46 ஆண்டுகளின் சென்னை புத்தகக் காட்சி வரலாற்றில் முதல் முறையாக “queer” சமூகத்தினர் ஓர் புத்தக அரங்கை அமைத்துள்ளனர்! இதுவரை பிச்சை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்ததாக சொல்லப்பட்ட ஒர் சமூகம், அவர்களது வாழ்வியலை, கதைகளை,இச்சமூகம் அவர்களுக்கு எதிராக நிகழ்த்திய குற்றங்களை அவர்களே எழுத!உங்களிடம் உரைக்க!!உங்களிடம் சேர்க்க!!!களத்திற்கு வந்துவிட்டார்கள்! “தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலில் தோன்றாமை நன்று”என்ற வள்ளுவனின் குரல் படி, ஏதோ ஓர் அரங்கை அமைத்து விட வேண்டும் என்றில்லாமல் தேனீக்களைப் போன்று queer சமூகத்தவர்களின் படைப்புகளையும் அவர்களை பற்றிய புத்தகங்களையும் சேகரித்து ஓர் இடத்தில் நமக்காக காட்சிப்படுத்தியுள்ளனர்!

புத்தகக் காட்சிக்கு செல்லும் நம்மவர்கள் கட்டாயம் இந்த அரங்கத்திற்கும் செல்லுங்கள் இவர்கள் பிச்சை கேட்டபோது முகம் சுளித்தோம் அல்லவா இப்போது அவர்கள் எழுத்துக்களின் ஊடே நம்மிடம் உரையாட விரும்புகிறார்கள். புத்தகம் வாங்கவில்லை என்றாலும் சரி அரங்கத்திற்கு சென்று அவர்களுக்கு ஒரு hai! சொல்லிவிட்டாவது வாருங்கள். அரங்கத்தை பற்றியும் அமைப்பைப் பற்றியும் அவர்களைப் பற்றியும் எந்த குறை இருந்தாலும் நேரடியாக அவர்களிடமே உரையாடுங்கள் அவர்கள்,எப்போதும் உரையாடுவதற்கு தயாராகவே இருக்கிறார்கள். இவர்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதும் நம் சமூக கடமை!