:: மறக்கப்பட்ட என் முகம் ! ::

சூரியகலா கருணாமூர்த்தி (மலேசியா)

என்றோ
பாதியாக கிழிக்கப்பட்ட
என் முகத்தின் – மீதியை
தேடினேன்.

முன்பே ஒரு முறை
அந்த மீதியும் இரண்டாய் கிழிக்கப்பட்டு
பின் – பலவந்தமாக அது
தொலைக்கப் பட்டதாக
கூறினார்கள் …

காணமல் போயிருந்த அந்த பாதி முகம்
திரும்பி வந்தாலும்
அது வேறொருவரின்
சாயலில் தான் இருக்கும்.

நான் பார்ப்பதை … காணாமல்
நான் சொல்வதை …பேசாமல்
நான் உணருவதை … அறியாமல்

அந்த முகம் … என் சாயல் அற்று
புது அடையாளம் பெற்றிருக்கும்.

இன்னும் அழகாக
இன்னும் இளமையாக
இன்னும் புதுமையாக
இன்னும் கவர்ச்சியாக – அல்ல
இதில்
எதுவுமே இல்லாமல் …

என் முகம்
என்னிடமே – தன்
அடையாளத்தைத்
தொலைத்திருக்கும் …!!!
-மறக்கப்பட்ட என் முகம்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *