மலையக மக்கள் என்றவுடன் மத்திய மலைநாட்டில் தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கே எமது கவனத்திற்கு வருகிறார்கள். ஆயினும் தேயிலை தோட்டங்கள் தவிர்ந்து இரப்பர் மற்றும் கோப்பி தோட்டங்களில் இன்னமும் அடிப்படை வசதிகளற்று வாழும் மக்களின் அவல நிலைமை பலரின் கவனத்திற்கு உட்படுவதில்லை. இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கழிந்த பின்னும் கேட்பாரற்று வாழும் ஓர் தோட்ட மக்களை கடந்த காலத்தில் எமக்கு சந்திக்க நேர்ந்தது.அவர்களுடனான எங்கள் பயணத்தில் Shafnaz Haleel சகோதரியும் இணைந்துகொண்டுள்ளார். அவரது பல்கலைக்கழக ஆராய்ச்சிக்காக இந்த சமூக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அவரது முயற்சிக்கு கரம் கொடுக்க மொன்லார் நிறுவனமும் தயாராக உள்ளது.இம்மக்களுடனான சுற்றுச்சூழல் விவசாயம் சார்ந்த எமது பயணத்தில் எங்களுடன் நீங்களும் தொடர்ந்து இணைந்திருங்கள்.

இவ் அபூர்வ புகைப்படம் 1895ம் ஆண்டு தலவாக்கலை ‘சென்ங் கூம்ஸ்’ தோட்டத்தில் பிடிக்கப்பட்டதாக தெரிகிறது. கடல் கடந்து, இருக்கும் எண் ஜான் வயிற்றுக்காக பிழைக்க வந்தவனின் இன்னொரு நாமம்தான் “கூலி” , வந்தவர்க்கு தங்க போதிய இடமில்லை, வயிறார உண்ண உண வில்லை, ஒழுங்காக உடுத்த உடையில்லை. இதில் ,ஆட்டுவிப்பர்களை பார்த்தால் குற்றம், கேட்டால் குற்றம் என அவர் வாழ்ந்த நிலையை கேட் கும்போதும்,படிக்கும் போதும் என்ன மனதில் நம்மில் எழுகின்றன…..? அப்படியா…?அல்லது வாயில் சொல்லுவதோடு சரி.., ஆரம்பத்தில் மட்டுமல்ல சில தோட்டங்களில் தொழிாளர்களை “கூலி” என்றே குறிப்பிடுகிறார்கள். தோட்டக்காட்டான்,அரைப்பேரு, கள்ளத்தோனி,கடைசியில்,நாடற்றவர், என இலங்கையிலும்., அகதி என இந்தியாவிலும் அழைக்கப்பட்டு கொண்டிருப்பவர் நம்மவரே…. அதிகாரமும்,ஆளுமையும் கூட எம்மத்தியில் உண்டு ,இவர்கள் எம்மக்களை மதிக்க வேண்டும்.
சு.இராஜசேகரனின் Old is Gold