பெண்களின் செயற்பாடுகளும் படைப்புத்திறனும் தொழில் நுட்பமும் இன்னும் ஆணதிகாரத்தின் பிடியில் தானுள்ளது. அவற்றை ஊடறுத்து இன்று பல பெண்கள் தமது எழுத்துதிறன் மூலமும் செயற்பாடுகளின் மூலமும் விழிப்புணர்வுகளை வெளிக்கொண்டு வருகின்றார்கள். அவர்களின் எழுத்துச் செயற்பாட்டுக்கு ஊடறு களம் அமைத்துக் கொடுக்க முயன்றது முயல்கிறது. |
இவ் வருடத்துடன் ஐந்தாவது ஆண்டில் நுழைகிறது ஊடறு.
ஊடறுவின் நோக்கத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பல நாடுகளிலிருந்தும் பல பெண் எழுத்தாளர்கள் ஊடறுவில் எழுதி வருகின்றார்கள் அது எமக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகின்றது. பல பரிமாணங்களிலிருந்தும் வெளிப்படும் பெண்களின் கருத்துக்கள், பெண்நிலை எழுத்துக்கள் என பெண்கள் எழுதுகின்ற எழுத்துக்களை வெளிக்கொணருவதே ஊடறுவின் நோக்கமாகும்.
பெண்களின் செயற்பாடுகளும் படைப்புத்திறனும் தொழில் நுட்பமும் இன்னும் ஆணதிகாரத்தின் பிடியில் தானுள்ளது. அவற்றை ஊடறுத்து இன்று பல பெண்கள் தமது எழுத்துதிறன் மூலமும் செயற்பாடுகளின் மூலமும் விழிப்புணர்வுகளை வெளிக்கொண்டு வருகின்றார்கள். அவர்களின் எழுத்துச் செயற்பாட்டுக்கு ஊடறு களம் அமைத்துக் கொடுக்க முயன்றது முயல்கிறது.இந்த ஐந்து வருட காலத்தில் ஊடறுவுக்குள் பல புதிய பெண் எழுத்தாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்
2006 ம் ஆண்டு ஊடறுவின் புது முயற்சியாக கவிஞர் பெண்ணியாவின் என் கவிதைக்கு எதிர்த்தல் என்று பெயர் வை என்ற அவரதுகவிதைத்தொகுதியை ஊடறு வெளியிட்டது.
|
2007 இல் இரு கவிதைத்தொகுதிகளை ஊடறு முலமாக வெளியிட்டிருந்தோம். ஊடறு இணையத்தளக் கவிஞைகளின் கவிதைகள் ஒருசேர தொகுக்கப்பட்டு “மை”யாக வெளியிடப்பட்டது. |
மலையகப்பெண்களின் கவிதைத்தொகுப்பான இசைபிழியப்பட்ட வீணை” தொகுதி. இது பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக மலயைகப் பெண் எழுத்து முயற்சிக்கு ஒரு உற்சாகத்தை வழங்கியது வழங்கியுள்ளது. |
2010 ம் ஆண்டு ஊடறுவின் வெளியீடாக சிவரமணியின் கவிதைகள் ஆங்கிலத்தில்
வெளியிடப்பட்டுள்ளது
இந்த 5 ஆண்டுகளுக்குள் ஊடறு இணையத்தளம் பல விதமான எழுத்துக்களை வெளிக்கொணர்ந்துள்ளது.
அத்துடன்
இலங்கையிலிருந்து செய்திகளை அனுப்பித்தரும் அதிரா, இந்தியாவிலிருந்து படைப்புக்களை அனுப்பித்தரும் யசோதா ஆகியோருக்கும் மற்றும் கணணி தொழில்நுட்ப பிரச்சினைகளில் ஊடறுவுக்கு பல வழிகளிலும் உதவிகளை அவ்வப்போது செய்து தருகின்ற ரவி(சுவிஸ்) , சிறி(நோர்வே) ஜீவன் (கனடா)ஆகியோருக்கும் படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும், எம்மை உற்சாகப்படுத்தும் நண்பர்களுக்கும் அனைவருக்கும் நன்றி.
editors: ranji (swiss) , theva (germany)
co-editors : uma (germany) , aazhiyal (australia)
www.http://udaru.blogdrive.com
Vallthukkal oodaru
ஊடறு .கொம்முக்கு எமது வாழ்த்துக்கள்
தொடர்ந்து சளைக்காமல் உங்கள் பணியை செய்ய வாழ்த்துகிறோம்.
மலையகத்திலிருந்து உங்கள் அபிமானிகள்
ஊடறுவுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஊடறுவை மாமிகளின் தளம் என விளித்த பலர் இன்று காணாமல் போய்விட்டார்கள் ஏன் என்றால் இந்த சமூகத்திற்கு அருகதையற்றவர்கள் அவர்கள் என தாமாகவே காட்டிக்கொண்டவர்கள். ஊடறு அதனது பணியை சரியாக நிதைனமாக செய்து வருகின்றது. புலம்பெயர் வாழ்வியலின் வேலைப்பளுவிற்கிடையிலும் உங்கள் பணியை விடாது செய்து வருவதையிட்டு மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து உங்கள் பணியை செய்ய எனது வாழ்த்துக்கள் எனது பங்களிப்பு ஊடறுவுக்கும் என்றும் இருக்கும் என çறிக்கொள்ள விரும்புகிறேன். அமெரிக்காவிலிருந்து ராதிகா
Vallthukkal oodaru