தாதியர் சங்கிலி -பத்மா அரவிந்த் (அமெரிக்கா)

அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு என்பது கூட பொருளாதர நிலை குறைந்தவர்களிடையே மாறீவிடுகிறது. 34 வயது விக்கி டியாஸ் 5 குழந்தைகளுக்கு தாய். இவர் முதலில் பள்ளி ஆசிரியையாகவும், ஒரு பயண ங்களை திட்டமிடும் ஊழியையாகவும் பிலிப்பன்ஸில் வேலை பார்த்தார். பிறகு வீட்டின் நிதிநிலைமையை மேம்படுத்த ஒரு தாதியாக அமெரிக்கா வந்தார். இவர் வீடு வரும் போது குழந்தைகளுக்கு விவரம் புரியவில்லை. இவர் போவதில் கணவனுக்கு பெரிய அளவில் கோபமோ எதிர்ப்போ இல்லை. அமெரிக்காவில் வாரத்திற்கு கூ400 பெறும் இவர், அதில் பாதியை ஊருக்கு அணுப்பி தன் குழந்தைகளை படிக்க வைத்தார். இந்த விக்கியை போல பல்லாயிரக்காண பெண்கள் சட்டத்தின் அனுமதியுடன் முறையாக கடவு சீட்டு பெற்றோ அல்லாமலோ அமெரிக்கா வந்து கொண்டிருக்கின்றனர்.

உலகமயமாக்கப்பட்ட வேலைக்காரர்கள் பற்றி தன்னுடைய நூலில் பாரீனாஸ் இதை மிக அழகாக எழுதுகின்றார். இவர் கலிபோர்னியா பல்கலை கழகத்தின் வேலைபார்க்கும் குடும்பங்களின் மன்றத்தில் அங்கத்தினராக உள்ளார். பிலிப்பைன்ஸில் தன் குழந்தைகளைபார்த்துக்கொள்ள கூ40 வாரம் ஊதியமாக கொடுக்கும் விக்கி, “இதில் பணம் அதிகம் கிடைக்கிறது, ஆனால் அதற்கேற்றார்போல வேலையும் மிக அதிகம். துணிகளை இஸ்திரி போட்டு கொண்டிருக்கும் போதே அடுக்களையிலிருந்து தட்டுக்களை கழுவ அழைப்பு வரும். என் குழந்தைகளை பிரிந்து இருக்கும் எனக்கு, இந்த குழந்தைகளிடம் அன்பு செலுத்துவது ஒன்றே ஆறுதல்” என்று கூறுகிறார்.

விக்கியை போன்றவர்கள் இந்த உலகமயமாக்கப்பட்ட கவனிப்பு சங்கிலியில் ஒரு அங்கம்தான். மூன்றாம் தர நாடுகளின் ஏழையின் வீட்டில் பிறந்த குழந்தைகளை அங்கே உள்ள மூத்த பெண் பார்த்துக்கொள்வாள். அவளுடைய அம்மா இன்னொரு வீட்டில் அங்கேயிருந்து சற்று மேம்பட்ட நாட்டிற்கு சென்ற பெண்ணுடைய குழந்தையை பார்த்துக்கொள்வாள் . இது இரண்டாம் சந்திப்பு. இன்னொரு நாட்டிற்கு சென்ற பெண் அங்கே பணக்கார வீட்டில் உள்ள பெண்ணை பார்த்துக்கொள்வாள். இது கடைசி சந்திப்பு (டயளவ டiமெ). உலகளாவிய சங்கிலி ஒரு ஏழை நாட்டில் தொடங்கி பணக்கார நாட்டில் முடியும். இல்லை எனில் ஒரு ஏழை குடும்பத்திலிருந்து அந்த நாட்டில் உள்ள சற்றே பணக்கார குடும்பத்தில் முடியும்.

இத்தகைய உலகளாவிய குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் செவிலிகள் அல்லது தாதிகள் சங்கிலி 1994 இ லிருந்து அதிகரித்திருக்கிறது. 120 மில்லியன் பெண்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு குழந்தைகளை பார்த்துக்கொள்ள சட்டமுறைப்படியோ அல்லது சட்டமுறைப்படி அல்லாமலோ குடி பெயர்ந்திருக்கிறார்கள். இது உலகின் 2மூ மக்கள் தொகையாகும் என உலக சுகாதார மையம் கூறுகிறது. இதில் தங்களின் செல்ல குழந்தைகளை விட்டு விட்டு அடுத்தவரின் குழந்தைகளை பார்த்துக்கொள்ள எத்தனை பேர் சென்றார்கள் என்பது சரியாக தெரியாத போதிலும் இவ்வாறு சென்றவர்களில் பெரும்பாலும் பெண்கள் என்பது தெரியவருகின்றது. தற்போது தங்கள் குழந்தைகளை விட்டு வரும் பெண்களில் பலர் பலவித மனநல நோய்களுக்கும் உள்ளாவதாக கூறுகிறார்கள்.

பெண்களின் நிலை வளர்ச்சி இவற்றிற்கும் ஒரு நாட்டில் உலக வங்கியில் உள்ள கடனின் நிலைக்கும், மற்றும் உணவின் தட்டுப்பாடு ஆகியவற்றிற்கும் தொடர்பு இருக்கிறது என்று தெரிய வந்திருக்கிறது. சமீபத்தில் ஆய்வாளர்கள் அவிலா, எவிலின் க்லென், மேரி ரோமெரோ போன்றவர்களின் முயற்சியால் சில புதிர்கள் அவிழ தொடங்கி உள்ளன.இவற்றை புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல் என்ன என்றால் பொருளாதர முடிவும், மனித மனத்தின் தன்மையும் மிகவும் வேறானவை. மனித உணர்வுகள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாறுவதை எப்படி கண்காணிக்க முடியும்?சிக்மண்ட் கராய்டுஇன் கொள்கைப்படி இது முடிகின்ற காரியமே. உதாரணமாக ஒருவர் திரு சந்திரனை காதலிப்பதாக வைத்துக்கொள்வோம். அவர் இல்லாத போது அந்த அன்பு அவருடைய குழந்தையிடம் செலுத்தப்படும் என்று கராய்ட் நம்புகிறார்.பெரும்பாலும் மிக நெருங்கிய சொந்தங்களிடையே இது நடக்கும் என்று கராய்ட் நம்பினாலும், சில சமயங்களில் நண்பரின் நண்பன் நண்பனாவது நடைமுறையில் சாத்தியமே.

இது உண்மையானால் இங்கே அன்னையின் அன்பே ஒருவித இடமாற்றம் அடைகிறது. விக்கியின் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய அன்பு, பணக்கார பெண்ணின் குழந்தைகளுக்கு கிடைக்கிறது. இப்படி அன்பு இடமாற்றம் செய்ய முடியும் எனில் இது எப்போதும் பொருளாதாரத்தில் மேம்பட்டுள்ளவர்களை நோக்கியே நகர்கிறது. எனில் அன்பில்கூட பாகுபாடு தோன்றுகிறது.

அது உண்மையெனில் ஏழைகளிடமிருந்து சுரண்டப்படும் அன்பு பொருளாதரத்தில் மேம்பட்டுள்ளவர்களை அடைகிறதா?இது மேலும் மேலும் வளர்வதை பார்க்கும் போது அமெரிக்கா போன்ற மேம்பட்ட நாடுகள் தாதுப்பொருட்கள் மட்டும் அல்லாது அனபையும் கீழை நாட்டிலிருந்து பெற்றுக்கொள்கின்றனவா என்ற கேள்வி எழாமல் இல்லை. விக்கி போன்றவர்கள் பொருளாதார நிர்ப்பந்தத்தால் இது போல நாடுவிட்டு நாடு மாறும் போது அவர்களை அறியாமல் ஏற்ற தாழ்வுகளை கொண்டுவருகிறார்கள். ஆனால் இந்த சங்கிலியில் உள்ளவர் அனைவருமே அவரவரை பொறுத்தமட்டில் தங்களுக்கு சரி யென்று தோன்றியதையே செய்து வருகிறார்கள்.

ஆனாலும் இவர்களால் தங்கள் குழந்தைகளை பிரிந்து நிம்மதியாக வாழமுடிவதில்லை. பிலிப்பனஸ{க்கு சமீபத்தில் சென்ற நானி ஒருவர் தங்கள் குழந்தைகள் தன்னை அடையாளம் காணவில்லை என்றும் அவர்கள் வாழ்வில் பெருமளவை தான் இழந்துவிட்டதாகவும் வருத்தப்படுகிறார். ஒரு நானி தன் குழந்தையை 4 வயதில் விட்டு விட்டு வந்ததாகவும் இப்போது அந்த குழந்தைக்கு 10 வயது ஆன பொதும் தன்னை கட்டிகொண்டு விடவேயில்லை என்றும் மீண்டும் விட்டு விடப்போகிறேனோ என்ற ஏக்கத்தில் இருந்ததாகவும் சொல்லி கண்கலங்குகிறார்.

இன்னும் சிலர் அன்பு இடமாற்றம் முழுதுமாக செய்ய முடிவதில்லை எனவும் புதிதாக தன் குழந்தைகளை விட்டு வந்த போது அந்த நினைப்பில் பல மணிநேரம் கூட வெறித்து பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்ததாகவும், வேலைகளை சரிவர செய்யாததனால் கோபத்திற்கு இலக்காணதாகவும் சொல்லி இருக்கிறார். இரண்டு மாத குழந்தையை விட்டு விட்டு வந்த இளம் தாய் இரவு பகல் பாராது அழுதிருக்கிறார். சந்தோஷமில்லா இவர்களிடம் குழந்தைகளை விட்டு செல்வருக்கும் தனித்திருக்கும் குழந்தைகளாலும் இந்த சமுதாயத்திற்கு ஏற்படும் விளைவுகள் என்ன? குழந்தைகளை பார்த்துக்கொள்ள வந்தவர்களில் 50மூ பெண்கள் கல்லூரி படிப்பை உடித்தவர்கள். தங்கள் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டத்தினாலும் பொருளாதார கஷ்டங்களினாலும் இவ்வாறு பெண்கள் மேலும் மேலும் வந்துகொண்டிருக்கிறார்கள் என்று இந்த ஆராய்ச்சி கூறுகிறது.
இதனால் வரும் சமுதாய சங்கடங்கள், பெண்கள் படும் அல்லல்கள், பாலியல் கொடுமைகளை விவரமாக பார்ப்போம்.


இத்தனை கஷ்டங்கள் இருதும், தன் உறவு, குடும்பம் இவற்றை விட்டு வந்தாலும், தாதியர்கள் அதிகமாக மேலை நாடுகளுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். 1990களின் ஆரம்பம் முதல் 55 மூ பெண்கள் தாதியராக மேலை நாடுகளுக்கு பிலிப்பன்ஸிலிருந்து வந்திருக்கிறார்கள். இவர்களால் கிடைக்கும் அன்னிய நாட்டு செலவாணி மிக அதிகம் எனவும், மின்பொருளுக்கு அப்புறம் தாதியர் ஏற்றுமதியே அதிகம் எனவும் பிலிப்பைன்ஸ் கூறுகிறது. இவ்வாறு பெண்கள் குடியேறுவது அதிகரிக்க, படித்தவர்கள், கல்லூரி மாணவிகள், வியாபார நிமித்தம் வருபவர்களும் அதிகம். பரனாவின் ஆராய்ச்சியில் தாதியராக வந்தவர்களில் பெரும்பாலோரு கல்லூரி பட்டதாரிகளாகவே இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதுவும் பெரும்பாலோர் திருமணமான 30 வயதுக்குள்ளான பெண்களே.

இதில் ஆண்களின் வேலை என்ன? மேல்தட்டு மனிதர்களில் ஆண்கள் குழந்தை வளர்ப்பதை பெண்களிடம் விட்டுவிடுகிறார்கள். இன்னும் சிலர் அரேபிய நாடுகளுக்கும் இன்னும் பிற நாடுகளுக்கும் அதிஹ ஊதியத்தை எதிர்பார்த்து சென்றுவிடுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஊர்களில் தங்கி இருந்து குழந்தைகளை வளர்க்கிறார்கள். ஆனாலும் பிற நாடுகளுக்கு வந்த பெண்கள் தாங்கள் விருப்பட்டு வந்ததைவிட ஓடி வந்தவர்கள் அதிகம்.
ஒரு பெண் கீழ் கண்டவாறு சொன்னார். நான் என் கணவரால் தினமும் அடிக்க பட்டேன். என் குழந்தைகளை பற்றி கூட நினக்க முடியாமல், எப்போதும் எப்படி தப்பிப்பது, வருவது என்றே நினைத்து கொண்டிருந்தேன். நான் கொலை செய்யப்பட்டு விடுவேன் என்பது என் நினைவாகவே இருந்தது. இல்லை என்றால் நான் அவரை கொலை செய்துவிடுவேனோ என்ற பயமும் இருந்தது. என் குழந்தைகள் என் சகோதரிகளுடன் இருக்கின்றனர். விமானத்தில் ஏறியபின், கூண்டைவிட்டு வெளியே வந்த பறவையை போல உணர்ந்தேன். என் குழந்தைகளை நினைத்தால் வருத்தமாய் இருந்தது. மற்றபடி என் ஊரை விட்டு வந்த வருத்தம் இல்லை.

இன்னும் சில ஆண்கள் தங்கள் ஊரில் இருந்து அனுப்புகின்றன பணத்தை செலவு செய்து கொண்டு அவர்களை கைவிட்டு விடுவதும், இன்னொரு பெண்ணை மணம் செய்து கொண்டு இவர்களையும் ஊரில் விட்டு வந்த குழந்தைகளையும் தவிக்க இட்டுவிடுகிறார்கள். முதலில் அடிக்கடி வரும் கடிதங்கள் காலப்போக்கில் நின்று விடுகின்றன. குழந்தைகள் எங்கே என்று தெரியாமல் மனம் க்ஷ்டப்படும். ஊருக்கு சென்று பார்க்கவும் கையில் காசில்லை, கடவு சீட்டு மீண்டும் கிடைக்காமல் போகலாம் என்று பல நிலையில்லா பிரச்சனைகளில் இவர்கள் வாழ்கிறார்கள்.

இன்னும் சில வீடுகளில் கணவன் வேறு நாட்டில் வேலை பார்த்து பிறகு
ஊருக்கு திரும்ப உடனே மனை கிளம்ப வேண்டி இருக்கிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். ஒர் பெண்ணின் மகன் அவளுக்கு அடிக்கடி கடிதம் எழுதும் போது ஒரு தலைமட்டும் வரைந்து அனுப்புவான். அதில் கண்ணிலிருந்து கண்ணீர் வருவதை போல படம் வரைந்து அனுப்புவதையும் சொன்னாள்.அதேபோல அடுத்த குழந்தைகள் தன் அம்மாவுடன் பொது இடத்திற்கு வருவதை பார்த்து பிள்ளைகள் மனம் வருந்துவதால், அவர்கள் வெளியிடத்திற்கு செல்வதே இல்லை என்பதையும் சொல்லி வருத்தப்பட்டாள்.பணி இடங்களில் இவர்களுக்கு பாலியல் தொல்லைகள் ஏற்படுவதும், உடல் நல ம் முடியாமற் போகும் போது கவனிக்க ஆளின்றி அவஸ்தைப்படுவதும், உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடியாமல் இளமையை தொலைப்பதும் பெரிய துரதிர்ஷ்டம்.

தாதியர் சங்கிலியின் கடைசி இணப்பு: கீழை நாடுகளில் இருந்து வரும் தாதியர்கள் மேலை நாடுகளுக்கு செல்வது, மேலை நாடுகளில் தாய்மைக்கான தேவையும் கீழைநாடுகளில் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. 6 வயதிற்கு கீழே உள்ள குழந்தைகள் உள்ள பெண்கள் 1950 ஊதியம் பெற்று வேலை செய்தவர்கள் 15மூ மட்டுமே. இண்றூ இது 65மூ ஆக வளர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் 45மூ பெண்கள் வேலை பார்க்கும் மக்கல் தொகையை குறிக்கிறது (டுயடிழரச குழசஉந). 18 வயதிற்கு கீழே உள்ள குழந்தைகலை கொண்ட அன்னைகள் 75மூ உம், 6 வயதீற்மூ குறைவாக குழந்தைகளை உடையவர்கள் 65மூ வேலை செய்கிறார்கள். அதேபோல ஒரு வாரத்திற்கு செய்யும் பணிநேரமும் அதிகரித்துள்ள தாக தெரிகிறது.

முன்பு பாட்டிகளும் மற்ற பெண் உறவினர்களும் குழந்தைகளை பார்த்துக்கொண்டிருந்தனர்.ஆனால் இப்போது பாட்டிகளும் உறவினர்களும் வேலைக்கு போவதால் காப்பகங்களும், இன்ன பிற தாதியரும் தேவையாய் இருக்கிறது.ஆக இந்த முதல் சங்கிலியில் பெண்கள் ஒரு நல்ல தாதி கிடைத்ததற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். அவர்கள் இதனால் தாதியர் தங்கள் நாட்டில் பெறுவதைவிட அ திகமாக ஊதியம் தர முன்வருகிறார்கள். இப்போது இது வெறும் குழந்தைகளை பார்த்து கொள்ளும் பணியாய் மட்டும் இல்லாமல் தங்கள் வயதான பெற்றோரை பார்த்து கொள்ளவும் உபயோகமாகிறது. இந்த வகையில் பார்த்தாலும் தங்கள் வயதான பெற்றோரை தவிக்க விட்டு இன்னொரு நாட்டில் உள்ள வயதான பெற்றோரை பார்த்து கொள்வதால் இங்கும் கவலையும் கரிசனமும் இடமாறுகிறது. இத பற்றி மேலும் தனது புத்தகமான வாந ளுநஉழனெ ளூகைவ யனெ வாந வiஅந டீடiனெ என்பதில் ஆர்லி ரஸ்ஸல் எழுதி உள்ளார். பல பெண்கள் அறிவியல், சட்டம் போன்ற ஆணாதிக்க துறைகளை தேர்ந்தெடுத்தாலும், பல பெண்கள் இன்னமும் சமூகத்தில் பெண்மையானவை என்று சொல்ல கூடிய வேலைகளில் இருக்கின்றனர்.

இன்னமும் சில இடங்களில் ஆண்களும் குழந்தைகளை பார்த்து கொள்வதையும் வீட்டு வேலைகள் செய்வதையும் ஒரு சுமையாக கருதாமல் உதவுகிறார்கள். ஆனால் இன்னமும் தங்கள் மதிப்பு என்பது தாங்கள் செய்யும் வேலைகளா பொறுத்தே என்று நினைப்பதால் இவர்களால் குழந்தைகளுக்கு ஒரு தெளிவான பாதையை காட்டவும், நல்ல முறையில் நேரம் செலவழிக்கவும் முடிவதில்லை. இதனாலேயே இவர்கள் ஒரு தாதியை எதிர்பார்க்கிறார்கள்.

ஆக முன்பே கூறியபடி இது ஒரு மூன்றாம் உலக நாடுகளில் தொடங்கி மேலை நாடுகளில் முடிகிறது குழந்தைகளை பராமரிக்கும் இந்த சங்கிலி எப்படி ஆரம்பிக்கிறது என்பது பற்றிய மூன்றுவிதமான கருத்துக்கள்:

Primondalist வடிவம்: நம்முடைய முக்கிய கடமை நம் உறவினரை, குழந்தைகளை காப்பது, நமது நாட்டினருக்கு உதவுவது ஆகும். இந்த வடிவில் ஒருவித தர்க்கம் இருக்கிறது. கராய்டு சொன்னபடி இடமாற்றலை புரிந்து கொண்டால், நம்முடைய குழந்தைகளுக்கு முதலில் நம் அன்பில் உரிமை இருக்கிறது. மூன்றாம் மனிதருக்கு அங்கே இடமில்லை. தன்னிலை உணர்ந்த pசiஅழசனயடளைவக்கு தன் நாடு வீடு முக்கியம். இவர்களால் உலகமயமாதலை புரிந்து கொள்ல முடியாது. இவர்கள் மேலும் பெண்களே தங்கள் வீட்டையும் குழந்தைகளையும் பராமரிக்க வேண்டும் என்றும் கருதுவதால் எனவே அவர்கள் பணிக்கு செல்வதையும் விரும்புவதில்லை.

சூரிய ஒளி நவீனத்துவம் ( ( Sunshine Modernist இவர்கள் தாதியர் சங்கிலியினால் எந்த வித பாதிப்பும் இல்லை எனில் அதற்கு ஆதரவுதெரிவிக்கிறார்கள்.இவர்கள் எதையும் பொருளாதார ஆதாரத்தில் பார்ப்பதால் இவர்களுக்கு இடமாற்றம் செய்யப்படும் அன்பை புரிந்து கொள்வது கஷ்டமாய் இருக்கிறது. உலகின் தாதியர் தேவையை தாதியர் பரவலாக இடம் மாறுவதன் மூலம் சமாளிக்க முடிந்தால் இவர்கள் தாதியர் சங்கிலி பரவாயில்லை என்றே நினைக்கிறார்கள். நவீனத்துவவாதிகள்: ஒரு நவீனத்துவ விமரிசகருக்கு ( ( Critical modernist தாதியர் சங்கிலி ஒரு நல்ல சமுதாய நீதிகளை ( Ethcis) ) உள்ளதாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக இவர்கள் ஒரு னைக்கே ஷக்களை வாங்க சென்றால்கூட அந்த ஷ தயாரிக்கும் இடத்தில் பணியாளர்கல் சரியாக கவனிக்க படுகிறார்களா, பாலியல் கொடுமை இல்லை என்பது முக்கியம்.

இவர்களுக்கு தாதியர் சங்கிலியில் கூட பிலிப்பினோ குழந்தைக்கு ஏதேனும் ஒருவகையில் உதவி கிடைக்க வேண்டும் என்பதும் முக்கியம். இவர்களை பொறுத்தவரை கீழை நாடுகளில் உள்ள தாதியருக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க வழி கிடைக்கும் போதும், அந்த குழந்தைகளுக்கு அன்பிற்கு பாதகம் ஏற்படுவதால் உலக மயமாதல் ஒருவகையில் ஒரு கலவையாகவே இருக்கிறது. இதையே பொருளாதார நிலையில் பார்த்தாலும் மேலை நாடுகளில் பெற்றோரின் கவனம் குடும்பத்திலிருந்து குழசவரநெ 500 நிறுவனங்களுக்கு மாறுகிறது.இதற்கு ஒரு வகை எளிய முடிவே இல்லை. ஆண்கள் சமமாக குடும்ப வேலையய பகிர்ந்து கொள்வதன் மூலம் சற்றே இதற்கு ஓய்வு கிடைக்கலாம்.

ஒருவகையில் கீழை நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் தாதியர் குடியேற்றத்தை குறைக்கலாம். ஆனால் பொருளாதார நிபுணர்களின் கூற்று படி வ ள ர்ச்சி மட்டுமே ஒரு நிலை இல்லாத பொருளாதாரத்தை தர வல்லது எனவும் அது மறைமுகமாக நாடு விட்டு நாடு செல்ல தூண்டும் என்றும் கூறுகின்றனர். இன்னும் சில பெண்கள் தங்கள் கணவனின் கொடுமையிலிருந்து தப்பிக்க நாடு விட்டு நாடு செல்வதால், அந்த நாட்டிலேயே அகதிகள் விடுதி இருப்பின் இந்த பிரச்சினையை குறைக்கலாம்.

வளர்ந்த நாடுகளில் தாதியருடன் அவர்கள் குழந்தைகளை அழைத்து வரவும் அனுமதி தர சட்டத்தை மாற்றி அமைக்கலாம். ஆனால் இதற்கு ஒரு வகையில் எதிர்ப்பு வரும். தங்கள் குழந்தைகளை கவனித்து கொள்வார்களா அல்லது பனியில் கவனம் செலுத்துவார்களா என்று? இதற்கு பதிலாக வேலை தருபவர்கள் தாதியருக்கு அடிக்கடி விடுமுறை தந்து தங்கள் குழந்தைகளை பார்த்துவர வசதி செய்து தரலாம்.

அடிப்படை அளவில் குழந்தைகளை பார்த்து கொள்ளும் வேலைக்கு அதிக முக்கியத்துவமும் ஊதியமும் கிடைக்க செய்யலாம். ஆனால் நாம் படிப்பின் அடிப்படையில் வேலையின் தரதரத்தை நிர்ணயிக்கிறோமே அல்லாது அதன் முக்கியத்துவத்தை பற்றி அல்ல. நம்முடைய குழந்தைகளை பார்த்து கொள்பவர்களை பொருளாதார ஏணியின் அடிப்படியில் வைத்திருகிறோம். பெரும்பாலான சமயங்களில் முக்கியத்துவம் சமுதாய தேவையை ஒட்டியும் அந்த தேவையை பூர்த்திசெய்யும் திறனை ஒட்டியும் அமையும். இங்கே தெவை அதிகமாகவே இருக்கிறது. ஆனால் இந்த முக்கியத்துவம் வழக்கத்திற்கு மாறாக கலாசாரத்தை ஒட்டியும் பெண்கள் செய்வதால் முக்கியத்துவமும் குறைத்து காணப்படுகிறது.

இந்த நிலை மாறாத வரை முக்கியத்துவமும் மாறப்போவதில்லை இதனால் அதிகம் பாதிக்க படுபவர்கள் ஏழைகள் என்பதாலும் கீழை நாட்டை சேர்ந்த குழந்தைகள் என்பதாலும் இன்னும் கவனிக்க படாமலிருக்கிறது என்பது என் கருத்து.

january 2006

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *