கொராணா காலத்தில் நிகழ்ந்த புலம் பெயர்வை மையமாக்கி எழுதியுள்ளார்.காதல், காமம், பாசம், கௌரவம், பயணம், பாடுகள், நோய், மரணம், ஆசை, வஞ்சகம் என்று பயணித்து நம்பிக்கையில் நங்கூரமிட்டு அறம் பேசும் ஒரு குடும்பத்தின் வாழ்வு நாவலாகி இருக்கிறது. முதல் வாக்கியமான ‘9 மணி 9 நிமிடங்கள்’ என்பதிலேயே இந்தியப் பேரரசின் அரசியலுக்கு ஸ்பாட்லைட் போட்டு விடுகிறார் ஆசிரியர்.130 பக்கங்கள்தான் நாவலின் கதை. மாந்தர்கள், நிலவியல் பின்னணி, நிகழ்வுகள், உரையாடல், கதை நகர்த்தும் பாங்கு, முடிவு எல்லாமே கச்சிதம்.எந்த தொங்கு சதையும் இல்லாத வடிவு கொண்ட சுவாரசியமான புனைவு.ஆனால் புனைவு என்பதை மறந்து வாசகர் சிரிக்கவும் அழவும் நெகிழவும் உருகவுமான உணர்வுகளின் எதார்த்த சித்தரிப்பு.வேறென்ன வேண்டும் ஒரு நல்ல பிரதிக்கு?விரிவான விமர்சனத்தை பின்னொரு நாளில் எழுதுகிறேன்.கிடைக்குமிடம்:அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம். ஸ்டால் எண் 553
சிறகொடிந்த வலசை – Ezhil Arasu.
