2024 நவம்பர் 25 ஆம் திகதியன்று திங்கட்கிழமை பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினமாக அமைவதுடன் 16 நாள் செயற்பாட்டின் முதல் நாளாகவும் அமைகின்றது. 1960 நவம்பர் 25 ஆம் திகதியன்று தென் அமெரிக்காவின் டொமினிக்கன் குடியரசில் மிராபல் சகோதரிகள், மூன்று அரசியல் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கொல்லப்பட்டர். மிராபல் சகோதரிகள் பெண்ணிய எதிர்ப்பின் அடையாளங்களாக மாறினர், மேலும் அவர்களின் மரணத்தின் நினைவாக நவம்பர் 25 அன்று பெண்களுக்கு எதிரான வன்முறை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினமாக 1980 இல் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த சர்வதேச தினமானது 1999 இல் ஐக்கிய நாடுகள் சபையால் முறையான விதத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கு குரல் எழுப்புவதற்காக இந்த 16 நாட்கள் செயற்பாடு உருவாக்கப்பட்டது. பெண்கள் அமைப்புகள் மற்றும் பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகிய நாங்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.
இலங்கையில் பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகளின் அதிகரிப்பு
பொருளாதார நெருக்கடி தொடரும் இன்றைய சூழலில், பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையிலான காலப்பகுதியில் பதிவாகிய சம்பவங்கள் பற்றிய எமது பகுப்பாய்வில், கொடூரமான படுகொலைகள், பாலியல் பலாத்காரம், சிறுவர் பாலியல் பலாத்காரம், கடத்தல்கள் மற்றும் பிற வன்முறைகள் தொடர்பாக 21 சம்பவங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன. இலங்கையில் பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறைக்கு பதிலளிக்கும் தேவைநாடும் மகளீர் அமைப்பு ( WIN) குறிப்பிட்டதன் பிரகாரம், 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையிலான காலப்பகுதியில் 727 பொருளாதார துஷ்பிரயோக சம்பவங்களுக்கும்;, 1,131 உணர்வு ரீதியான மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோக சம்பவங்களுக்கும் அவர்கள் பதிலளித்துள்ளனர்.
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையமானது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையிலான காலப்பகுதியில் 84 புதிய சம்பவங்களுக்கு பதிலளித்துள்ளது. இவற்றுள் பெரும்பாலான சம்பவங்கள் (80%) கடுமையான மற்றும் தொடர்ச்சியான வீட்டு வன்முறையுடன் தொடர்புபட்டவையாக அமைந்திருந்தன. நிகழ்நிலை பாலியல் வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளும் எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. (2022-2024) இடையேயான காலப்பகுதியில் கிடைக்கப்பெற்ற இரகசியமான முறைப்பாடுகளுக்கு இணங்க, குறைந்தபட்சம் 10 LGBTQIA+ நபர்கள் வழக்கமான காவல்துறையின் வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர், எனினும், இத்தகைய அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையில் அவர்கள் காணப்படுவதன் காரணமாக அவர்கள் அதைப் பற்றி பேசவோ நடவடிக்கை எடுக்கவோ பயப்படுகின்ற நிலை காணப்படுகின்றது. வன்முறையை எதிர்கொண்ட டுபுடீவுஞஐயூ நபர்களுக்கு உதவ முயற்சிக்கும் நிறுவனங்கள் அந்த நபர்களின் குடும்பத்தினர்களால் மற்றும் காவல்துறையினரால் தொந்தரவுக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.
பசி மற்றும் பட்டினியுடன் தொடர்புடைய கட்டமைக்கப்பட்ட பால்நிலை சார்ந்த வன்முறை
இந்த நேரடியான வன்முறையைத் தவிர, பெண்கள் மற்றும் சிறுமிகள் பொருளாதார நெருக்கடி காரணமாகவும், ஐஆகு இன் கடுமையான சிக்கன நடவடிக்கைகளின் திணிப்பின் காரணமாகவும் பசி, பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற கட்டமைப்பு ரீதியான வன்முறைகளின் சுமையை சுமக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். குடும்பங்கள் கடன் நிமித்தம் போராட்டமான நிலைமைக்கு முகங்கொடுக்கின்றன. வறுமை விகிதமானது 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையிலான காலப்பகுதியில் 13.1 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக இரட்டிப்பாகியுள்ளது. ஊட்டச்சத்து நிறைந்த உணவின் சராசரி விலை 156மூ இனால் அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சின் அண்மைக்கால புள்ளிவிவரங்களின்படி, பெண்களின் ஆரோக்கியம் மற்றும் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியம் மிகவும் மோசமடைந்துள்ளது. குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு உட்பட்டு மரணமடைகின்றன. இலங்கையில் பிறப்பு விகிதங்களில் குறைவும், இறப்பு விகிதங்களில் அதிகரிப்பும் ஏற்பட்டிருப்பதையும் காணமுடிகின்றது (இறப்பு விகிதம் மக்கள்தொகையின் பொதுவான சுகாதார நிலையைக் குறிக்கும் சிறந்ததொரு குறிகாட்டியாகக் கருதப்படுகிறது). உண்மையில், கொவிட் 19 உச்ச நிலையில் காணப்பட்ட 2021-2022 ஆண்டுகளைப் பார்க்கிலும் 2023 ஆம் ஆண்டில் இறப்பு விகிதம் அதிகமாகக் காணப்படுகின்றது.
சட்டத்தின் தாமதமான மற்றும் போதியதல்லாத பதிலளிப்புக்கள்
பெண்கள் மற்றும் LGBTQIA+ நபர்கள் பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறை தொடர்பான முறைப்பாடுகளை காவல்துறையினரிடம் மேற்கொள்வதில் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொள்கின்றனர். பெரும்பாலும் முறைப்பாடுகள் எழுதப்படுவதில்லை என்பதுடன் துஷ்பிரயோகத்தில் பாதிக்கப்பட்டவரும் சமரசம் செய்துகொள்ளும்படி அவர்களுக்குக் கூறப்படுகின்றது. தாபரிப்பு கொடுப்பனவு தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் காணப்படுகின்ற நிலையிலும், தாபரிப்புத்; தொகை வழங்கப்படாமல், நிலுவைத் தொகை வழங்கப்படாமல், பல சமயங்களில் ஆண்கள் எந்தவித பின்விளைவுகளுமின்றி நீதிமன்றத்திற்கு சமுகமளிக்கத் தவறுகின்றனர். குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றது@ அவ்வாறு அதனைப் பயன்படுத்தினாலும் அளவுக்கதிகமான காலதாமதங்கள் ஏற்படுகின்றன.
புதிய அரசுக்கான எமது கோரிக்கைகள்
மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் மன்றங்கள் (SGBV Forums) நிறுவுதல் மாத்திரம் போதுமானதல்ல. வன்முறையிலிருந்து தப்பிப் பிழைத்தவரை மையமாக வைத்து, உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்புக்களினூடாக அர்த்தமுள்ள சேவைகளை வழங்கும் வகையில் போதியளவு வளங்கள் அடுத்த பாதீட்டில் (Budget ) உள்ளடக்கப்படல் வேண்டும்.
இதன் பொருள் என்ன?
• 19 ஆண்டுகளை அண்மித்தும் இலங்கையில் அரிதாகவே பயன்படுத்தப்படும் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் (Pனுஏயு) ஐப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திஇ உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்பு சார்ந்த விடயங்களில் சேவை வழங்குநர்கள் பயிற்றுவிக்கப்படல் வேண்டும்.
• பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு பதிலளிக்கும் சேவைகளுக்கான பாதீடுகளை அதிகரித்தல் வேண்டும்.
• பயிற்சிகள்இ வழிகாட்டுதல்கள் மற்றும் பாதுகாப்பாக முறைப்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய பொறிமுறைகளை உருவாக்குவதனூடாக டுபுடீவுஞஐயூ சமூகம் போன்ற குழுக்களுக்கு சேவைகளை கூருணர்வுடன் வழங்குதல் வேண்டும்.
• பெண்களுக்கு ஆதரவான மற்றும் அவர்கள் இலகுவில் அணுகக்கூடியதான தப்பிப் பிழைத்தவர்களை மையமாகக் கொண்ட காப்பகங்கள் மேலும் அதிகரிக்கப்படுதல் வேண்டும்.
இதன் பொருள் யாதெனில்
கட்டமைப்பு ரீதியான வன்முறைகள் தீர்க்கப்படுவது குறித்து கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
• அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஊட்டச்சத்து நிலை அவசர முன்னுரிமையாக கருத்திற்கொள்ளப்படுதல் வேண்டும். பாடசாலைகளில் அனைத்து மாணவர்களுக்கும் சத்துணவுத் திட்டம் ஏற்படுத்தப்;படுதலானது அவசர முன்னெடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.
• பாடசாலைகளில் சுகாதார அணையாடைகள் (சுகாதார நப்கின்கள்) இலவசமாக கிடைக்கச் செய்தல். அத்துடன் சுகாதார அணையாடைகள் மீதான வரியை நீக்குதல் ஆகிய செயற்பாடுகள் மூலம் மாதவிடாய் தொடர்பான வறுமை தீர்க்கப்படும்படி கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். பாடசாலைகளில் பாதுகாப்பான தண்ணீர் மற்றும் கழிவறைகளுக்கான அணுகும் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதல்.
• பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப் பிழைத்தவர்கள் அனைவரும் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்குள் உள்வாங்கப்படுதல் வேண்டும்.
• பெண்கள் மற்றும் LGBTQIA+ நபர்களின் உரிமைகளை மீறுகிற சமத்துவதுவமின்மையைக் கொண்ட பாரபட்சமான ஏற்பாடுகளை கொண்ட குடும்ப சட்டங்களான முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் ( (MMDA), திருமண பதிவுச் சட்டம் (MRO) ஆகியவற்றை சீர்திருத்துவதுடன் தண்டனை சட்டக்கோவை சட்டத்தின் பிரிவுகள் 365, 365 ஆகியவற்றை ரத்து செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
இறுதியாக,
பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட, வன்முறையின்றி வாழ்வதற்கான உரிமையை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் புதியதொரு அரசியலமைப்பு எமக்கு வேண்டும்.
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்,
இல. 4ஃ1, தோமஸ் லேன், மட்டக்களப்பு
தொடர்புகளுக்கு – 0652223297, 0652224657
மின்னஞ்சல்- suriyawomen1991@gmail.com
25.11.2024