“மலைப் பூமியை செதுக்கி பசுமைத் தேயிலைத் தோட்டத்தையும் இலங்கையின்பொருளாதாரத் தொட்டி லையும் தமது கடின உழைப்பால் உருவாக்கிய மலையக மக்களின் வரலாறு 200 ஆண்டுகளைத் தாண்டிவிட்டது. நாட்டுக்குள் நாடு போல உருவான அந்த பசுமை சாம்ராச்சிய மண்ணின் மைந்தர்கள் தலைமுறை தலைமுறையாக ஏழ்மையோடு போராடும்மனிதர்களாக விடப்பட்டவர்கள். அந்தத் தடைகளினூடு அவர்களின் பண்பாடும் கலை இலக்கியமும் கல்விசார் நடவடிக்கைகளும் வாழ்வோடு போராடி எழும் தீவிரத்துடன் எழுந்தவை. எழுந்து கொண்டிருப்பவை. இந்த சவால் நிறைந்த வாழ்வு அவர்களுக்கு கற்றுத் தந்த கடின உழைப்பும் விடாமுயற்சியும் நம்பிக்கையும், அவர்களை யார் தடுத்தாலும், யார் பின்போட வைத்தாலும் மேல் நிலைக்கு கொண்டுவரும் ஊக்க சக்தியாக மாற வேண்டும். இந்த நெடிய பயணத்தில் அவர்கள் கடந்து வந்த வாழ்வைப் பேசும் கதைகள் இவை. மலையகப் பெண்களால்எழுதப்பட்ட கதைகள். அவை தேயிலை மலைப் பெண் ‘மலையகா’ இன் கதைகள்! ‘மலையகப் பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள் 2024- 303 பக்கங்களில் பெருந் தொகுப்பாக உருவாகியிருக்கும்இது ‘ஊடறு’ வெளியீடு. நன்றி றஞ்சி.
தேயிலை மலைப் பெண் ‘மலையகா’ இன் கதைகள்! சக்தி அருளானந்தம் சக்தி
