தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

ஆனால் இரத்த உறவுகள் மூலம் ஏற்பட முடியாத சில உறவுகளையும் காலத்துக்குக் காலம் இறைவன் நமக்கு காட்டிக் கொண்டுதான் இருக்கின்றான். அதில் யார்இ யார் இதயத்தை கட்டிப் போடுகின்றார்கள்இ யார்இ யார் வெட்டிப் போடுகின்றார்கள் என்பதையும் உணர்த்திவிடுகின்றான். இவ்வாறு என் நினைவுக் குதிரை கடிவாளமில்லாமல் சுற்றித் திரிந்தது.
உயர்தரம் முடித்துவிட்டு இருந்த காலப்பகுதியில் பத்திரிகைகளோடு எனக்கிருந்த தொடர்பு இன்னும் இறுக்கமானது. வாசிப்பின் தீவிரத்தில் நானும் ஏதாவது எழுத வேண்டும் என்ற நிலைக்கு ஆளானேன். கவிதைகளை எழுதியனுப்பினேன். அந்த சந்தர்ப்பத்தில்தான் என் கவிதை பத்திரிகையில் பிரசுரமாகியதைத் தொடர்ந்து எனக்கொரு பாராட்டுக் கடிதம் வந்திருந்தது. அனுப்பியருந்தவர் நஸீரா தாத்தா. நாமிருவரும் காலப்போக்கில் நல்ல நண்பிகளானோம். கிட்டத்தட்ட என் தாயைப் போலவே என்னுடன் அதிக நேசம் கொண்டுள்ள அவர் தன் சொந்த சகோதரிகளைப் போல என்னுடன் நடந்து கொள்ளும் விதம் இன்றுவரை தொடர்ந்திருக்கின்றது. இவ்வாறு இருந்து தலைநகருக்கு நான் வந்துவிட்டேன்.
தலைநகருக்கு வந்த ஆரம்பத்தில் ஒரு நிறுவனத்துக்கு புதிதாக வேலைக்குச் சென்றிருந்தேன். அந்த நிறுவனத்தில் உள்ள அதிகாரியும்இ அவரது மகனும் முதலில் நன்றாகத்தான் இருந்தார்கள். ஆனால் காலம் செல்லச் செல்ல அவர்களின் அதிகாரத் தொனியும்இ முதலாளித்துவக் குணமும் எல்லா ஊழியர்களையும் பாதித்தது. அதைவிடவும் பாதித்த விடயம் என்னவென்றால் எம்முடனேயே வேலை செய்யும் ஓரிரு பெண்கள் எம்மை துவேசக் கண்கொண்டு பார்ப்பதாகும்.
காலை வணக்கம் சொன்னபோதுகளில் கூட அவர்கள் அதற்கு மறுமொழி கூறாமல் மறுபுறம் திரும்பிக் கொண்டு செல்லும் ஒரு மனநிலையிலேயே காணப்பட்டார்கள். சில நேரங்களில் அவர்களின் பிரத்தியேக வேலைகளைச் செய்து தருமாறு கூறுவது கூட பரவாயில்லை. ஆனால் அதையுங் கூட ஆணவத்துடனும்இ அதிகாரத்துடனும் சொல்லும்தொனி அறவும் பிடிப்பதில்லை. எனினும் அவர்கள் சொல்வதை செய்யாத தருணத்தில் மேலாதிகாரியின் கோபத்துக்கு நாம் ஆளாக வேண்டிய அளவுக்கு அவர்களது அரசாட்சி அமையப் பெற்றிருந்தது.
பதினொரு மணியளவில் அலுவலகம் வந்துஇ நான்கு மணியாவதற்கு முதலே அவர்கள் செல்வதும்இ மற்றவர்கள் ஒன்பது மணிக்குப் போனாலும்இ ஐந்து மணிக்கு முதல் விடாததும் எமது அலுவலக ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மனக் கசப்பை ஏற்படுத்தியிருந்தது.
சில மாதங்களில் பிறிதொரு நிறுவனத்தில் வேலை செய்யும் அனுபவம் எனக்கு நேர்ந்தது. அதில் நம்முடனிருந்த ஊழியர்கள் மிகவும் நல்லவர்கள். உதவி செய்யத் தயங்காதவர்கள். ஆனால் அந்த அலுவலகத்தின் மேலதிகாரி ஒரு முரட்டுச் சுபாவம். ஒரு நிமிடம் பிந்தினாலும் கேவலமான பேச்சை பேசக்கூடியளவுக்கு அவரது பண்பின்மை காணப்பட்டது. நல்ல வேளையாக நமது கிளை அலுவலகத்துக்கு அவர் அதிகம் வருவதில்லையாதலால் எமது கிளையைச் சேர்;ந்த ஊழியர்கள் தப்பிய சந்தர்ப்பங்கள் பல.
எனக்கு நன்கு தெரிந்த ஒரு சகோதரி பிரபலமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அந்த நிறுவனத்தின் அதிகாரிஇ சாதாரண தரம் கூட சித்தியடையாதவர். ஆனால் அவரது பண பலமும்இ ஆங்கிலப் புலமையும் அவரை பணக்காரனாக மாற்றியிருக்கின்றது. அடிப்படையில் அவர் கொஞ்சம் பரவாயில்லை என்றபோதும்இ அந்தச் சகோதரிக்கு சிக்கன்குன்யா காய்ச்சல் ஏற்பட்டு சுகவீனமாக இருந்த தருணத்தில் அவருக:கு கால் வீங்கி நடக்க முடியாத நிலையில் இருந்தார்.
வைத்தியர்கள் குநைதது மூன்று மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என பணித்திருந்தனர். ஆனால் அந்த சகோதரி வெறுமனே இரண்டு கிழமைகள் மாத்திரமே விடுமுறை எடுத்திருந்தார். விடுமுறை எடுத்த காரணத்தால் சகோதரியை பலவந்தமாக வேலையை விட்டு நீக்கியதும்இ சம்பளக் காசில் மூவாயிரம் ரூபாவை கழித்துக் கொடுத்ததும் ஒரு சோக நிகழ்வாக இன்னும் பதிந்திருக்கின்றது.
இப்படியிருக்க இறைவனின் நாட்டத்தினாலும்இ எனது பெற்றோர்இ சகோதரர்கள்இ ஆசிரியர்கள்இ உறவினர்களின் பிரார்த்தனையாலும் ஒரு நல்ல மனிதரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. உலகத் தலைவர்களில் முக்கியமான ஒருவரின் பெயரைக் கொண்டிருக்கும் அவர்இ ஒரு தலைவராகவே என் மனதில் ஆசனமிட்டு அமர்;ந்திருக்கின்றார். பிறரது வேலைகளைத் தனது சொந்த வேலையாகக் கருதி தொழிற்படும் நல்மனம் படைத்த அந்த அண்ணாஇ எனது பிரச்சனைகளை விளங்கிய பின்இ தனது நிறுவனத்தில் உள்ள தொழில் இடைவெளியை நிரப்புவதற்காக என்னை தேர்ந்தெடுக்க உதவினார். அவருக்கு என் இதய நன்றிகள் என்றென்றும் உரித்தாகும்.
நான் இதுவரை வேலை செய்த இடங்களை விடவும் இது நல்லதொரு இடம் என்பதில் என்னைவிட எனது பெற்றோருக்கு மகிழ்ச்சி அதிகம். அங்கு முதன்முதலாக நான் நேர்முகத் தேர்வுக்காக சென்றபோது அங்கே இருந்த ஒரு யுவதி சிநேகபூர்வமாக என்னைப் பார்த்துச் சிரித்தாள். பதிலுக்கு நானும் சிரித்தேன். நேர்முகத் தேர்வு நடந்து முடிந்த பிறகு என்னிடம் வந்து எனது பெயர்இ ஊர் என்ன என்பவற்றை பாசத்துடன் வினவியபோது எனது மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது. பெரும்பான்மை இனத்தைச் சேர்;ந்தவர்கள் பலரும் இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் எந்தவித பாகுபாடும் இன்றி ஆழ் மனசிலிருந்தே புன்னகைத்தார்கள். இந்த நிறுவனத்தில் என்னை தொழிலுக்கு இணைத்துக்கொள்ள வேண்டும் என்று நான் மனதாரப் பிரார்த்தித்தேன்.
இரண்டு கிழமைகளின் பின்னர் அந்த நிறுவனதிலிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. நான் தெரிவு செய்யப்பட்டுவிட்டதாக அவர்கள் அறிவித்தார்கள். பின்னர் இறைவனைப் புகழ்ந்துவிட்டுஇ பெற்றோரின் ஆசியுடனும்இ நஸீரா தாத்தா மற்றும் நான் முதல் கூறிய அண்ணாவின் வாழ்த்துக்களுடனும் புதிய வேலைக்குச் சேர்ந்தேன்.
எனக்கு தரப்பட்ட அலுவலக மேசைக்கு சென்றபோது எல்லோரும் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நானும் கணினி முன்னால் அமர்ந்து எனக்கான வேலையை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். நான் நேர்முகத்தேர்வுக்கு சென்றிருந்தபோது சிரித்த அந்தப் பெண்இ கொஞ்ச நேரத்தில் வந்து எனக்கான வேலையை தந்துவிட்டு அதைச் செய்யுமாறு அன்புடன் சொல்லிவிட்டுப் போனாள். அவளருகே இருந்த இன்னொரு சின்னப் பெண்இ என்னை அக்கா என்று அன்புடன் அழைத்துப் பேசினாள். எனக்கு இதயம் இலேசாகியது. இதுவரை முன்னர் வேலை செய்த அலுவலகங்களில் பட்ட துன்பங்களுக்கு வடிகால் கிடைத்துவிட்ட பிரம்மை எனக்குத் தோன்றியது.
அறையின் இன்னொரு பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண்இ பகலுணவு நேரத்தல் என்னருகில் வந்து எனது பெயரை விசாரித்தார். பிறகு மற்றவர்களிடம் பகலைக்கு என்னை சிற்றுண்டிச் சாலைக்கு அழைத்துப் போகுமாறு சொல்லிவிட்டு அகன்று சென்றார். அந்த அறைக்கு தலைவியாக செயற்பட்டு எல்லோரையும் பாசத்தால் கட்டிப்போட்டு கண்காணிக்கும் அந்த அக்காஇ அகன்று அப்பால் சென்ற பின்னாலும் அவரது அன்புத் தொனி நிறைய நேரம் என்னை மகிழ்ச்சியிலாழ்த்தியது.
நான் சாப்பிட்டால் என்ன? சர்பபிடாவிட்டால் என்ன என்ற எண்ணம் சிறிதுமின்றி என்னை அவரது தங்கையாகவே எண்ணிய அந்த உரிமை எனக்கு சந்தோசத்தைத் தந்தது. இங்கு எனக்குக் கிடைத்த மூன்று பேருமே மிகவும் நல்லவர்கள்.
இன்னொருநாள் எனக்கு வேலை அதிகமாக இருந்தபோது அந்த அக்கா தானே என்னிடம் வந்து வேலையைப் பகிர்ந்து கொண்டார். வேறு யாரும் அவ்வாறு செய்ய மாட்டார்கள். தனக்கிருக்கும் வேலையை தமக்கு கீழிருப்பவர்களுக்கு சுமத்திவிட்டுஇ தொலைபேசியில் அரட்டை அடிப்பார்கள். அக்கா அப்படியில்லை. எல்லோரையும் சமமாகவே மதிப்பார். அக்காவின் வெள்ளை மனம் நன்கு பளிச்சிட்டது. அதுபோல தாம் கொண்டு வரும் டொபிஇ பிஸ்கட் முதலானவற்றைக்கூட எல்லோருக்கும் கொடுத்து அவர்கள் பகிர்ந்துண்ணும் பழக்கம் என்னைக் கவர்ந்தது. ஒருநாள் அக்கா விடுமுறை எடுத்துக்கொண்டார். அக்கா இல்லாத அலுவலகம் நம் எல்லோருக்கும் தண்ணீரில்லாத சோலை போல் இருந்தது.
எமது மேலாதிகாரியாகத் திகழும் மெடம் அவர்களும் மிகவும் மென் மனது படைத்தவர். கல்வி நடவடிக்கைகளுக்காக உதவி செய்யக் கூடியவர் என்றும் நான் அறிந்தேன். முன்பெல்லாம் ஒன்பது மணிக்கு அலுவலகம் செல்லப் பிடிக்காதுஇ ஆனால் இப்போது ஏழு மணிக்கே செல்லப் பிடிக்கிறது. வாழ்க்கை இனிக்கிறது. இறைவனுக்கே புகழனைத்தும்!!!
– தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா