பெண்கள் குறிப்பிட்ட சில துறைகளில் பிரபல்யமாதல் ஏனோ கடினமாகி விடுகின்றது. கலைகளில் பெண்ணின் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் பெருமளவில் கலை வரலாற்றில் பெண்களின் பெயர்களை தேடிக்கண்டு பிடிக்க வேண்யதாகவேயுள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் கலைத்துறையில் பெண்களின் பங்:களிப்பு இருந்து வந்த போதும் அவர்களின் பெயர்கள் ஏனோ வரலாற்றில் பதிவாக்கப்படாமலே போய்விட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இக்கட்டுரை ஓவியத்துறையில் பெண்களின் பங்களிப்பு எந்தளவிற்கு இருந்திருக்கின்றது என்பதை நோக்குவதுடன் பெண்கள் எவ்வாறு ஓவியங்களில் சித்தரிக்கபட்டுள்ளனர் என்பதையும் கருத்திற் கொண்டு ஆராயப்படவுள்ளது.
ஓவிய வரலாற்றை நாம் வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலிருந்தே நோக்கலாம். குகைகளில் மனிதன் கோட்டோவியங்கள் கீறியதை நாம் அறிவோம். கையொப்பமிடாத அக்குகை ஓவியங்கள் உண்மையில் யாhரல் வரையப்பட்டவை என தெரிந்து கொள்ள முடியாதிருக்கும் பட்சத்தில்,கலை வரலாற்று ஆய்வாளர்கள் அவற்றை ஆண்களின் கைவண்ணமாக கருத்திற் கொண்டது ஒரு ஊகமே. யேnஉல ய hநடடநச தனது பெண் ஓவியர்கள் என்ற புத்தகத்தின் முன்னுரையில் வரலாற்றிற்கு முற்பட்ட கால ஓவியங்களை ஆண்கள் படைத்தார்கள் என ஏன் கருத வேண்டும் என்ற கேள்வியை எழுப்புகின்றார். இந்தக் கேள்வி நியாயமானதாகவும் சிந்திக்கப்பட வேண்டியதாகவம் இருக்கின்றது. மேலும் யேnஉல ய hநடடநச பெண்கள் கால ஓட்டத்தில் காணாமல் போவதற்கு அவர்கள் திருமணமான பின் அவர்கள் மாறிக்கொள்வதும் ஒரு காரணம் என குறிப்பிடுகின்றார். ஆத்துடன் பெண்கள் 14 வயதிலேயே திருமணம் செய்து கொள்வதால் அதன் பின் அவர்களுக்கு குழந்தை பெறுதலும் குழந்தை வளர்ப்புலுமேயே காலம் சென்று விடுகின்றது. ஏன்ற குறிப்பையும் யெnஉலயின் ஆய்வுக்கட்டுரையில் கண்டறிய முடிகின்றது. நுவீன காலத்தில் பெண்களின் திருமண வயது தள்ளிப் போடவப்பட்டிருந்தாலும் சமூக அந்தஸ்த்தில் மாற்றம் அதிகளிவல் இடம்பெறவில்லை என்றே கூறலாம். மேலும் பெண்களின் படைப்புக்கள் மீள ஆண் ஓவியர்கள் குறிப்பாக அவர்களின் ஆசிரியர்கள் அல்லது ஆண் உறவினர்களினால் கையொப்பம் இடப்படும் வழமை இருந்திருப்பதாக hநடடநச குறிப்பிடுகின்றார்இ எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெண்களின் படைப்புக்கள் என தெரிந்து கொள்ள முடியாமல் போவதும் அவர்கள் பெயர்கள் வரலாற்றில் இல்லாமல் போவதும் தவிர்க்க முடியாததாகி விடுகின்றது.
இருந்தாலும் கலைப்பொருட்களில் பெண்கள் ஓவியம் வரைவது போன்று சித்தரிக்கபட்டிருக்கும் காட்சிகள் எமக்கு பெண்கள் மிகப் பழங்காலங்களிலிலேயே ஓவியத்துறையில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றாகின்றது. குறிப்பாக 5ம் நூற்றாண்டிற்குரிய கிரேக்க சாடிகள் இதற்கு உதாரணமாகின்றது. குpரேக்க ரோம காலங்களில் பெண்கள் ஓரளவிற்கு கலைத்துறையில் ஈடுபடுவது அறியப்பட்டாலும் அவர்கள் கைவினைப் படைப்பாளர்களாக குறிப்பாக தையற்கலை வல்லுனர்களாகவும் நேற்தை பின்னுபவர்களாகவும் மணிகளை கோப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுபவர்களாகவுமே அறியப்படுகின்றனர். அத்துடன் இவ்வாறான கலை ஈடுபாடு கொண்ட பெண்கள் ஓரளவிற்கு வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவும் வீட்டு வேலைகளுக்குள் தம்மைத் தொலைத்துக் கொள்ளாதவர்களாகவுமே இருந்திருக்கின்றனர். மேலும் அவர்களிற்கு கலை ஆர்வம் ஏற்படுவதற்கான குடும்பச் சூழ்நிலையும் இருந்திருக்கின்றது.
முதன் முதலில் பெண் ஓவியர்கள் மறுமலர்ச்சிக் காலத்தில் இத்தாலிலேயே அடையாளம் காணப்படுகின்றனர். அதிலும் கலைக்குடும்பத்திலிருந்து வராத முதற்பெண் ஓவியை மறுமலர்ச்சிக் காலத்தைச் சேர்ந்த ளுழகழnளைடிய யுபெரடளளழடய (1535 – 1540 – 1625) என நுனiவா முசரடட தனது ஓவியத்தில் பெண்கள் என்ற புத்தகத்தில் குறிப்பிடுகின்றார். 15ம் ,16ம் நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்களவில் பெண் ஓவியர்கள் இத்தாலியில் தோற்றம் பெற்றதை தொடர்ந்து ஏனைய மேற்கத்தைய நாடுகளிலும் பெண்கள் ஓவியத்துறையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்ததை கலை வரலாறுகள் எடுத்துக்காட்டுகின்றன. இதிலும் குறிப்பாக தேவாலயங்களைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் ஓவியத்துறையில் தம்மை ஈடுபடுத்தியிருந்தமைக்குப் பல சான்றாதாரங்கள் உள்ளன. தேவாலயங்களை மையமாகத் கொண்டு கலை வளர்ந்த காலப்பகுதியில் கன்னியாஸ்திரிகள் மட்டுமின்றி தனிப்பட்ட பெண்களும் ஆண் ஓவியர்களுக்கு ஈடாக ஓவியங்கள் படைத்திருக்கின்றார்கள் என்பது பெண்களுக்கு பெருமைதரும் விடயமே. இவ்வாறாக பெண்கள் தம்மை ஓவியத்துறையில் வளர்த்து வந்திருந்தாலும் அவர்களுக்கு ஓர் பெரும் முட்டுக்கட்டை பிற்பட்ட காலங்களில் ஏற்படுகின்றது. ஆதாவது ஓவியக் கல்லூரிகளில் பெண்கள் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படுவதுடன் ஆண்களின் நிர்வாணத் தோற்றத்தை வரைவதிலும் தடைவிதிக்கப்படுகின்றது. இச்சூழலில் பெண்கள் தம்மை இத்துறையில் ஆண்களிற்கு ஈடாக வளர்த்துக் கொள்வதென்பது சாத்தியமற்றதாகவே போகின்றது.
நவீன காலங்களில் பெண்களிற்கு ஓவியத்துறையில் முற்றுமுழுதாக கற்றுத்தேற வாய்ப்புக்கள் அமைந்திருந்தாலும் முன்னர் குறிப்பிட்டது போன்று திருமணத்தால் ஏற்படும் சுமூக நிலவரங்கள்,பெண்களுக்கேயான உடற்கூற்றுக் காரணங்கள் மற்றும் தாய்மை போன்ற காரணிகள் பெண்களை முழமையாக கலைத்துறையில் ஈடுபடுத்திக் கொள்ள முடியாமல் போகின்றது.
டுத்ததாக பெண்கள் எவ்வாறு எல்லாம் ஓவியத்தில் சித்தரிக்பகபட்டுள்ளாள் என்பது பற்றி நோக்குவொமாயியன் மேலைத்தேயத்திலும் சரி, கீழதேயத்திலும் சரி பெண் அழகுபொம்மையாகவே ஆரம்ப காலங்களில் ஓவியர்ங்களில் சித்தரிக்கப்பட்டு வந்துள்ளாள் ஓவியம் என்பது சகூக நிகழ்வுகளை சித்தரிப்பதற்கு முன்னதாக தெய்வ உருவங்களை வரைவதாகவே இருந்ததனால்தெய்வப் பெண்கள் அதி அற்புத சொருபிகளாக கற்கனையில் தோற்றுவிக்கப்பட்டிருந்ததை நாம் 15ம் நூற்றாண்டில் மேற்குலகில் வரையப்பட்ட மாதா ஓவியங்களிலும் 19ம் நூற்றாண்டு இந்திய ஓவியர் இரவிவர்மாவின் சரஸ்வதி ஓவியங்களிலும் காணலாம்.
இந்திய மொகலாய இராஜஸ்தானி ஓவியங்களும் கூட சாதாரண பெண்களின் சித்தரிப்புகளாக இல்லாமல் தெய்வீகப் பெண்களும் அரச குடும்ப பெண்களுமாகவே _ஓவியங்களில் இடம்பெற்றிருக்கின்றனர். இவ்வாறு அழகான பெண்களின் சித்தரிப்புக்கள் பெரும்பாலும் ஆண் ஓவியர்ககளிகளின் படைப்புகளாகவே இருந்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஆனால் காலப் போக்கில் ஓவியத்தின் விடயங்கள் மாறிச் சென்றிருப்பதுடன் பெண் ஓவியர்களின் பார்வையில் பெண்கள் வித்தியாசமான முறையில் சித்தரிக்கப்பட்டிருப்பதையும் காணலாம். அவ்வாறான சில ஓவியங்கள் இக்கட்டுரையில் எடுத்தாயவுள்ளேன்.
தாயும் சேயும் என்ற தலைப்பு,மாதாவும் குழந்தையேசுவும் என்ற மிகப்பழையகால ஓவியங்களிலிருந்தே பிரபல்யமானது. 18ம் நூற்றாண்டின் ஓவியர்கள் உணர்வுபூர்வமான குடும்பச் சூழல்களைச் சித்தரிப்பதை தமது ஓவியங்களின் தலைப்புகளாக எடுத்துக் கொண்டதுடன் தாயும் சேயும் தலைப்பிலான ஓவியங்கள் அதிகளிவல் வரத் தொங்குகின்றது. இதற்கு 18ம் நூற்றாண்டின் பெண் ஓவியர்களான ஆயசபரநசவைந புநசயசன இனதும் ஊழளெவயnஉந ஆயலநச இனதும் இரு ஓவியங்களை எடுத்துக்காட்டுகளாக காட்டலாம். இவ் ஓவியங்களில் தாய்மையும் தாயானவள் குழந்தையில் லயித்திருப்பதும் அழகாக சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது.
அடுத்து நியோர்க்கில் வாழ்ந்த 20ம் நூற்றாண்டு ஓவியையான யுடiஉந நேநட நாளாந்த வாழ்வைச் சித்தரிக்கும் ஓவியங்களிலிருந்து மேலும் ஒருபடி முன்னேறி கர்ப்பிண பெண்ணைத் தன் படைப்பில் கொண்டு வந்திருக்கின்றார். இவ்வாறான ஓவியங்களைப் பார்ப்பதும் ஏற்றுக் கொள்வதும் சற்றுக் கடினமாக இருக்கும் சூழலில் குறிப்பாக பெண் ஓவியரால் படைக்கப்பட்ட ஓவியம் என்னும் போது பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சி தருவதாகவே இருந்திருக்கின்றது. ஆழகான பெண்ணின் நிர்வாணத் தோற்றத்திற்குப் பழக்கப்பட்ட ஓவிய இரசிகர்களுக்கு நிர்வாண கர்ப்பிண பெண்ணை ஓவியத்தில் பார்ப்பது வித்தியாசமான அனுபவமாகவே இருந்திருக்கும்.
அமெரிக்காவில் வாழும் ஓவியையான முவைஉi ளுஅiவா நாளாந்த வாழ்வில் மனிதர் படும் அவஸ்தைகளையும் அனுபவங்களையும் தனது படைப்புகிளில் கொண்டு வந்திருக்கின்றார். பேரும்பாலும் இவரின் படைப்புகள் மனித உடம்பின் உபாதைகளாகவே இருக்கின்றன. அத்துடன் நவீன காலத்தில் ஓவியத்தின் வடிவம் முப்பரிமாணத்தோற்றமாக மாறிவந்திருப்பதால் விடயத்தில் வபரிப்புக்கள் அதிகளவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது. புலவகையான ஊடகங்களையும் கொண்டு விடயங்கள் சித்தரிக்கப்படுவதும் படைப்பின் விபரணத்திற்கு உதவுவதாககின்றது. இந்த வகையில் முமைi ளுஅiவான் பெண்ணின் மாதவிடாயைச் சித்தரிக்கும் படைப்பு மிகவும் வித்தியாசப்பட்டதாக அமைகின்றது. மேழகாலான பெண்ணின் நிர்வாணத் தோற்றமும் சிவப்பு மணிகளாலான குரதி ஓட்டமும் இவ் முப்பரிமாண படைப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னும் பல சகலாச்சாரங்களில் பேசப்படாத கூச்சப்பட வைக்கும் விடயம் பெண் படைப்:பாளியால் கொண்டு வரப்பட்டிருப்பது வியக்கத்தக்கதே.
இந்த மாதியான வெளிப்படையான படைப்புக்கள் அண்மைக்காலங்களில் கீழைத்தேய பெண் ஓவியர்களும் எடுத்தாண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
நவீன காலத்தில் பெண்களுக்கும் விரும்பிய கற்கைநெறியை பயில வாய்ப்புக்கள் ஏற்பட்டிருப்பதால் ஓவியத்துறையிலும் அவர்கள் சிறப்பாக வளர்ந்துகொள்ள வாய்ப்புக்கள் ஏற்பட்டிருந்தாலும் கூட அவர்களின் சமகாலத்தவரான ஆண் ஓவியர்களுடன் சமமான அளவு பிரபல்யம் பெறும் வாய்ப்பு பெண் ஓவியர்களுக்கு குறைந்தளவிலேயே கடைக்கின்றதெனலாம் மேலும் மேலைத்தேய பெண் ஓவியர்கள் உலகளாவிய ரீதியில் அறியப்படுமளவு கீழைத்தேய குறிப்பாக இந்திய, சீனா, ஜப்பான் இலங்கை உட்பட்ட நாடுகளைச் சேர்ந்த பெண் ஓவியர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகளும் கடைப்பது அரிதாகவேயுள்ளது என்ற குறிப்பை நுனiவா முசரடட தனது ஓவியத்தில் பெண்கள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஏனவே பெண்கள் ஓவியத்துறையில் ஈடுபடுவதுடன் மட்டுமன்றி பெண் ஓவியர்கள் பற்றிய குறிப்புகளும் அவர்களின் படைப்புக்கள் பற்றிய ஆய்வுகளும் விமர்சனங்களும் கூட இடம் பெற வேண்டும் என்பதை இக்கட்டுரையின் மூலம் வலியுறுத்த விரும்புகின்றேன்.
Sept 2006