அருந்ததி ராய் அன்று பேசிய பேச்சின் முடிவில் சொன்ன வார்த்தைகள் என்னைத் தலைகுனிய வைத்தன. கண்ணீர் விட வைத்தன. அவரின் வார்த்தைகளில் இருக்கும் உண்மை என்னை கிழித்து போட்டது. மிகுந்த வேதனைகளுக்கு உட்பட்டேன். |
சமிபத்தில் எழுத்தாளர் ‘அருந்ததி ராய்’ அவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. சென்னைக்கு வந்திருந்தார்கள். அங்கே மத்திய இந்தியாவில் தண்டகாரண்யா காடுகளில் ‘பச்சை வேட்டை’ என்ற பெயரில் அரசாங்கம் பழங்குடினரை படுகொலைச்செய்து வருவதைக் கண்டித்து நடந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார்.
அந்த மாவோயிஸ்டுகளின் பிடியில் இருந்து மக்களை காப்பதற்காகத்தான் அரசாங்கம் போராடி வருவதாகவும் அதன் காரணமாகவே இந்த ‘ ஆப்பரேஷன் கிரின் ஹண்ட்’ நடைபெறுவதாகவும் அரசும் ஊடகங்களும் சொல்லுகின்றன. நாமலும் ‘ஐய்யோ என்ன அநியாயம்’ என்பதாகவோ அல்லது ஒரு செய்தியாகவோ காதில் கேட்டுவிட்டு கடந்துப்போய் விடுகிறோம். அங்கே என்ன நடக்கிறது என்பதை பற்றி அறிய நாம் எந்த வித பிரயாத்தனமும் படுவதில்லை. அதன் போக்கில் ஊடங்களின் கத்தலிலால் நம் காதில் விழுவததுதான் நாம் அந்த பிரச்சனையினைப் பற்றி தெரிந்து வைத்திருப்பதெல்லாம். அதைப்பற்றி நாம் விவாதிப்பதோ கூடுதல் தகவல் தெரிந்துக்கொள்ள முயற்சிப்பதோ இல்லை, குறைந்தது உண்மை என்ன என்று கூட அறிந்துக்கொள்ள நாம் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த கட்டுரை அதை உங்களுக்கு சொல்லுவதின் நோக்கம் கொண்டதுமில்லை. அருந்ததி ராய் அன்று பேசிய பேச்சின் முடிவில் சொன்ன வார்த்தைகள் என்னைத் தலைகுனிய வைத்தன. கண்ணீர் விட வைத்தன. அவரின் வார்த்தைகளில் இருக்கும் உண்மை என்னை கிழித்து போட்டது. மிகுந்த வேதனைகளுக்கு உட்பட்டேன். நாம் என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் என்பதும், நம்மை சுற்றி இருக்கும் உலகத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்தால் கவலையும், ஏமாற்றமும், ஆதங்கமும், கோபமும் வருகிறது. நம் வாழ்க்கையின் பாதுகாப்பற்ற தன்மையும், கையாகாலத்தன்மையும் என்னை ஆற்றாமையில் தள்ளிவிட்டன
நமக்கு அந்தப் படுகொலைகளப்பற்றி தெரிந்ததெல்லாம், மாவோயிஸ்டுகள் கிராமப் பகுதிகளைப் பிடித்து வைத்துக்கொண்டு, மக்களை அவர்களின் இயல்பு வாழ்க்கை வாழவிடாமலும் அரசாங்கத்தின் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமலும் அட்டகாசங்கள் செய்வதாகவும், பாதுகாப்பு படையினரையும் காவல்துறையினரையும் கொல்வதாகவும் சமிபத்தில் கூட இரயிலைக் கவிழ்த்து பலப்பேரைக் கொன்றதாக அறிந்து வைத்திருக்கிறோம்.
தொடர்ந்து வாசிக்க வெட்கப்பட வேண்டியவர்கள்