– சூர்ப்பனகை (மலையகம்,) இலங்கை
வன் செயல்களின் போதும் பேரினவாத ஆக்கிரமிப்பின் போதும் குழந்தைகளை வீட்டுக்குள் போட்டு அடைத்துவிட்டு வாசலில் கோடரியோடு நின்ற பெண்களும் மலையகத்தில் தான் இருக்கிறார்களமலையக பெருந்தோட்டத்துறையில் பெண் தலைமைத்துவம் பற்றி சிந்திக்கும் போது இதை நம்ப முடியாததாகவே நமக்கு தோன்றும் |
இன்றைக்கு 200 வருடங்களுக்கு முன் பிரித்தானிய காலனித்துவ பொருளாதார நலன்களுக்காக இந்தியாவின் தென்மாநிலங்களில் இருந்து கூலிகளாக இடம் பெயர்க்கப்படட மக்களில் 1965களில் சிறிமா சாஸ்திர ஒப்பந்தத்தின் பிரகாரம் சுமார் 5லட்சம் மக்கள் இந்தியாவுக்கு மீளவும் திருப்பி அனுப்பபட்டனர் உறவுகளை உடன்பிறப்புகளை பிறந்த மண்ணை விட்டு ஒப்பாரிகளின பிரிவுத் துயரங்களின் மத்தியில் பிரிந்த இவர்கள் கண்ணீர் கதைகளை மலையகப் பிரதேச ரயில் நிலையங்களுக்கு வாயிருந்தால் சொல்லித் துயருறும் இவ்வாறு மீளவும் இடம் பெயர்க்கப்பட்ட இழப்பதற்கு ஏதும் இல்லா மக்கள் கூட்டத்தினர் எஞ்சியோரும் உட்பட பரம்பரைகள் என்று 15 லட்சம் பேர்களாக இலங்கை மலையகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கையின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக விளங்கும் தேயிலை இறப்பரின் உற்பத்திக்கு தம் வாழ் நாள் உழைப்பை ஈந்துவரும் இம்மக்களில் பெண்களின் எண்ணிக்கையும் உழைப்பும் கணிசமானது ஒப்பீட்டளவில் ஆண்களை விட பெண்கள் இங்கு அதிகமான உழைப்பாளராக உள்ளனர். பரம்பரை பரம்பரையாக தேயிலைக் கொழுந்து அறுவடைக்கென பெண்களே தொழில் புரிந்து வருகின்றனர். 5 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யப்படும் தேயிலை இலைகளை பறிப்பதற்கு பெருந்தொகை உழைப்பாளிகள் தேவைப்பட்டமை இதற்கான காரணம் எனலாம். ஆரம்பத்தில் மலிவான கூலி, என்றே பெண்கள் இத்தொழிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தோட்டங்கள் என அறியப்படும் ஒவ்வொரு ஊரின் தேயிலை தோட்டங்களிலும் சராசரியாக 50 பெண் தொழிலாளர்கள் கொண்ட ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்படுவார். இவ்வாறு பல்வேறு கட்டங்களில் தொழிலாற்றும் தொழிலாளர் தொகுதிகளுக்கும் கங்காணி (கங்காணி எனும் தொழிற்பெயர்) கள் நியமிக்கப்படுவார்கள் இவர்களே பெருந்தோட்டத்துறையின் ஆரம்பநிலை மேற்பார்வையாளர்கள் தோட்டத் தொழிற் சங்கங்கள் கோயில் பரிபாலன சபை, பொதுபணி மன்றங்கள,; வாலிப கமிட்டிகள் என்பவற்றிற்கும் தலைவர்கள் நியமிக்கப்புடுவதும் உண்டு. இவை தவிர சுப்பர்வசைர்கள், கணக்குப்பிள்ளை தலைமை கணக்குப்பிள்ளை என்பவர்களும் தொழில் ரீதியில் நியமிக்கப்படுவதுண்டு. ஒவ்வொரு தேயிலை தோட்டத்திலும் ஒப்பீட்டளவில் பெண் தொழிலாளர்களே பெரும்பான்மையினராக காணப்படுகின்றனர். எனினும் எந்தக் கட்டத்திலும் பெண்கள் தலைமைத்துவம் ஏற்பதைக் காணமுடியாது. பெண் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் தொழிற் பிரச்சினைகளோடு பெண்களுக்கே உரிய சில விசேட பிரச்சினைகள் பற்றி ஆண் மேற்பார்வையாளர்களோடு விருப்பமின்றி பகிர்ந்துகொள்ளும் நிர்ப்பந்ததத்திற்குள்ளாகின்றனர். பெண்கள் தொழில் செய்யும் மலைகளில் வேலைவாங்கும் கங்காணிகளும் ளரிநசஎளைளநச களும் பெண்களை ஆண்களைப்போல் நடத்தும் போக்கு பெரும்பாலான தோட்டங்களில் நாம் அன்றாடம் காணும் காட்சி.
பெண் தொழிலாளர்கள் தலைமைத்துவ பொறுப்பை ஏற்க முன்வராமை இவ்வாறான பிரச்சினைகளுக்கான காரணம் என சொல்லப்பட்டாலும் இப்பொறுப்பை அவர்களுக்கு வழங்க மேலாதிக்க இருக்கையில் சுகம் கண்ட எந்த ஆண்மயப்படுத்தப்பட்ட நிர்வாகமும் முன்வருவதில்லை என்பதே உண்மையான காரணமாகும். சொல்திறனும் பேச்சாற்றலும் வாதாடும் திறமையும் தொழில் தேர்ச்சியும் பெற்ற பெண்களை நிறையவே காண்கிறோம்.
அவர்களிடம் நாம் கேட்ட கேள்விகளுக்கு மொத்த பதிலாக எம்மிடம் தலைமைப் பதவியை கொடுத்தால் அதை நாம் செய்து காட்டுவோம் என்றே கூறுகின்றனர் ஒரு சில தோட்டங்களில் பெண் கண்காணிகள் இருப்பதாக கேள்விப்படுகின்றோம் ஒரு சில என்ஜீஓக்களின் பங்களிப்பு இதில் உள்ளது எனவும் அறிகிறோம.; இது எல்லா தோட்டங்களுக்கும் வியாபிக்கப்பட வேண்டும். பெண்கள் தமது பெறுமதியையும் தமது செயலாற்றலையும் வெளிப்படுத்தும் தைரியமும் பெருந்தோட்டத்து பெண்களுக்கு வரவேண்டும்.
மாதர்சங்கங்கள் ஒரு சில தொழிற்சங்கங்களில் இருக்கின்றன. எனினும் மாதர் சங்கத் தலைவர் தொழிற்சங்கத் கூட்டங்களில் பங்குபற்றும் ஆண் தலைவருக்கு மாலையிட்டு வரவேற்க மட்டுமே உள்ளனர். இத்தகைய பிற்போக்குத்தனங்களை மாதர் சங்கங்கள் களைய வேண்டும் .