பாதிப்பு ஏற்பட்டும் யாரும் அதனைப் பெரிதாக எடுத்துக் 6காள்வதில்லை.

சில தொழில்களில் இளம் பெண்கள் மூன்று வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கின்றனர். ஒப்பந்தக் காலம் முடிந்தவுடன் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொண்டு பணியிலிருந்து நின்று விடுகின்றனர். பணியிட நோய் என்பது பல வருடங்கள் கழித்து தன் கைவரிசையைக் காட்டுகையில் காலம் கடந்து போயிருக்கலாம். உதாரணமாக பல மணிகள் தையல் எந்திரத்தினை இயக்கும் பெண்ணா அல்லது மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் அசெம்பிளிங் வேலை பார்க்கும் பெண்ணாகட்டும், வேலையை விட்ட பிறகும்கூட முதுகு வலி மற்றும் பார்வைக் குறைவால் பாதிக்கப்பட நேரிடலாம். பணியமர்த்துநரிடம் இதற்காகப் பல ண்டுகள் கழித்து ஒரு பெண்ணால் இழப்பீடு வாங்கவும் இயலாது.

சர்வதேசத் தொழிலாளர் நிறுவனம் International Labour Organization) பெண்களின் பணியிட நோய்கள் பற்றிய அக்கறை புறக்கணிப்படுவதாகவே கூறி வருகிறது.

பெண்களைப் பொறுத்தவரை 2005ம் ண்டு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ண்டாகும். நான்காவது சர்வதேசப் பெண்கள் மாநாடு பெய்ஜிங்கில் 1995ல் நடைபெற்று பத்தாண்டுகள் முடிவு பெற்றுள்ளது. மில்லினியம் உச்சி மாநாடு 2000ல் நடைபெற்றபோது உலக நாடுகள் சேர்ந்து வெளியிட்ட மில்லனியம் சாசனத்தில் 2015க்குள் எட்ட வேண்டுமென 8 இலக்குகள் ( (Millennium Development Goals ) நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் ஒன்று ப_ய1லியல் சமத்துவமும் மகளிர்க்கு அதிகாரமளித்தலும் கும். இந்த இலக்குகள் உருவாக்கப்பட்டு ஐந்தாண்டுகள் முடிவு பெற்றுள்ளன. இந்த இலக்குகள் எவ்வளவு தூரம் எட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை இந்த ண்டில் உலக நாடுகள் ய்வு செய்யப்போகின்றன.

இதனை முன்னிட்டே ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் ( (United Nations Environment Programme ) செயல் இயக்குநர் இந்த ண்டு மகளிர் தினத்தன்று ‘வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட கொள்கைகள் அனைத்தும் பெண்கள் மீது ஏற்படும் தாக்கத்தைக் கருத்திற்கொண்டே அமைக்கப்பட வேண்டும்’ எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

பெண் கவனத்தோடு வேலை பார்ப்பவள். பணியிடத்தில் தன் உரிமைகளுக்காகப் போராட மாட்டாள். கூடுதல் வேலைகள் அளித்தாலும் வாய் பேசாமல் செய்து முடிப்பாள். இதனாலேயே இதுகாறும் ண்கள் பார்த்து வந்த பணிகளிலும் இரவு நேரங்களிலும் பெண்கள் இப்போதெல்லாம் பணியமர்த்தப்படுகின்றனர். உலக சுகாதார நிறுவன சாசனத்தின்படி, உடல் நலம் என்பது உடல் உள்ளம் மற்றும் சமூகபூர்வமான முழுமையான நலத்தைக் குறிப்பதாகும். இந்த முழுமையான நலத்தை வீட்டிலும், வெளியிலும் மட்டுமல்ல, பெண்கள் பணிபுரியும் இடங்களிலும் அவர்களுக்குக் கிடைக்கச் செய்தலே இன்றைய தேவையாகும்.

june 2006

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *