மலையக மாணவர் ஒன்றியத்தின் மலையகா புத்தகம் அறிமுக விழா மலையக மாணவர் ஒன்றியம் – யாழ் பல்கலைக்கழகம்

மலையக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கடந்த 15. 10. 2024 ஆம் திகதி மலையகா புத்தகம் அறிமுக விழா இடம்பெற்றது.மலையக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் M.மோகன்குமார் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் துறையின் விரிவுரையாளர் அனுதர்ஷி கபிலன் மற்றும் ஊடறு வெளியீடு சார்பாக தர்ஷிகா பங்குபற்றி இருந்தனர். “மலையகா புத்தகமானது மலையக பெண் படைப்பாளிகளினால் எழுதப்பட்ட சிறுகதை தொகுப்பாகும்.

இது மலையக மக்களின் வாழ்வியலை கூறுவதாக அமைந்துள்ளது.” இப்புத்தகத்தை மலையக மாணவர் ஒன்றியம் சார்பில் அறிமுகப்படுத்தி வைத்ததில் பெருமை கொள்கிறோம். ஒரு தொகை புத்தகமானது யாழ் பல்கலைக்கழக மலையக மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது. மேலும் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி, ஊடகக் கற்கைகள்துறைத் தலைவர் மற்றும் யாழ் பல்கலைக்கழக நூலகத்திற்கும் ஒவ்வொரு பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன. மலையகா புத்தக அறிமுக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் மலையகா புத்தகத்தை எமக்கு இலவசமாக வழங்கிய ஊடறு வெளியீட்டின் ரஞ்சி அவர்களுக்கும் ஊடறு சார்பில் கலந்து கொண்ட தர்ஷிகா அவர்களுக்கும் ஊடறு வெளியீட்டுடன் தொடர்பினை ஏற்படுத்தி மலையகா புத்தகத்தை பெற்றுக் கொடுக்க உதவிய ரினோசன், தர்ஷினி மற்றும் விரிவுரையாளர் அனுதர்ஷி கபிலன் அவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். மலையக மாணவர் ஒன்றியம் – யாழ் பல்கலைக்கழகம்#upcountrystudentsunion#UOJ#upcountry#upcountrystrong#malaga#மலையகா#womanswriters



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *