பாதைகளின் குறுக்காய்
|
மே 19 சிவரமணி என்ற பெரும் கவிஞர் இறந்த நாள்
யுத்தகால இரவொன்றின் நெருக்குதலிருந்து சில வரிகள்;
யுத்தகால
இரவொன்றின் நெருக்குதல்
பாதைகளின் குறுக்காய்
வீசப்படும்ஒவ்வொரு குருதிதோய்நத
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த
அவர்களின் சிரிப்பும் மீதாய்
உடைந்து விழும் மதிற் சுவர்களும்…
நட்சத்திரம் நிறைந்த இரவில்
அதன் அமைதியை உடைத்து வெடித்த
ஒரு தனித்த துப்பாக்கிச் சன்னத்தின் ஓசை
எல்லாக் குழந்தைகளினதும் அர்த்தத்தை
இல்லாதொழித்தது. ….
சிவரமணியின் இன்னும் ஒரு கவிதையிலிருந்து
எங்கள் கைகளை ஒன்றாகப் பிணைத்துக்கொள்வோம்
நேற்று நடந்து விட்ட சோகங்களை மறக்கவல்ல
நாங்கள் செய்து விட்ட குற்றங்களை மூட அல்ல
நேற்று நடந்தவை
முடிந்தவையாகட்டும்
நடக்கப்போபவை
ஏம்மால் ஆகட்டும்
நாங்களோ கரங்களைப்
பிணைத்துக் கொள்வோம்…