ஒ ரு பக்கம் கறுப்பர்கள் செய்யும் வேலையைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன் என்று முன்னாள் அதிபர் டிரம்பிற்கு பதிலடி கொடுக்கும் சிமோன் பைல்ஸ் போல வெற்றிக்கொடி கட்டும் பெண்கள். இன்னொரு பக்கம் தீவிரவாதிகளும் ஆணாதிக்கவாதிகளும் பெண்கல்வி மறுக்கும் நாட்டில் இருந்து வந்து தங்கள் நிலையை குரல் எழுப்பிச் சொல்லும் கிமியா யுசோஃபி போன்ற வீராங்கனைங்கள் என பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பெண்களால் ஒளிவீசிக்கொண்டிருக்கிறது!
கிமியா யுசோஃபி, ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து 100மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிச் சுற்றில் ஓடியவர். தன் முதுகில், கல்வி, விளையாட்டு இரண்டும் எங்கள் உரிமை என்ற வாசகத்தை சுமந்து ஓடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தங்க மெடலை வெல்ல முடியாவிடினும் தன் நாட்டுப் பெண்களின் கல்விக்காகக் குரல் கொடுத்த அவர் நோக்கம் நிறைவேறியது!