
கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ் பின்னணி கொண்ட மைத்ரேயி ராமகிருஷ்ணனை பிரபல “ரைம்ஸ்” சஞ்சிகை அதன் அடுத்த நூறு (TIME100 Next) பிரபலங்களில் ஒருவராக மதிப்பிட்டிருக்கிறது.
அரசியல், சுகாதாரம், பொழுதுபோக்கு, கலை, வர்த்தகம் போன்ற துறைகளில் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகின்ற முக்கிய நபர்களது பட்டியலிலேயே மைத்ரேயியின் பெயரும் இடம்பிடித் துள்ளது.
ரிக்ரொக், இன்ஸ்ரகிராம் போன்ற சமூகவலைத்தள வீடியோக்கள் ஊடாக உலகெங்கும் பதின்ம வயதினரிடையே புகழ் பெற்றிருந்த இளம் நடிகை மைத்திரேயி ராமகிருஷ்ணன் அண்மைக்காலமாகத் தொலைக்காட்சித் தொடர்கள் வாயிலாக அமெரிக்காவில் நன்கு அறியப்பட்டு வருகிறார்.