விருது வென்ற குறுந்திரைப்படம்மலையகமென்றாலே அழகு ஆனால் அந்த அழகுக்குப் பின்னால் எங்களை ஆழமாக சிந்திக்க வைக்கும் நிறையக் கதைகள் உள்ளன. அதனடிப்படையில் சென்கிளையார் தோட்டம், தலவாக்கலை, நுவரேலியா மாவட்டத்தில் லயத்தில் வாழ்ந்து பல இடர்கள் மத்தியில் படித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீட ஊடக கற்கைகள் துறையின் மாணவராக உயர்ந்து இன்று அதே துறையில் உதவி விரிவுரையாளராக பதவிப் பிரமாணம் பெற்றுதன் ஊருக்குப் பெருமை சேர்த்துள்ளார் திரு செல்வகுமார் ரினோஷன். அடிக்கடி அவருடைய குறுந்திரைப்பட உருவாக்கங்கள் தொடர்பாக என்னோடு கலந்துரையாடுவார். அப்படி கலந்துரையாடும்போது அவர் “தாங்கள்” அனுபவிக்கும் ஒரு பகுதி வாழ்க்கையை குறும்படமாக உருவாக்குவதற்குரிய கதையை ஆயத்தப்படுத்தியுள்ளதாக கூறினார்.அந்த கதைதான் “ஆசனம்” என்ற குறுந்திரைப்படமாக இன்று உருவாகியுள்ளது. நானும் என் படக்குழுவினர்களும் இரண்டு நாட்கள் அவருடைய ஊரில் நின்று படப்பிடிப்பை மேற்க்கொண்டோம்.அங்கு பல்வேறுபட்ட கஸ்ரங்கள் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்தோம். ஆனால் அங்கு வாழும் மக்களின் நிலையைப் பார்க்கும்போது அந்த கஸ்ரங்களெல்லாம் பெரிய விடயமாகவே தெரியவில்லை.
இப்படைப்பிற்கு தயாரிப்பாளராக நான் இருப்பதை எண்ணி பெருமை கொள்கின்றேன்.அத்தோடு என்னோடு இணைந்து இப்படத்தை தயாரிக்க முன்வந்த பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் நடிகையும், தயாரிப்பாளருமாகிய திருமதி மரியனிற் அம்மா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.இப்படமானது கடந்த 09/12/2024 கொழும்பில் நடைபெற்ற அஜந்தா14 என்ற தேசிய ரீதியில் நடைபெற்ற குறுந்திரைப்பட விழாவில் “Most Gender Sensitive Film” என்ற விருதினைப் பெற்றுள்ளது. அத்தோடு கடந்த 09 செப்டம்பர் 2024 நடைபெற்ற யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவில் “Audience Choice” விருதினையும் வென்றுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பொன்விழாக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக நடைபெற்ற குறுந்திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்மேலும் இப்படத்தில் பணியாற்றிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.