தலைமுறை தலைமுறையாகவே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கடத்தப்படுகின்றன. மனித இனத்தின் வழிகாட்டியாகப் பெண்கள் இருந்த நிலைமாறி, இன்றைக்குப் பெண்ணை சகமனுஷியாகக்கூட கருதாத சமூகத்தில் நாம் வாழ்கிறோம். பெண்கள் எவ்வளவு சாதனைகளைப் புரிந்தாலும் அவர்களை அழகுப்பதுமையாக, அடிமையாக, நுகர்வுப் பொருளாகவே பார்க்கும் போக்கு ஆபத்தானது. இந்நிலை மாற வேண்டும் என்றால் சமூக மாற்றத்தினூடே தனிநபரின் மனமாற்றமும் முக்கியம்.
உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கடத்தப்படுகின்றன வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும் இத்தகைய வன்முறைகள் குறைந்ததாக இல்லை. இத்தகைய வன்முறைகளுள் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுபவையும், வெளியே தெரிய வருபவையும் மிகவும் சொற்பமானவையே. வெளியே வராதவையாகவும், சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படாதவையாகவும், மூடி மறைக்கப்படுபவைகளும் உள்ளவை மிக அதிகமானவைகளாகும். பெண்களுக்கெதிரான வன்முறைகளுள் பாலியல் வன்முறையும் பிரதான இடத்தை வகிக்கின்றது. பாலியல் குற்றங்கள் அரசு இராணுவம் அல்லது ஆயுதமேந்திய குழு பாலியல் பலாத்காரம் ஈடுபடுதல் அல்லது கட்டாயப்படுத்தல் போன்றவை போர் பாலியல் குற்றங்களுக்குள் அடங்குகின்றன.